இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

மாலைநேர விரிவான செய்திகள் தமிழ்நாடு இந்தியா உலகம்

advertisement by google

????விண்மீண்தீநியூஸ் ??? ?: ?⚪ முதல்வர் பழனிசாமி தனது அடுத்த வெளிநாட்டு சுற்றுப்பயணமாக இஸ்ரேல் செல்கிறார்

advertisement by google

நீர்மேலாண்மைக்காக இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளதாக சென்னையில் முதல்வர் பழனிசாமி பேட்டி
[9/10, 3:43 PM] விண்மீண்தீநியூஸ்: ?⚪சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை :

advertisement by google

சவரனுக்கு ரூ 112 குறைந்து, கிராம் ரூ 3,645-க்கும், சவரன் ரூ 29,160-க்கு விற்பனை.
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ?அரசியல் சூழ்ச்சி ??

advertisement by google

உலக தற்கொலை தடுப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தற்கொலை எண்ணம் தோன்றினால் அதலிருந்து எவ்வாறு விடுபடுவது? என்பது குறித்த விழிப்புணர்வு

advertisement by google

கூர்மையான வாளைவிட கடுமையான சொல் உயிரை பறிக்கும் திறன் வாய்ந்தது. அப்படி உணர்ச்சிகளின் சாராம்சங்களில் சிக்கிக் கொண்டு, தற்கொலை முடிவை தேர்ந்தெடுப்பவர்களை தடுக்கும் நோக்கில், செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக தற்கொலைத் தடுப்பு சங்கம் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. ”எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைப்போம் தற்கொலையை தடுப்போம்” என்பது இந்த ஆண்டிற்கான கொள்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது.உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் மக்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இன்றும் 40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கின்றார். தமிழகத்தை பொருத்தவரை தற்கொலை விகிதம் 11 புள்ளி 8 சதவீதமாக உள்ளது. 15 முதல் 30 வயதிற்குள்ளானவர்களுக்கு பரவலாக ஏற்படும் மனச்சோர்வு, தேவையற்ற குழப்பம், சமூகத்தில் பிரச்சனைகளை கண்டு பயப்படுவது, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனப்பான்மையை இழந்தவர்களுக்கு தற்கொலை எண்ணமே முதலில் தோன்றுவதாக அறிவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\r\n\r\nதற்கொலை உணர்வோடு யாரேனும் இருக்கும்போதோ அல்லது தங்களது உணர்வை வெளிப்படுத்தும்போதோ அவர்களை அலட்சியப்படுத்தாமல், மருத்துவர் உதவியுடன் அல்லது பரிந்துரையாளர்கள் மூலமாக உரிய சிகிச்சையளித்து அவர்களின் மனதை மாற்ற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.\r\n\r\nவாழ்வில் பிரச்சனைகள் இல்லாத மனிதரே இல்லை, அதை கல் போல் எண்ணி கண்களுக்கு அருகில் வைத்து பார்க்கும் போது அது உலகத்தையே மறைத்துவிடும், அதையே சற்று தள்ளிவைத்து பாருங்கள் அது என்ன என்பது நம் மனதிற்கு விளங்கும். அதை தூக்கி கால்களுக்கு கீழே எரிந்துவிடுங்கள் கஷ்டங்களையும் கவலைகளையும் மறந்து சிரிப்புடன் சிறப்பாக வாழ்வீர்கள்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

advertisement by google

தலைமை நீதிபதியுடன் அமர்ந்து வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி துரைசாமிக்கு தனியாக வழக்குகள் ஒதுக்கீடு

advertisement by google

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்துள்ள நிலையில் அறிவிப்பு

advertisement by google

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வுக்கான வழக்கு பட்டியல் இன்று
வெளியிடப்படவில்லை

தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க வேண்டிய அவசர வழக்குகளை 2.வது நீதிபதி வினீத் கோத்தாரி அமர்வு விசாரிக்கும்
தலைமை பதிவாளர் அறிவிப்பு

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: தந்தைபெரியார்திராவிடர்_கழகம்

பணம் தராத திருப்பூர் வணிகர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி பயங்கரவாதிகளை கண்டித்தும்,அந்த பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் !!

தலைமை-

கோவை இராமகிருட்டிணன்
பொதுச்செயலாளர்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்

12/09/2019,
மாலை-5 மணி அளவில்,
மாநகராட்சி அலுவலகம் அருகில்,
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

சமூக வலைதளங்களில் யாரோ பதிவு செய்யும் தகவல்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது டிடிவி தினகரன்

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறோம் இஸ்ரோ

விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை சந்திரயான் 2 விண்கலம் கண்டுபிடித்துள்ளது இஸ்ரோ

விக்ரம் லேண்டருடன் இதுவரை தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை இஸ்ரோ

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ???மேல கை வைத்து பேசுகிறார்.. வெளியே சொன்னால் டிசி தந்துடுவேன்னு மிரட்டுகிறார்” என்று பள்ளி மாணவிகள் பெற்றோரிடம் முறையிட.. பெற்றோர்களோ பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் அருகே உள்ளது பூச்சூர் கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 140 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.இந்நிலையில், தலைமையாசிரியர் சுப்பிரமணி மீதுதான் இப்போது புகார் எழுந்துள்ளது. இவருக்கு வயது 53 ஆகிறது.பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் சுப்பிரமணி தகாத முறையில் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. மாணவிகளின் மேல் கை வைத்து பேசுகிறார் என்றும், கை வைக்க வேண்டாம் என்று சொன்னாலும் சுப்பிரமணி கேட்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. ஸ்கூலில் நடப்பதை பற்றி வீட்டில் சொன்னால், டிசி கொடுத்து அனுப்பிவிடுவதாக மிரட்டுகிறாராம் சுப்பிரமணி. சென்னை திரும்பினார் முதல்வர்.. வந்ததும் வராததுமாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி இதனால் மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர், பள்ளிக்கு வந்து, தலைமையாசிரியர் சுப்பிரமணியை எச்சரித்தும் சென்றுள்ளனர். இருந்தாலும் மீண்டும் அதேபோல மாணவிகளிடம் சுப்பிரமணி நடந்து கொண்டுள்ளார். இதை கேள்விப்பட்ட பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டுள்ள விவகாரம் அறிந்து விரைந்து வந்த போலீசார், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனாலும், சுப்பிரமணியை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர். இதையடுத்து, பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்திய போலீசார், ஏரியூர் ஸ்டேஷனுக்கு சுப்பிரமணியனை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 112 குறைந்து, கிராம் ரூ 3,645-க்கும், சவரன் ரூ 29,160-க்கு விற்பனை

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ?அரசியல் சூழ்ச்சி ??

எடப்பாடியின் அடுத்த சுற்றுப்பயணம் எங்கே தெரியுமா ? அவரே வெளியிட்ட தகவல்

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

இந்த வெளிநாட்டு பயணத்தில் அவர் முதலாக இங்கிலாந்து சென்றார். அங்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையை சென்னையில் தொடங்குவதற்கான சில ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தினார்.அதைத் தொடர்ந்து அமெரிக்கா சென்ற முதலமைச்சர் பழனிசாமி, அங்கு தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்பு பிரதிநிதிகளையும் சந்தித்தார். பின்னர் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இறுதியாக துபாய் சென்றடைந்தார். அங்கும் அவர் பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது குறித்து பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்தினார்.இந்நிலையில் தனது 13 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை 3 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்து நீர் மேலாண்மை குறித்து தெரிந்து கொள்வதற்காக விரைவில் இஸ்ரேல் செல்லவுள்ளதாக தெரிவித்தார். நீர் மேம்பாடு, கழிவு நீரை எப்படி விவசாயத்துக்கு பயன்படுத்துவது? விவசாயம் தொடர்பான பல விஷங்களை தெரிந்து கொண்டு வந்து அதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் போவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®®எல்லோரும் நம்முடன் இருக்கிறார்கள், ஒரு சிலர் வெளியே செல்வதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை

துரோகம் செய்தவர்களை எதிர்த்து போராடி, அம்மா வழிநடத்திய கட்சியை மீட்பதே அமமுகவின் நோக்கம்

  • கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் உரை

®®ஊடகதளம்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®®அமமுக வளர்ச்சி அடைந்துள்ளது; பழுத்த மரம் கல்லடி படும் என்பதுபோல் நம்மை பற்றி விமர்சனங்கள் வருகின்றன

  • டிடிவி தினகரன்

®®ஊடகதளம்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®®துரோகம் செய்தவர்களை எதிர்த்து போராடி, அம்மா வழிநடத்திய கட்சியை மீட்பதே அமமுகவின் நோக்கம்

  • கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் உரை

®®ஊடகதளம்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ? நேரலை செய்திகள்

?14 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பியுள்ள முதல்வர் பழனிசாமியை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் சந்தித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ?அரசியல் சூழ்ச்சி ??

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சல் பாச்லெட் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அதன் தலைவர் மிச்சல் பாச்லெட், ஜம்மு காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரச்சனைகள் குறித்து குறிப்பிட்டிருந்தார்.ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப வேண்டும்; மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை பிரச்சனை குறித்து எந்த ஒரு கருத்தையும் மிச்சல் பாச்லெட் குறிப்பிடவில்லை. இலங்கையில் யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் கதி என்ன? போர்க்குற்றவாளி ஒருவரையே இலங்கை ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சர்ச்சை உள்ளிட்டவை குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத் தலைவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இம்ரான்கான் கட்சி மாஜி எம்.எல்.ஏ. குடும்பத்துடன் இந்தியாவில் அரசியல் அடைக்கலம் கோருகிறார்! இது உலகத் தமிழர்களை மட்டுமல்ல மனித உரிமை ஆர்வலர்களையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே இலங்கை ராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டது குறித்து மிச்சல் பாச்லெட் கவலை தெரிவித்திருந்தார்.ஆனால் தற்போதைய கூட்டத்தில் அவர் எதுவுமே குறிப்பிடாதது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®® பூலாம்பட்டி காவிரியில் 3வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தம் பயணிகள் கடும் அவதி

இடைப்பாடி, செப்.10: காவிரியில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், பூலாம்பட்டி காவிரியில் நேற்று 3வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியுள்ள நிலையில், அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நேற்றிரவு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திறப்பு அதிகரிப்பால், சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பகுதியில், காவிரியின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்கிறது. இதனால், பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பூலாம்பட்டி-ஈரோடு மாவட்டம் நெறிஞ்சிப்பேட்டை இடையே, காவிரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நேற்று 3வது நாளாக போக்குவரத்து நடைபெறாததால், படகுகள் அனைத்தும் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், இரு மார்க்கத்திலும் சுமார் 3 கி.மீ., தொலைவிற்கு நடந்தும், டூவீலர்களிலும் சென்று வருகின்றனர். மேலும், காவிரி கரையில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

®®ஊடகதளம்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®® தந்தை கண் முன்பே மாணவியை மறித்து பாலியல் தொந்தரவு; 2 பேர் அதிரடி கைது

மேச்சேரி, செப்.10: தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டியப்பட்டியைச் சேர்ந்த 19 வயது மாணவி, திருச்செங்கோடு அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், நேற்று தனது தந்தையுடன் டூவீலரில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தாரமங்கலம் நோக்கி வந்தபோது, மற்றொரு டூவீலரில் பின்தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள் திடீரென வழிமறித்தனர். பின்னர், தந்தையின் கண் முன்பே மாணவியின் துப்பட்டா மற்றும் ஜடையை பிடித்து இழுத்து, சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதனை தட்டிக்கேட்ட மாணவியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், 2 பேரையும் மடக்கி பிடித்து, தாரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் மோகன்ராஜ்(21), கந்தசாமி மகன் சக்திவேல்(23) என்பது தெரியவந்தது. பின்னர், அவர்களை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

®®ஊடகதளம்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®® கெங்கவல்லி பகுதியில் கள்ளச்சாராய வேட்டை 3 பேர் அதிரடி கைது

கெங்கவல்லி, செப்.10: கெங்கவல்லி பகுதியில் கள்ளச்சாராய வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கெங்கவல்லி மற்றும் சுற்று வட்டார பகுதியில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று சாத்தப்பாடியில் போலீசார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். அப்போது, கள்ளச்சாராயம் விற்றதாக ஜீவா(24), திலீப்(24) மற்றும் சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களில், திலீப், ஜீவா ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்புதான ஜாமீனில் வெளிவந்தனர். இந்நிலையில், இருவரும் மீண்டும் சாராயம் விற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்

®®ஊடகதளம்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®® இடைப்பாடி ஆர்சி ரெட்டியூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திருவிழா திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

சேலம், செப்.10: இடைப்பாடி ஆர்சி ரெட்டியூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திருவிழாவில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனர். சேலம் மறை மாவட்ட இடைப்பாடி பங்குக்கு உட்பட்ட ஆர்சி ரெட்டியூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி சிறப்பு வழிபாடு, சிறு தேர் பவனி, நவநாள் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து அன்னையின் ஆடம்பர தேர் பவனி மற்றும் கூட்டுத்திருப்பலி சேலம் சிறுமலர் மெட்ரிக் பள்ளி முதல்வர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. சிறப்பு மறையுறை நற்செய்தியை புனித தெரசாள் தொழிற்பயிற்சி நிலைய மேலாளர் ஆசீர்வாதம் வழங்கினார். முன்னதாக சபை மக்கள் மங்கல ஆராத்தி எடுத்து குருக்களை வரவேற்றனர். ஏற்பாடுகளை பங்கு தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். அன்னையின் தேர் பவனி ஆர்சி ரெட்டியூர் முழுவதும் வலம் வந்தது. இந்த ஊர்வலத்தின்போது ஏராளமான கிறிஸ்தவர்கள் அன்னையை போற்றி பாடல்களை பாடியவாறு சென்றனர்.

®®ஊடகதளம்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®® அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள்

சேலம், செப்.10: சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய ஊட்டச்சத்து மாதமாக, செப்டம்பர் மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு துறைகள் சார்பில், நடப்பாண்டு பல விழிப்புணர்வு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சேலம் மாவட்டத்தில், பள்ளி மாணவர்களிடம் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஓவியம், கதை சொல்லுதல், கட்டுரை எழுதுதல், ஸ்லோகம் எழுதுதல், கவிதை எழுதுதல், பேச்சுப்போட்டி, ரங்கோலி மற்றும் சமையல் போட்டிகளை வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு நடத்த வேண்டும். பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, வட்டார அளவில் போட்டிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம், பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நாடகம், பொம்மலாட்டம் போன்றவற்றை நடத்த வேண்டும். பள்ளி சுற்றுச்சுவர்களில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சார்ந்த வாசகங்களை எழுதுவதுடன், மாதம் முழுவதும் ஊட்டச்சத்து சார்ந்த உறுதிமொழியை காலை வழிபாட்டின் போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏற்க வேண்டும். மேற்கண்ட நிகழ்வுகளின் புகைப்படங்களை, இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சிஇஓ கணேஷ்மூர்த்தி, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

®®ஊடகதளம்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®® கெங்கவல்லியில் நேற்றிரவு மணல் கடத்தல் கும்பல் கோஷ்டி மோதல் போலீஸ் குவிப்பால் பரபரப்பு

கெங்கவல்லி, செப்.10: கெங்கவல்லியில், நேற்றிரவு மணல் கடத்தல் கும்பலுக்கிடையே கோஷ்டி மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் மணல் மற்றும் செம்மண் எடுப்பது
தொடர்பாக 74.கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர்(49), கடம்பூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(35) ஆகியோருக்கிடையே பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், ஏரியில் எடுக்கும் மணலை கொட்டி வைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு கெங்கவல்லியில் இருந்து மணிகண்டன் தனது டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஜெயசங்கர் மற்றும் குமார், வெங்கடேஷ் உள்ளிட்டோர் வழிமறித்தி கத்தியை காண்பித்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிய மணிகண்டன் 10 பேர் கும்பலுடன் கெங்கவல்லி பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு விரைந்தார்.

இதனைக்கண்டு அங்கிருந்த ஜெயசங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். பின்னர், ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த களேபரத்தால் பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த கதவலின்பேரில், கெங்கவல்லி போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகர் மற்றும் தலைமை காவலர் கணேசன் தலைமையிலான போலீசார் இருதரப்பினரையும் விலக்கி விட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மணிகண்டனை சிகிச்சைக்காக கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, ஜெயசங்கர் துரத்திச்சென்று, மீண்டும் கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

®®ஊடகதளம்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®®ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்த வேண்டும் மதிமுக வலியுறுத்தல்

கெங்கவல்லி, செப்.10: ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்தும் வகையில் அரசு அறிவிப்பு வெளியிட வேண்டுமென மதிமுக வலியுறுத்தியுள்ளது. தலைவாசல் ஒன்றிய மதிமுக செயற்குழு கூட்டம் வீரகனூரில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் கோபால்ராசு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கலைவாணி, செல்வராசு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்தும் வகையில் அரசு அறிவிப்பு வெளியிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மேலும், காவிரி உபரிநீரை வசிஷ்ட நதி மற்றும் சுவேத நதியில் திருப்பி விட்டு விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சீனிவாசன், ஜெயராமன், சுரேஷ் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குபேரன் நன்றி கூறினார்.

®®ஊடகதளம்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®®ஆத்தூர்-பெரம்பலூர் ரயில் பாதை திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் திமுக எம்.பி. கோரிக்கை

ஆத்தூர், செப்.10: ஆத்தூர்- பெரம்பலூர் ரயில் பாதை திட்டத்தை உடனே செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென தென்னக ரயில்வே பொது மேலாளரிடம், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. கவுதம சிகாமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் உள்ள தென்னக ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில், நேற்று சென்னை, சேலம் ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட எம்பிக்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி தொகுதி எம்பி கவுதம சிகாமணி கலந்து கொண்டு, தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு ரயில்வே பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மந்த கதியில் நடந்து வருகிறது. இதனை விரைந்து முடித்து, ரயில் போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னசேலம் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறையை நவீன வசதிகளுடன் கூடிய வகையில் மாற்றி அமைக்க வேண்டும். சின்னசேலம் மற்றும் மேல்நாரியப்பனூர், மின்னாம்பள்ளி, எருமாபாளையம், அயோத்தியாபட்டணம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டுகளை அகற்றி விட்டு, மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். சென்னை- சேலம் மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள், தலைவாசல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில், பயணிகள் ரயில்கள் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் ரயில்வே துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். ஆத்தூரில் இருந்து பெரம்பலூர் வரை, ரயில் பாதை அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின் அந்த திட்டம் கண்டுகொள்ளப்படவில்லை. பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், வாழப்பாடி ரயில் நிலையங்களில் நடைபாதை உயரத்தை அதிகப்படுத்த வேண்டும். ஏத்தாப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். விருத்தாச்சலம்-சேலம் பயணிகள் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகளை இணைக்க வேண்டும். இவ்வாறு தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

®®ஊடகதளம்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®®வீரகனூர் பகுதியில் பாக்கெட் சாராயம் விற்பனை ஜோர்

கெங்கவல்லி, செப்.10: வீரகனூர் பேரூராட்சி பகுதியில், பாக்கெட் சாராயம் விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீரகனூர் அருகே ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் அருகில் எல்லையம்மன் பின்புறம் உள்ள ஓடை பகுதியில், பட்டப்பகலில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் மெத்தனப்போக்குடன் உள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். இரவு நேரத்தில் சாராய பாக்கெட்டுகளுடன் அங்குள்ள பள்ளி வளாகத்திற்குள் நுழையும் குடிமகன்கள், விடிய விடிய குடித்து கும்மாளமிடுவதும், காலி பாக்கெட்டுகளை அங்கேயே வீசி விட்டு செல்வதும் வழக்கமாக உள்ளது. இதனைக்கண்டு காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது. கெங்கவல்லி பகுதியில் சாராய வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், அருகே உள்ள வீரகனூரில் கள்ளச்சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்து வருவது அதிகரித்துள்ளது. இதற்காக தலைவாசல் பகுதியில் இருந்து தினசரி லிட்டர் லிட்டராக சாராயம் சப்ளை செய்யப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதனை பாக்கெட்டுகளில் அடைத்து டோர் டெலிவரி செய்து வருவதாகவும் கூறுகின்றனர். எனவே, கள்ளச்சாராய சப்ளையை கட்டுப்படுத்தி, விற்பனையை தடுத்து நிறுத்தும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

®®ஊடகதளம்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®® கெங்கவல்லியில் கைலாசநாதர் கோயில்

கும்பாபிஷேக விழாகெங்கவல்லி, செப்.5:கெங்கவல்லி ஸ்வேத நதிக்கரையில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கடந்த 3ம் தேதி கணபதி பூஜையுடன் முதல் கால பூஜைகள் நடந்தது. இதையடுத்து, நேற்று காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. இவ்விழாவில் கெங்கவல்லி, தெடாவூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கைலாசநாதர் கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர். கெங்கவல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

®®ஊடகதளம்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®®காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சேலம், செப்.5: சேலம் மாநகரம் மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் முருகன், முன்னாள் தலைவர்கள் மணி, ஆக்ஸ்போர்டு ராமநாதன், கிருஷ்ணசாமி, மாநகர துணை தலைவர் யுவராஜ், மகிளா காங்கிரஸ் மாநில துணை தலைவி சாரதா தேவி, மாநகர துணைத்தலைவர் சாதிக்பாஷா, மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, ஷானவாஸ், நிர்வாகி பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

‘]

கூட்டத்தில், மாநில செயல் தலைவர் ஜெயகுமார் கலந்து கொண்டு பேசுகையில், ‘தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் வரவுள்ளது. இதில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். தேர்தல்களில் எப்படி தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகள், தொண்டர்கள் தெரிந்து இருக்க வேண்டும். சேலம் மாவட்டத்துக்கு தேர்தல் பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்ட நான் வெற்றிக்காக கடுமையாக உழைப்பேன். அதேபோல் நிர்வாகிகள், தொண்டர்கள் வெற்றிக்காக கடுமையாக உழைத்து, வெற்றியை தேடி தர வேண்டும். அதற்காக இப்போதிருந்தே கட்சி பணியை தொடங்க வேண்டும்,’ என்றார்.

®®ஊடகதளம்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®®ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் சேலம் கோட்டத்தில் 4.75 கோடி அபராதம் வசூல்

சேலம், செப்.5: சேலம் கோட்டத்தில் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்தவர்களிடம் இருந்து 4.75கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கோட்ட மேலாளர் கூறினார்.சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் ரயில்வே கோட்டம் நடப்பாண்டு ஏப்ரலில் இருந்து ஜூலை வரை, 305கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 31 சதவீதம் அதிகமாகும். சேலம் போடிநாயக்கன்பட்டியில் ரயில்வே கீழ் பாலம் 2.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. ரயில்வே நிலத்தை பயன்படுத்துவது குறித்து டெபாசிட் செலுத்துவது தொடர்பாக மாநகராட்சிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கடிதம் எழுதி விட்டோம். இது பொதுமக்களுக்கான பாலம் என்பதால் மாநகராட்சி தான் நிதி ஒதுக்க வேண்டும். ரயில் தண்டவாளத்தில் நாசவேலைக்காக சில இடங்களில் கல் வைக்கின்றனர். தண்டவாளத்தின் கொக்கியும் கழற்றப்படுகிறது. ஆத்தூர் அருகே அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. எந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா வேண்டுமோ, அந்த இடத்தை கண்டறிந்து போலீசார் கூறும்பட்சத்தில் அங்கு கேமரா பொருத்தப்படும். சேலம் ரயில்வே கோட்ட ரயில் நிலைங்களில் 800 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 77,425 பேர் பிடிபட்ட நிலையில் அபராதம் வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டில் 1 லட்சத்து 12ஆயிரத்து 445 பேர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, 4 கோடியே 75 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் ஆண்டிப்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் குமரன், கோட்ட மேலாளர் சுப்பாராவை சந்தித்து, போடிநாயக்கன்பட்டி ரயில்வே தரைபாலத்தின் இணைப்பு சாலையை ஜங்சன் வரையில் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

®®ஊடகதளம்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®® அரசு பஸ்களில் ஓசி பயணம் 714 பேருக்கு அபராதம்

சேலம், செப்.5: சேலம் கோட்டத்தில் அரசு பஸ்களில் பயணச்சீட்டு எடுக்காமல் சென்ற 714பேரிடம் இருந்து ₹80 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரியில் அரசு பஸ்களில் அதிகாரிகள் வழித்தட பரிசோதனை செய்து வருகின்றனர். இதில், ஜூலை மாதத்தில் பயணச்சீட்டு எடுக்காதவர்களிடம் இருந்து ₹80 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், “அரசு பஸ்களில் வழித்தட பரிசோதனை மற்றும் கூட்டுபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.இதன்படி, கடந்த மாதத்தில் 714பேரிடம் இருந்து ₹80ஆயிரத்து 426 வசூலிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

®®ஊடகதளம்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®® வீரபாண்டி ஒன்றிய ஏரிகளில் குடிமராமத்து பணி தொடக்கம்

ஆட்டையாம்பட்டி, செப்.5: வீரபாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட சேனைப்பாளையம் புருசங்குட்டை ஏரி, பெத்தாம்பட்டி ஏரி மற்றும் ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாலம் துலுக்கனூர் ஏரி ஆகிய மூன்று ஏரிகளில் குடிமராமத்து பணிகள் துவங்கியுள்ளது. புருசங்குட்டை ஏரி 6.30 லட்சம் மதிப்பிலும், பெத்தாம்பட்டி ஏரி ₹5 லட்சம் மற்றும் துலுக்கனூர் ஏரி ₹9 லட்சம் மதிப்பில் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ஏரியை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடந்து வரும் நிலையில், ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்கால்களை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

®®ஊடகதளம்
[9/10, 3:50 PM] விண்மீண்தீநியூஸ்: ®சேலம் மாவட்ட செய்திகள்®

®® வாலிபரிடம் நகை, பணம் பறிப்பு

சேலம், செப். 5: சேலம் பெருமாப்பட்டியை சேர்ந்தவர் கைலாஷ்(30). இவர் நேற்று முன்தினம் சிவதாபுரம் வழியாக பைக்கில் சென்றார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த மர்மநபர்கள், கைலாஷை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் மர்நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பணத்தை கேட்டு மிரட்டினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கைலாஷிடம் இருந்து அரை பவுன் மோதிரம், ₹ 4ஆயிரம் பணத்தை பறித்தனர். உடனே அவர் சத்தம் போடவே, அதற்குள் மர்மநபர்கள் பைக்கில் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து கைலாஷ் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையனை தேடி வருகின்றனர்.

Winmeennews.comஊடகதளம்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button