இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்

மதுபாட்டில்களுக்கு ஆபத்து? பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுங்கள்?டாஸ்மாக் அதிரடி உத்தரவு?

advertisement by google

✍️⚡மது பாட்டில்களுக்கு ஆபத்து… பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுங்கள்… டாஸ்மாக் அதிரடி உத்தரவு

advertisement by google

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில்கள் திருட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

advertisement by google

கொரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக காய்கறி கடைகள், உணவகங்கள், மருத்துவமனைகள் மட்டுமே செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

advertisement by google

டாஸ்மாக், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

advertisement by google

மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்து நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் சிலர் அரசின் உத்தரவுகளை மீறி வருவதும் ஆங்காங்கே தொடர்ந்து வருகிறது.

advertisement by google

அதேவேளையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் தமிழகத்தின் சில இடங்களில் கள்ளச் சந்தைகளும் முளைத்துள்ளன.

advertisement by google

எனவே தற்போது இருப்பில் வைக்கப்பட்டிருக்கும் மதுபாட்டில்களை பாதுகாக்க அரசு முடிவெடுத்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருக்கும் இந்த நாட்களில் டாஸ்மாக் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் மதுபாட்டில்கள் திருட வாய்ப்புள்ளதால் அதை பாதுகாப்பான குடோன் அல்லது கல்யாண மண்டபங்களில் வைத்து பாதுகாக்க டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் அவ்வாறு கல்யாண மண்டபங்களில் வைக்கப்படும் மதுபாட்டில்களை பாதுகாக்க காவல்துறையினர் நியமிக்கவும் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button