இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

குடியுரிமை சட்டதிருத்ததை மத்தியரசு திரும்ப பெற வேண்டும் காயல்அப்பாஸ் வலியுறுத்தல்?

advertisement by google

குடியுரிமை சட்ட திருத்ததை மத்தியரசு திரும்ப பெற வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

advertisement by google

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

advertisement by google

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்திக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் . காவல் துறையின் இத்தகை செயலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வன்மையாக கண்டிக்கிறோம்.

advertisement by google

இந்தியா மதசார்ப்பற்ற ஜனநாயக நாடு இங்கு அணைத்து தரப்பு மக்களும் சகோதர அடிப்படையில் வாழ்ந்து வருகிறார்கள் . இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் பல ஆண்டு காலமாக அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களின் , மற்றும் இஸ்லாமியர்களின், உரிமையைகளை பாதுக்க படாமல் ஓதுக்க படும் இந்த சட்டத்திற்கு தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் அமல்படுத்தகூடாது என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

advertisement by google

எனவே : காவல்துறையினர் புதுதில்லியில் மாணவர்கள் மீது நடத்தியுள்ள தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வகையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டுமெனவும் , இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் எதிரான குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button