t

கள்ளக்காதலிக்காக நடந்த கொடூரம் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ✍️2 பேரை போலீசார் துரத்தி பிடிப்பு✍️ குற்றவாளியை ஜாமீனில் எடுத்து தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்த வக்கீலுக்கு வலை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கள்ளக்காதலிக்காக நடந்த கொடூரம் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு 2 பேரை போலீசார் துரத்தி பிடித்தனர்: குற்றவாளியை ஜாமீனில் எடுத்து தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்த வக்கீலுக்கு வலை

advertisement by google

பெரம்பூர்: கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் 2 பேரை போலீசார் துரத்தி பிடித்தனர். குற்றவாளியை ஜாமீனில் எடுத்து தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்த வக்கீலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (38). திருவொற்றியூர் பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுடர்மதி என்ற மனைவியும் ஒரு மகன், மகளும் உள்ளனர். நேற்றிரவு 10 மணியளவில் வழக்கம் போல வேலை முடிந்து, தனது பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார் தினேஷ்குமார். புளியந்தோப்பு பேசின் பிரிட்ஜ் சாலை வழியாக வந்தபோது, 3 பேர் பைக்கில் பின்தொடர்ந்தனர். பின்னர் திடீரென தினேஷ்குமாரை மடக்கி, தாங்கள் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

advertisement by google

அந்த நேரத்தில், எதிரே ரோந்து வாகனத்தில், பேசின்பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தம் வந்தார். இந்த சம்பவத்தை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி ஓடி வந்தார். 3 பேரும் ஓட்டம் பிடித்தனர். இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், அவரது டிரைவர் குமார் ஆகியோர் விரட்டினர். பேசின் பிரிட்ஜ் ரயில்வே ஸ்டேஷன் அருகே 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர்கள் அயனாவரம் பகுதியை சேர்ந்த சஞ்சீவ்குமார் (25), அயனாவரம் ரயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் (28), தப்பி ஓடியவர் அயனாவரம் பகுதியை சேர்ந்த அஸ்வின் (23) என்பது தெரிந்தது. அஸ்வின் மீது ஒரு கொலை வழக்கும், சஞ்சீவ்குமார் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளது.

advertisement by google

இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:

advertisement by google

சஞ்சீவ்குமார், 2 நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரை ஜாமீனில் வெளியே எடுத்தது வியாசர்பாடி பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ். இவர், சஞ்சீவ்குமார் மற்றும் தப்பி ஓடிய அஸ்வின் ஆகியோருக்கு வழக்கறிஞராக செயல்பட்டு வந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே எடுப்பதற்கு முன்பாக சஞ்சீவ்குமாரை ராஜேஷ் சந்தித்து, ‘எனது தங்கையை ஒருவர் தொடர்ந்து தொல்லை செய்து வருகிறார். அவரை கொலை செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். அவரும் சம்மதிக்கவே, சஞ்சீவ்குமாரை ராஜேஷ் ஜாமீனில் எடுத்துள்ளார். இதையடுத்து சஞ்சீவ்குமார், அவரது நண்பர்களான பிரதீப்குமார், அஸ்வின் ஆகியோருடன் தினேஷ்குமாரை கொலை செய்ய நோட்மிட்டுள்ளனர். அதன்படி நேற்றிரவு வேலை முடிந்து வந்த தினேஷ்குமாரை பின்தொடர்ந்துள்ளனர். அவர்களுடன் வழக்கறிஞர் ராஜேஷும் வந்துள்ளார். குறிப்பிட்ட தூரத்தில் நின்று கொண்டு, தினேஷ்குமாரை அடையாளம் காட்டிவிட்டு ராஜேஷ் சென்று விட்டார். அதன் பிறகு இந்த 3 பேரும், தினேஷ்குமார் வெட்டியுள்ளனர். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது.

advertisement by google

இதற்கிடையில் இடது கையில் பலத்த வெட்டு காயமடைந்த தினேஷ்குமார், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மனைவி சுடர்மதியுடன் தினேஷ்குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் பிரிந்து விட்டனர். அதற்கு பிறகுதான் வழக்கறிஞர் ராஜேஷ் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதை அறிந்த தினேஷ்குமார், தட்டி கேட்டதால், இது சம்பந்தமான வழக்கு எம்கேபி நகர் காவல் நிலையத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

advertisement by google

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தினர். இதனை மறைத்து சிறையிலிருந்தவரை வெளியே வரவழைத்து தங்கை என்று பொய் சொல்லி தினேஷ்குமாரை கொலை செய்ய ராஜேஷ் திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதனையடுத்து தப்பி ஓடிய அஸ்வின், வழக்கறிஞர் ராஜேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகளை போலீசார் துரத்தி சென்று பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button