பயனுள்ள தகவல்மருத்துவம்

குழந்தை எதிர்ப்பு சக்தியோடு வளர உதவும் வரகு அரிசி கஞ்சி, தயாரிப்பும் பயனும்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

குழந்தை எதிர்ப்பு சக்தியோடு வளர உதவும் வரகு அரிசி கஞ்சி, தயாரிப்பும் பயனும்!

advertisement by google

குழந்தைக்கு அடர்த்தியான திரவ ஆகாரம் கஞ்சி. குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய பல வகை கஞ்சிகளில் முக்கியமானது வரகு அரிசி கஞ்சி. இவை குழந்தைக்கு தரும் நன்மையும் சத்தும் தயாரிக்கும் முறையும் குறித்து தெரிந்து கொள்வோம்.

advertisement by google

குழந்தைகளுக்கு திரவ உணவுக்கு அடுத்து திட உணவு கொடுக்கும் போது முதலில் சற்று அடர்த்தியான திரவ உணவு கொடுக்க வேண்டும். அந்த வகையில் கஞ்சி சிறப்பான இணை உணவாக இருக்கும்.

advertisement by google

அரிசி கஞ்சி, ராகி கஞ்சி போன்று சிறுதானியங்களில் ஒன்றான வரகு அரிசியும் முக்கியத்துவம் வாய்ந்தது. வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்துகளை உணவு வழியாக கொடுக்க முடியும். உடல் எடையை அதிகரிப்பதும், நோய் எதிர்ப்புசக்தியை கூட்டுவதுமாக உணவைக் கொடுத்தால் குழந்தை ஆரோக்கியத்துடன் வளரும். ஆனால் பல குழந்தைகளும் ஆரோக்கியமில்லாத குறைந்த உடல் எடையுடன் இருக்கிறார்கள். இதனால் வளரும் பருவத்திலேயே எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாகவே வளருகிறார்கள். இதைத் தவிர்க்க சத்தான உணவுப் பொருள்களை சமச்சீராக கொடுக்க வேண்டும்.

advertisement by google

குழந்தைகளுக்கு அடர்த்தியான திரவ உணவு கொடுக்கும் போது ஸ்மூத்தி, பழவகைகளுக்கு அடுத்து உணவில் கஞ்சி தான் முக்கியம். கஞ்சி சத்து தரக்கூடியது என்பதால் தான் இது சத்துகஞ்சி என்றழைக்கப்படுகிறது. ராகி, அரிசியில் மட்டும் தான் கஞ்சி தயாரிக்க முடியும் என்பதில்லை. தானியங்களில் கம்பு, திணை, சோளம், வரகு என பலவற்றிலும் சத்தான ஆரோக்கியம் நிறைந்த கஞ்சி தயாரிக்க முடியும். சிறுதானியங்களை வறுத்து பொடியாக்கி வைத்தும் கஞ்சி காய்ச்சி கொடுக்கலாம். அவையும் சத்து நிறைந்தது. இது குறித்து தனியாக பார்ப்போம்.

advertisement by google

வசம்பு : பிறந்த குழந்தைக்கு கொடுக்கலாமா? வேண்டாமா?அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..

advertisement by google

குழந்தைக்கு ஆறுமாதம் நிறைவடையும் போது சிறிது சிறிதாக அடர்த்தியான திரவ உணவான கஞ்சி கொடுக்க விரும்பும் அம்மாக்கள் வரகு கஞ்சியை கொடுக்கலாம். வீட்டிலேயே தயாரித்துக் கொடுக்க கூடிய கஞ்சி வகைகள் உடலுக்கும் ஆரோக்கியம் கொடுக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் துணை புரியும். எளிமையான சத்து நிறைந்த வரகு கஞ்சியை தயாரிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்வோம்.

advertisement by google

தேவையான பொருட்கள்:

வரகு – 2 தேக்கரண்டி
பாசிப்பருப்பு – 1 தேக்கரணடி
சீரகம் – கால் டீஸ்பூனில் பாதியளவு,
மிளகு -2 மிளகுத்தூள் சிட்டிகை,
வெந்தயம் – 4 (எண்ணிக்கை போதுமானது)
மஞ்சள் தூள் – சிட்டிகை,
உப்பு – சிட்டிகை,
பூண்டு – 1 பல்.

செய்முறை:

மண்சட்டியில் வரகு அரிசி கழுவி பத்துநிமிடங்கள் ஊற வைக்கவும். அதே போன்று பாசிப்பருப்பையும் பத்துநிமிடம் ஊற வைக்கவும். இரண்டையும் தனியாக ஊற வைத்து சட்டியில் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு குழைவாக வேக வைக்கவும். இதிலேயே பூண்டும், வெந்தயமும் சேர்த்து விட வேண்டும். நன்றாக குழையும் போது மஞ்சள் தூள், உப்பு, மிளகுத்தூள் தூவி நன்றாக கலக்கி இறக்க வேண்டும்.

ஆறியதும் குழந்தைக்கு ஸ்பூனால் அள்ளிக் கொடுக்கவும். அதிக உப்பும் சேர்க்க வேண்டாம். ஒருவயது முடிவடையும் வரை நெய் சேர்க்க வேண்டாம்.

குறிப்பு:

இதில் இனிப்பு சேர்த்தும் கொடுக்கலாம். ஆனால் குழந்தைக்கு இனிப்பு கொடுத்துப் பழகினால் குழந்தை உப்புக் கஞ்சியை குடிக்க மாட்டார்கள். தினமும் ஒரு வேளை மட்டுமே இந்தக் கஞ்சியை கொடுக்க வேண்டும். நண்பகல் வேளையில் கொடுக்கலாம். கஞ்சி சாதம் போல் இல்லாமல் சற்று நீர்ப்பதமாக இருக்க வேண்டும்.

கைக்குழந்தையையும் விட்டு வைக்காத மலச்சிக்கல்… அறிகுறிகளும்.. தீர்வளிக்கும் எளிய வைத்தியமும்..

நன்மைகள்

நார்ச்சத்து கொண்டிருப்பதால் குழந்தைக்கு மலச்சிக்கல் வராது. வரகு அரிசியில் கால்சியம், வைட்டமின் பி, தாது சத்துக்களும் உண்டு. இந்த கஞ்சி குழந்தைக்கு செரிமானத்தை எளிதாக்கும். வளரும் குழந்தைக்கு ஆற்றல் தரக்கூடியது. உடலுக்கு வலு கொடுக்கவும் சத்து கொடுக்கவும் வரகு கஞ்சியை தரலாம். குழந்தை நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வளரும்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button