இந்தியாஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

பாம்பை பச்சையாக விழுங்கிய சீன இளைஞரின் நுரையீரல் முழுவதும் புழுக்கள் அடைப்பு? மூச்சுவிட முடியாமல் தவித்த சீன இளைஞர்?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

அய்யய்யே.. இதை போயா பச்சையா விழுங்கனீங்க.. நுரையீரல் முழுக்க புழுக்கள் அடைத்து.. ஷாக்கிங் சீனா!

advertisement by google

பெய்ஜிங்: அப்படியே பாம்பை பச்சையாக விழுங்கி உள்ளார் இளைஞர் ஒருவர்.. இப்போது நுரையீரல் முழுக்க புழுக்கள் அடைத்து கொள்ள.. தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்!

advertisement by google

எங்கோ சீனாவின் வூஹானில் ஆரம்பித்த தொற்று உலகமெல்லாம் பரவி நடுநடுங்க வைத்து வருகிறது.. சீனாவில் இந்த வைரஸ் உருவான போதிருந்தே எல்லாத்துக்கும் காரணம் அந்த வவ்வால்கள்தான் என்றும், அவைகளை பிடித்து அப்படியே சூப் வைத்து சாப்பிடுவதால்தான் இந்த கதி ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அப்போதிருந்தே வவ்வால்களை கண்டு மக்கள் பயப்பட ஆரம்பித்துவிட்டனர்.

advertisement by google

என்னதான் வவ்வால்களை பற்றி சொன்னாலும், அடிப்படையிலேயே சீனர்கள் பாம்பை ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள்.. சீனாவின் வுகான் மாவட்டத்திலுள்ள கடல் உயிரினங்கள் மொத்த விற்பனை சந்தையிலிருந்துதான் இந்த வைரஸ் தொற்று பரவியது என்று சொல்லப்பட்டது.. இந்த மார்க்கெட்டில்தான் ஆடு, கோழி, வாத்து, கழுதை, ஆடு, பன்றி, ஒட்டகம், நரி, எலி, முள்ளம்பன்றி, உட்பட எல்லாமே விற்கின்றனர். .
இதற்கு அடுத்த கட்ட ஆய்வில் இந்த வைரஸ் தொற்று பாம்புகளிடமிருந்து வந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. .. அதாவது காட்டில் இருக்கும் பாம்புகள் உணவுக்காக அடிக்கடி வவ்வால்களை கூட வேட்டையாடி சாப்பிடுமாம்.

advertisement by google

சீனாவில் நிறைய கட்டுவிரியன், நல்ல பாம்புகள் உள்ளன.. இந்த பாம்பின் உடம்பெல்லாம் நிறைய உடலில் வளையங்கள் காணப்படும்.. விஷமுள்ள கட்டுவிரியன் பாம்புகளும் சீனாவில் அதிகம்.. அதனால் இந்த 2 வகையான பாம்புகளில் ஏதாவது ஒன்றில் இருந்தே இந்த வைரஸ் பரவியிருக்க கூடும் என்ற ஆராயச்சியும் நடக்கிறது. இந்த சமயத்தில்தான் மற்றொரு பகீர் செய்தி வெளிவந்துள்ளது.

advertisement by google

சீனாவை சேர்ந்த இளைஞர் பெயர் வாங்.. இவருக்கு திடீரென மூச்சு விட முடியாமல் போய்விட்டது.. அதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று சரியாக மூச்சு விட முடியவில்லை என்றார்.. அதனால் டாக்டர்களும், என்ன சாப்பிட்டீங்க? என்னென்ன வழக்கமாக சாப்பிடுவீர்கள் என்று கேட்டுள்ளனர்.. அதற்கு இளைஞரோ, கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் கடல் உணவு சாப்பிட்டேன்.. நத்தைகள் நிறைய சாப்பிட்டேன் என்றார்.
இருந்தாலும் டாக்டர்களுக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கவும், வேறு என்னென்ன சாப்பிட்டீங்க, ஞாபகப்படத்தி சொல்லுங்க என்று கேட்டுள்ளனர்.. அதற்கு பிறகுதான், ஆமா, பாம்பை சாப்பிட்டேன்.. அந்த பாம்பின் பித்த பையை பச்சையாகவே சாப்பிட்டேன்” என்றார். இதை கேட்டதும் அதிர்ந்த டாக்டர்கள் உடனடியாக ஸ்கேன் எடுத்து பார்த்தனர்.
அப்போதுதான் இளைஞரின் நுரையீரலில் குட்டி குட்டியாக புழுக்கள் இருந்தன கண்டு மேலும் ஷாக் ஆகிவிட்டனர்.. உயிரினங்களை இப்படி பச்சையாக உண்பதால், அதில் உள்ள புழுக்களின் முட்டை உடலுக்குள் சென்றுவிடும்.. பிறகு அதுவே கொடிய நோயாக பின்னாளில் மாறும் என்கின்றனர்.. பாம்பை பச்சையாக முழுங்கிவிட்டு, அதில் இருந்து புழுக்கள் வெளியேறி உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button