இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

போலீஸ் வரும்னு தெரியும் அதான் தண்ணியடிச்சிட்டு கொள்ளையடித்த பணத்துடன் ரெடியா நிற்கிறேன்? மிரள வைத்த கொள்ளையன் கோபால் -முழு விவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

போலீஸ் வரும்னு எனக்கு தெரியும்.. அதான் தண்ணி அடிச்சிட்டு, கொள்ளையடித்த பணத்துடன் ரெடியா நிற்கிறேன்”

advertisement by google

என்று வாக்குமூலத்தில் மிரள வைத்துள்ளார் கொள்ளையன் கோபால்!!

advertisement by google

நாகர்கோவில் அருகே உள்ள மேல சூரங்குடி என்ற பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்…

advertisement by google

இவர் ஒரு பழ வியாபாரி.. மொத்த வியாபார பழக்கடையை நடத்தி வருகிறார்.வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பழங்களை கொள்முதல் செய்து.. அவைகளை தன் மாவட்டத்தின் பிரதான மார்க்கெட், கடைகளில் சப்ளை செய்து வருகிறார்.

advertisement by google

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்..

advertisement by google

மறுநாள் கடையை திறக்க வந்தால், ஷட்டர் உடைந்துகிடந்ததை பார்த்து அதிர்ந்தார்.. அதனால் உள்ளே சென்று பார்த்தபோது, டேபிள் டிராயரில் வைத்திருந்த 23 லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

advertisement by google

மேலும் தரையிலும், அந்த டேபிளிலும் 500 ரூபாய் கட்டுகள் கிடந்தன.. ஆங்காங்கே 500 ரூபாய் நோட்டுகள் சிதறயும் கிடந்தன.. எல்லாவற்றையும் கைப்பற்றி எடுத்தபோது, அவைகள் மட்டும் 5 லட்சம் ரூபாய்க்கு இருந்தது. இதையடுத்து, உடனடியாக வடசேரி ஸ்டேஷனுக்கு புகார் தந்தார்..

advertisement by google

போலீசாரும் விரைந்து வந்தனர்.. முதல் வேலையாக அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆராய்ந்தனர்.. அப்போதுதான் அந்த நபர் உள்ளே வருகிறார்..

அவர் முகத்தில் முகமூடி இல்லை.. ஆனால் அவர் தலையில் ஒரு பாலித்தீன் கவரை அணிந்திருந்தார்.அதனால் அவரது முகமே மறைந்திருந்தது. உள்ளே வரும்போதே ஒரு கம்பியை கொண்டு வருகிறார்.. அந்த கம்பியால்தான் டேபிளை உடைத்து உள்ளே இருக்கும் பணத்தை எடுக்கிறார்.. கட்டு கட்டாக பணத்தை எடுத்து ஒரு துணியில் வைத்து கட்டுகிறார். பிறகு அந்த மூட்டையை அப்படியே வெளியே கொண்டு செல்லாமல், கடைக்குள்ளேயே இருந்த ஒரு பையை எடுத்து அதில் அந்த பண மூட்டையை போடுகிறார்.. பைக்குள் மேலும் மேலும் பணக்கட்டை அள்ளி அள்ளி திணிக்கிறர்.. பை நிரம்பி வழிகிறது.. அதற்கு மேல் ஒரு கட்டுகூட பணத்தைகூட அந்த பையில் திணிக்க முடியவில்லை..

அப்படியே அங்கிருந்து தப்பித்து கிளம்புகிறார். இதை பார்த்ததும் போலீசாரே மிரண்டு நின்றனர்.

அந்த சிசிடிவி காட்சியை அடிப்படையாக வைத்து யார் அந்த நபர் என்றவிசாரணையில் இறங்கினர்..

எடுத்த எடுப்பிலேயே அந்த நபர் ஒரு பெரிய கொள்ளை கூட்டத்தை சேர்ந்தவர் இல்லை என்பது தெரிந்துவிட்டது.. ஹோல்-சேல் வியாபாரி என்பதால் கடையில் ஏதாவது பணம் இருக்கும் என்று நம்பிதான் திருட வந்தார்.. ஆனால் இவ்வளவு பணத்தை அவர் அங்கு எதிர்பார்க்கவில்லை.. தெரிந்திருந்தால் ஒரு பெரிய பையை ஏற்கனவே கையோடு கொண்டு வந்திருப்பார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்..

கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவராம்.. பெயர் கோபால்.. 67 வயதாகிறது.. விசாரணையில் அவர் சொல்லும்போது, “சரக்கு அடிக்கலாம்னு பார்த்தேன்.. கையில் காசு இல்லை.. அதனால் பழக்கடையில் காசு இருக்கும் என்றுதான் உள்ளே போனேன்.. அவ்ளோ காசு இருக்கும்னு நினைக்கவே இல்லை.. திடீர்னு ஒரே இடத்தில் பணத்தை பார்க்கவும் திணறிட்டேன். எவ்ளோ காசு இருக்குன்னுகூட எண்ணி பார்க்கலை.. போலீஸ் வரும்ன்னு எனக்கு தெரியும்.. அதான் ரெடியா இருந்தேன்.. வெட்டூர்ணிமடம் டாஸ்மாக்கில் தண்ணி அடித்துவிட்டு, கையில் அந்த பண பெட்டியுடன் தயாராக இருந்தபோதுதான், போலீசாரும் என்னை தேடி கொண்டு வந்துவிட்டனர்” என்றார் கூலாக..

கோபாலிடம் இருந்த 17 லட்ச ரூபாயை மீட்டனர் போலீசார்.இவரது சொந்த ஊர் கேரளா என்றாலும், நாகர்கோவில் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்திருக்கிறார்.. சாயங்காலம் வேலை முடிந்துவிட்டால், அந்த பகுதியில் எங்கு திருடலாம் என்று நோட்டமிட்டு திருடிவிடுவாராம். ஆனால் எல்லாமே அன்றைய தினத்துக்கு குவார்ட்டர் அடிக்க மட்டும் திருடும் சொற்ப பணம்தான்.. பழக்கடையில் திருட 2 நாள் நோட்டமிட்டுள்ளார்.. இப்போது கோபால் ஜெயிலில் உள்ளார்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button