இந்தியாதமிழகம்

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை✍️வன்னியர்களின் வாக்கு சதவிகிதத்தை நம்பி களமிறங்கிய பாமக அந்த சமுதாய மக்களே கைவிட்டு விட்டனர் என்பதுதான் சோகம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 3ல் மட்டுமே முன்னிலை*

advertisement by google

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. வன்னியர்களின் வாக்கு சதவிகிதத்தை நம்பி களமிறங்கிய பாமகவை அந்த சமுதாய மக்களே கூட கை விட்டு விட்டனர் என்பதுதான் சோகம்.

advertisement by google

தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 150 தொகுதிகளுக்கும் மேல் முன்னணியில் உள்ளனர். அதிமுக கூட்டணி கட்சியினர் 80 தொகுதிகளுக்கும் மேல் முன்னணியில் இருக்கின்றனர்.

advertisement by google

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமகா உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன, இதில் அதிமுக மட்டும் 66 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

advertisement by google

அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக காலை முதலே 10 தொகுதிகளில் மாறி மாறி முன்னிலை வகித்தது. நேரம் செல்லச்செல்ல முன்னிலை நிலவரம் மாறியது. தற்போது 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

advertisement by google

பாமகவை பொறுத்தவரை பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகிக்கிறார். மயிலம் தொகுதியில் சிவகுமார், சேலம் மேற்கு தொகுதியில் அருள் ஆகியோர் மட்டுமே முன்னிலை வகிக்கின்றனர்.

advertisement by google

அதிமுக, திமுக உடன் ஒருபோதும் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று கடந்த சட்டசபைத் தேர்தலில் அறிவித்தது பாமக. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று அறிவித்து தனித்து போட்டியிட்ட பாமக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை.

advertisement by google

இதனையடுத்து இந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தது பாமக. வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு அறிவித்த பின்னரே கூட்டணிக்கு சம்மதித்தது பாமக. 23 தொகுதிகளைப் பெற்று போட்டியிட்ட பாமக தற்போது 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button