பழனியில் விஜய் சேதுபதி நடிக்கும் படப்பிடிப்பில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியவில்லை என சுகாதாரத் துறையினர் அபராதம்✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் முகக்கவசம் அணியாததால் அபராதம்!

பழனியில் விஜய் சேதுபதி நடிக்கும் படப்பிடிப்பில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியவில்லை என சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

பழனியில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படப்பிடிப்பு காரமடை தோட்டம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது . இந்த தகவல் அறிந்து ஏராளமான பொதுமக்கள் விஜய்சேதுபதியை காண மண்டபம் முன்பு குவிந்தனர் இதனால் காலை முதலே அங்கு பரபரப்பு காணப்பட்டது மேலும் படப்பிடிப்பில் பணிபுரியும் நடிகர் மற்றும் ஊழியர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை, முகக்கவசம் அணியவில்லை எனவும் சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

அப்பொழுது படப்பிடிப்புத் தளத்தில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என ரூபாய் 1500 அபராதம் விதித்துள்ளனர். கடந்த மாதம் பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் இயக்குனர் ஹரி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *