கோத்தகிரி தேயிலை எஸ்டேட்டில் துர்நாற்றம் வீசிய நிலையில் சிறுத்தை உடல் கண்டெடுக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே புடியங்கி கிராமத்தில் தேயிலை பறிப்பதற்காக அந்தவழியாக தொழிலாளர்கள் சென்றனர். அப்போதுதுர்நாற்றம் வீசியதால் அருகே சென்று பார்த்தபோது சிறுத்தை இறந்து கிடந்தது தெரியவந்தது.* இதைப்பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், 10 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒரு வாரம் முன்பு இறந்துள்ளது முதல்கட்ட தகவலில் தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்குப் பின் சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


