இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்களையில் ,அதிக பாரம் ஏற்றிய கனிமவள டாரஸ் லாரி,சென்டர் மீடியனை உடைத்து மின்னல் வேகத்தில் எதிர்புறம் பாய்ந்தது✍️பொதுமக்கள் அதிர்ச்சி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

அதிக பாரம் ஏற்றிய கனிமவள டாரஸ் லாரி.

advertisement by google

சென்டர் மீடியனை உடைத்து மின்னல் வேகத்தில் எதிர்புறம் பாய்ந்தது.

advertisement by google

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் சரகத்திற்கு உட்பட்ட வெள்ளி கோடு பகுதியில் ஆபத்தான வளைவு பகுதிகள் உள்ளது. தக்கலை காவல் நிலைய விபத்து பதிவேடுகளில் அதிக விபத்து நடக்கும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதியில் விபத்தை தடுக்கும் பொருட்டு சாலை மத்தியில் சிமெண்ட் கான்கிரீட் கற்களால் உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. 450 மீட்டர் தூரத்திற்கு அமைக்கவேண்டிய சென்டர் மீடியன் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக சில மீட்டர் தூரமே அமைக்கப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட பின்னர் சுமார் 70 சதவீத விபத்துகள் குறைந்தது. ஆனாலும் அதிவேகத்தில் செல்லும் கனரக வாகனங்கள் குறிப்பாக கனிமவளம் ஏற்றிச்செல்லும் கனரக டாரஸ் லாரிகள் எந்த அதிகாரிகளின் தலையீடு மற்றும் இடையூறு இன்றி சுதந்திரமாக அதிக பாரத்துடன் அதிவேகமாக சென்று வருகிறது இதன் காரணமாக பல்வேறு இடங்களிலும் பெரும் விபத்துக்கள் இவ்வகை வாகனங்களால் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது இந்நிலையில் 22-2-2021 இரவு 10 மணி அளவில் வெள்ளிகோடு இரட்டான் விளை ஆபத்தான வளைவுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியனில் அதிவேகமாக கனிமவளம் ஏற்றி வந்த டாரஸ் லாரி மோதியை மின்னல் வேகத்தில் எதிர்புறம் பாய்ந்தது. அவ்வேளையில் எதிர்புறத்தில் வாகனங்கள் எதுவும் வராததால் மிகப்பெரிய விபத்தில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் எதிர்ப்புறம் பாய்ந்த லாரி சுமார் 30 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டிருந்த காங்கிரீட் சுவரில் மோதி நின்றது குறிப்பிடத்தக்கது. ஆபத்தான வளைவு பகுதியில் அதிவேகமாக வந்த கனிமவள டாரஸ் லாரியால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டாலும் சென்டர் மீடியனில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கட்டைகள் உடைந்து சேதமானது. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறும்போது கடந்த சில தினங்களுக்கு முன்பாக உயர் நீதிமன்றம் கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தும் டாரஸ் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிக பாரம் ஏற்றிச் செல்வதை தடுக்க எல்லைப் பகுதிகளில் எடை மேடை அமைக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது ஆனாலும் இவைகள் எதையும் மாவட்ட நிர்வாகமோ வருவாய்த்துறையோ கனிமவளத்துறையோ குறிப்பாக காவல் துறையோ கண்டுகொள்ளாததால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படவும் சாலைகள் சேதமடையவும் காரணமாகின்றன. ஆகவே இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியவில்லை காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வில்லை அதிக வேகம் என்று கூறி வழக்கு பதிவு செய்யும் போலீசார் ஏன் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள லாரிகளை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது ஆகவே விபத்துகளை தடுக்கவும் சாலை சேதம் அடைவதை தடுக்கவும் பொதுமக்கள் சாலை பயணம் நிம்மதியாக மேற்கொள்ளவும் குறைந்தபட்சம் உயர்நீதிமன்ற உத்தரவை அமல் படுத்தும் விதமாகவாவது அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள டாரஸ் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்படிப்பட்ட விபத்துக்களை தடுக்க முடியும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button