தமிழகம்

கோவில்பட்டியில்தற்காலிக டிரைவர் ஓட்டி சென்ற அரசு பஸ் விபத்தில் சிக்கியது

advertisement by google

தமிழகம் முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் 95 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பெரும்பாலான பஸ்கள் தற்காலிக டிரைவர்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து பேரிலோவன்பட்டி, சிந்தலக்கரை வழியாக கோவில்பட்டி செல்லும் 78ஏ அரசு பஸ்சை தற்காலிக டிரைவர் சுப்ரமணியன் இன்று ஓட்டி சென்றார். வழக்கமாக இந்த பேரிலோன்பட்டி பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயணம் செய்து வழக்கம்.அதன்படி இன்று 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். பஸ் சிங்கிலிபட்டி கிராமம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையில் இறங்கி சேற்றில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. ஆனால் பஸ்சில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன் இருக்கை கம்பி மீது மோதியதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பாரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று சென்றனர். பஸ் விபத்துக்குள்ளானதை அறிந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.இந்த பஸ் சாலையோரத்தில் சிக்கி சேற்றில் சிக்கி ஜே.சி.பி. வாகனம் மூலம் மீட்கப்பட்டு விளாத்திகுளம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மீண்டும் மாற்று டிரைவர் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button