தமிழகம்

3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கியிருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீட்பு?வெள்ளத்தில் சிக்கிய அமைச்சரை மீட்பு பணிக்கு போனதாக கூறுவதா? பாஜக அண்ணாமலை கேள்வி

advertisement by google

உடன்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17-ந்தேதி அதீத கனமழை பெய்தது.இதில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் பல குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது.இதற்கிடையே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினருடன் ஈடுபட்டார். 17-ந்தேதியில் சாத்தான்குளம் பகுதியில் கொட்டும் மழையில் ஜே.சி.பி. எந்திரத்தில் சென்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள முகாம்களுக்கு அனுப்பி வைத்தார்.மேலும் அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், போர்வை உள்ளிட்டவைகளையும் வழங்கினார்.தொடர்ந்து அவர் அங்கிருந்து ஏரல் பகுதிக்கு சென்றார். அப்போது கனமழை காரணமாக ஏரல் தாமிரபரணி ஆற்று பாலம் மூழ்கியது. மேலும் ஏரல் பகுதியின் சாலை பகுதிகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது. மேலும் தொலை தொடர்பு சாதனங்களும் இயங்கவில்லை.இதனால் மீட்பு பணிக்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 3 நாட்களாக ஏரலில் சிக்கி கொண்டார்.அங்கு பொதுமக்களுடன் வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் பொதுமக்களுடன் நிவாரண உதவிகளை செய்தார். எனினும் கடும் வெள்ளம், தொலை தொடர்பு சேவை பாதிப்பு, சாலை துண்டிப்பு காரணமாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு செல்ல முடியவில்லை.இந்நிலையில் இன்று வெள்ளம் ஓரளவு வடிந்ததால் மீட்பு குழுவினரும், தீயணைப்பு துறையினரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.?திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மூத்த அமைச்சர்கள் பலரை நியமித்திருப்பதாக, கடந்த18 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அமைச்சர்களில் ஒருவரான, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின், சொந்த அமைச்சரான அவர்களை, களத்திலேயே காண முடியவில்லையே என்று பொதுமக்கள் உட்பட, நாங்கள் அனைவருமே தேடிக் கொண்டிருந்த போது மூன்று நாட்களாக, மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த அமைச்சரை, இன்றுதான் மீட்டு வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. தனது அமைச்சரே வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட வேண்டிய நிலைமையில் இருக்கிறார் என்பது கூடத் தெரியாமல், மீட்புப் பணியில் அவரது பெயரையும் சேர்த்து, பெயருக்கு ஒரு பட்டியலை அறிவித்து விட்டு, அவசரகதியாக ‘இந்தியா’ கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த, டெல்லிக்குச் சென்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். களத்துக்கு வர இயலாத நிலையில் இருக்கும் அமைச்சர் வந்து, பொதுமக்களை மீட்பார் என்ற வெற்று அறிவிப்பு, திமுக அரசு, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பதை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button