இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறுவரி விளம்பரங்கள்

பாரதிய ஜனதா கட்சியின் கோவில்பட்டி நகர பாஜக சார்பாக திமுக மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதிமாறன் மீது காவல்துறையில் புகார்? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

பாரதிய ஜனதா கட்சி கோவில்பட்டி நகர் சார்பாக திமுகவின் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதிமாறன் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது.

advertisement by google

திமுகவின் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதிமாறன் அவர்கள் தலைமை செயலாளரை சந்தித்து (13-5-2020) மனுக்களை கொடுத்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசும்போது..
.. “எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா, தாழ்த்தப்பட்ட ஆட்களா?”, என்று கூறியுள்ளார். அதாவது, தாழ்த்தப்பட்ட மக்களைதான் மூன்றாம்தர மக்கள்போல நடத்துவார்கள். மற்ற சாதிக்காரர்களை அப்படி நடத்தமாட்டார்கள் என்ற ஆதிக்க சாதி ஆணவப் பேச்சைத்தான் திரு.தயாநிதி மாறனின் இந்த பேச்சு காட்டுகிறது.
நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா என்று கேட்பதன்மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் மதிக்கத்தக்கவர்கள் அல்ல என்று அவர் சொல்கிறார்.

advertisement by google

இப்பேச்சு மற்ற சமூகங்களையும் இதுபோல் வருங்காலத்தில் பேச வழிவகைச் செய்யும். திரு.தயாநிதிமாறன் அவர்களின் சாதி ஆணவப் பேச்சு பட்டியல் இன சமூக மக்களை மிகவும் பாதித்திருக்கிறது. ஆதலால், எல்லா மக்களும் சமம் என்று சட்டம் கூறுகிற வேளையில் பட்டியல் சமூக மக்களை கேவலப்படுத்தும் விதமாக பேசியிருக்கிற தயாநிதிமாறன் அவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவில்பட்டி நகர தலைவர் மா.பாலசுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட பொது செயலாளர் R.T.பாலாஜி, விவசாய அணி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், நகர பொது செயலாளர் முனிராஜ், சீனிவாசன்,முன்னாள் நகர துணை தலைவர் நல்லதம்பி, நகர செயலாளர் அழகு மாரியப்பன் மற்றும் பn.ஜக வினர் திரளாக உடன் சென்று முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவந்தி K நாராயணன் அவர்கள் புகார் . கொடுத்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button