தமிழகம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில், தேன்சிந்தும் தேம்பாவணி என்ற ஒப்பற்ற காவியத்தை தீன்தமிழில் படைத்த தமிழ் அகாராதியின் தந்தை எனப் போற்றப்படும் வீரமாமுனிவருக்கு ரூ.1 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா✍️அடிக்கல் நாட்டு விழாவில் தூத்துக்குடி எம்பிகனிமொழி பரபரப்பு உரை✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

தமிழகரசுக்கு தரவேண்டிய நிதியை,மத்தியஅரசு சரியாக வழங்கவில்லை என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் தேன்சிந்தும் தேம்பாவனி என்ற ஒப்பற்ற காவியத்தை தீன்தமிழில் படைத்த தமிழ் அகராதியின் தந்தை வீரமாமுனிவர் மணிமண்டபம் ,அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு தூத்துக்குடி எம்பிகனிமொழி பரபரப்பாக தெரிவித்தார்.

advertisement by google

அடிக்கல் நாட்டு விழா

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் தேன்சிந்தும் தேம்பாவணி என்ற ஒப்பற்ற காவியத்தை தீன்தமிழில் படைத்த தமிழ் அகாராதியின் தந்தை எனப் போற்றப்படும் வீரமாமுனிவருக்கு ரூ.1 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை வகித்தார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி அடிக்கல் நாட்டி, கல்வெட்டை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

நிதி வழங்குவதில்லை

advertisement by google

பின்னர் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில், தமிழால் ஒருங்கிணைக்கப்பட்டவர்களை யாராலும் பிரிக்க முடியாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

advertisement by google

நாம் மதத்தால் நம்பிக்கைகளால் வேறுபட்டவர்களாக இருக்கலாம். வேறு நாடுகளில் வாழக் கூடியவர்களாகக் கூட இருக்கலாம். ஆனால் நாம் தமிழர், அவருக்கும் நமக்கும் தமிழ் மீது இருக்கக் கூடிய அந்த அன்பு அவர் தமிழுக்காக ஆற்றியிருக்கக் கூடிய பணிகள், இதுதான் நம்மை ஒன்றான ஒரே இனமாக கட்டி போட்டிருக்கக் கூடிய ஒன்று. இதனை மதிக்கக் கூடிய வகையில் தான் இந்த மணிமண்டபம் என்றும் பேருந்து நிலையம், பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எங்களுக்கு தர வேண்டியநிதியை சரியாக வழங்கவில்லை. நிதியை அளித்தால் விரைவில் அதனை செய்து கொடுப்பேன் என்றார்.நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, பொதுப்பணித் துறை உதவி கோட்டப் பொறியாளா் பரமசிவன், உதவி பொறியாளா்கள் சரத்குமாா், சந்திரசேகா், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கஸ்தூரி சுப்புராஜ், காமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கலைச்செல்வி, ஆலயப் பங்குதந்தைகள் அந்தோணி அ.குரூஸ் (காமநாயக்கன்பட்டி), அலோசியஸ் துரைராஜ் (கோவில்பட்டி), வேதராஜ் (நாலாட்டின்புத்தூா்), சதீஷ்செல்வதயாளன் (வண்டானம்), மரியதுரை (குறுக்குச்சாலை), திமுக ஒன்றியச் செயலா்கள் சுப்பிரமணியன், சின்னப்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினா் நல உரிமை பிரிவு துணை அமைப்பாளா் அமலி பிரகாஷ், நகா்மன்ற உறுப்பினா் லூா்து ஜேஸ்மின் மேரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button