இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரி விளம்பரங்கள்

தமிழக உள்ளிட்ட10 மாநிலங்களுக்கு கொரோனாஆய்வு சிறப்புகுழுவை அனுப்பிய மத்தியரசு?கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் கட்டுபாடுகளை அதிகரிக்க நடவடிக்கை?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள்.. சிறப்பு குழுவை அனுப்பிய மத்திய அரசு.. கொரோனா கண்டெயின்மெண்ட்!

advertisement by google

டெல்லி: இந்தியாவில் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் 10 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு குழுவை அனுப்பி உள்ளது. கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாட்டு பகுதிகளில் எப்படி கட்டுப்பாடுகளை அதிகரிப்பது என்று இந்த குழு ஆலோசனைகளை வழங்கும்.

advertisement by google

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மொத்தம் 62,808 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மொத்தம் 2,101 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 19,301 பேர் குணமடைந்து உள்ளனர். 41,402 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மகாராஷ்டிராவில் 20,228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் சட்டீஸ்கர் முதல்வர் அஜித் ஜோகிக்கு மாரடைப்பு.. மோசமான உடல்நிலை.. தீவிர சிகிச்சை!

advertisement by google

எங்கு அதிகம்
குஜராத்தில் 7797 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 6542 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 6535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 3708 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 3547 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் 3373 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் 1930 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

advertisement by google

10 மாநிலங்களில் என்ன நிலை
இந்தியாவில் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் 10 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு குழுவை அனுப்பி உள்ளது. இந்த குழுவில் ஒரு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர், துணை செயலாளர் ரேங்க் முதன்மை அதிகாரி ஒருவர் மற்றும் பொது சுகாதார நிபுணர் ஆகியோர் இடம்பெற்று இருப்பார்கள். ஏற்கனவே மத்திய அரசு நாடு முழுக்க 20 சுகாதாரத்துறை குழுக்களை கொரோனா குறித்த சோதனைக்காக அனுப்பி இருக்கிறது.

advertisement by google

குழு வந்தது
அதிக கொரோனா வைரஸ் இருக்கும் மாவட்டங்களுக்கு இவர்கள் அனுப்பப்பட்டார்கள். சென்னைக்கும் மத்திய அரசின் குழு ஒன்று வந்தது. அதை தொடர்ந்து தற்போது கூடுதல் குழு அனுப்பப்படுகிறது. மொத்தம் 9 மாநிலங்களுக்கு இந்த குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழ்நாடு, குஜராத், உத்தர பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு இந்த குழு சென்றுள்ளது.

advertisement by google

ஆய்வு செய்வார்கள்
இரண்டு நாட்களுக்கு இவர்கள் தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் ஆய்வு பணிகளை செய்து ஆலோசனை செய்வார்கள். கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாட்டு பகுதிகளில் எப்படி கட்டுப்பாடுகளை அதிகரிப்பது என்று இந்த குழு ஆலோசனைகளை வழங்கும். கிளஸ்டர் பகுதிகளில் எப்படி கொரோனா பரவி உள்ளது, அதை எப்படி கட்டுப்டுத்துவது என்று இந்த குழு ஆலோசனை வழங்கும். இந்த 10 மாநிலங்களுக்குள் மொத்தம் 20 மாவட்டங்களில் இந்த குழு ஆய்வு நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button