இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

?காலைநேர விரிவான செய்திகள்(13.9.2019)?

advertisement by google

?விண்மீண்நியூஸ்? ⭕winmeenNews.com⭕ ஜங்ஷனில் தூய்மை இயக்க முகாம் தொடக்கம்

advertisement by google

சேலம்: சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில், தூய்மை இயக்க முகாம் தொடங்கியது. ரயில்வே துறையில், தூய்மையான சூழலை உருவாக்க, செப்., 11 முதல், அக்., 2 வரை, ‘ஸ்வச்தா ஹி சேவா’ முகாம் நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில், நேற்று, முகாம் தொடங்கியது. அதில், கோட்ட மேலாளர் சுப்பாராவ் தலைமையில், ரயில்வே அலுவலர்கள், பணியாளர்கள், ‘ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்’ என, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், ரயில்வே பாதையிலுள்ள குப்பை சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, தூய்மையாக பராமரிப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், பயணியருக்கு வினியோகிக்கப்பட்டன. சேலம் கோட்டத்திலுள்ள, பெரிய ஸ்டேஷன்களில் சேகரிக்கப்படும் குப்பை, மறுசுழற்சி செய்யும் வசதியுடைய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.

advertisement by google

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ ஆணைமடுவு அணைக்கு உபரிநீர்: எம்.பி.,யிடம் வலியுறுத்தல்

advertisement by google

வாழப்பாடி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., – எம்.பி., கவுதமசிகாமணி, ஏற்காடு சட்டசபை தொகுதி, வாழப்பாடி, பேளூர் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் திறந்த வேனில் சென்று, ஓட்டுப்போட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, புழுதிக்குட்டை ஆணைமடுவு அணைக்கு, மேட்டூர் காவிரி உபரிநீரை கொண்டு வர, முயற்சி மேற்கொள்ள, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைப்பதாக, அவர் தெரிவித்தார். தொடர்ந்து, காட்டுவேப்பிலைப்பட்டி, சென்றாயன்பாளையத்தில், கருணாநிதி பிறந்தநாள் விழா கல்வெட்டை திறந்துவைத்து, தி.மு.க., கொடியேற்றினார்.

advertisement by google

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ கண்டக்டர் இல்லாமல் மேலும் 500 பஸ் இயக்க முடிவு

advertisement by google

சேலம்: முக்கிய நகரங்கள் இடையே, கண்டக்டர் இல்லாத, மேலும், 500 பஸ்கள் இயக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

advertisement by google

தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு, ‘1 டூ 1, பாயின்ட் டூ பாயின்ட், பைபாஸ் ரைடர், சிட்டி எக்ஸ்பிரஸ்’ பெயர்களில், முக்கிய நகரங்கள் இடையே, கண்டக்டர் இல்லாமல் இயக்க, 2018 ஜூலை, 5ல், 510 பஸ்கள் வழங்கப்பட்டன. அதில், பயணிக்க விரும்புவோர், நேர கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிக்கெட் பெற்று, பஸ்சில் ஏறினர். அப்படி டிக்கெட் எடுக்காதவர்களுக்கு, இரு கண்டக்டர்கள், பஸ்களில் டிக்கெட் வழங்கிவிட்டு, பஸ் ஸ்டாண்டிலேயே இறங்கி, வேறு பஸ்களில், டிக்கெட் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், 500 கண்டக்டர்கள் செய்ய வேண்டிய பணியை, 50 பேர் செய்தனர். இத்திட்டம், சேலம் – பெங்களூரு; ஈரோடு – கோவை, திருப்பூர்; நெல்லை – தூத்துக்குடி உள்ளிட்ட வழித்தடங்களில் வரவேற்பை கொடுத்தது. மேலும், பஸ் ஸ்டாண்டுகளில் மட்டும், பயணியரை ஏற்றுவதோடு, குறிப்பிட்ட நேரத்தில், பயண இடத்தை அடைவதால், பயணியர் மகிழ்ச்சியடைந்தனர். இத்திட்டத்தால், கண்டக்டர், டிரைவர் என, இரு பணிக்கு, தனித்தனியாக ஆட்கள் தேர்வு செய்யும் முறை ஒழிக்கப்பட்டு, இரண்டையும் ஒருவரே மேற்கொள்ள, ஆட்கள் தேர்வு செய்யும் நடைமுறை, அமலுக்கு வந்துள்ளது. தற்போது, விரைவு போக்குவரத்துக்கழகத்தில், கண்டக்டராக, 900 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், 2020ல் ஓய்வு பெற்ற பின், கண்டக்டர் பணி முழுமையாக ஒழிக்கப்படுகிறது. அதை, முன்னுதாரணமாக வைத்து, பிற போக்குவரத்துக்கழகங்கள், கண்டக்டர் பணிக்கு, ‘கல்தா’ கொடுக்க முடிவு செய்துள்ளது. அதனால், தமிழகம் முழுவதும், கண்டக்டர் இல்லாத, மேலும், 500 பஸ்களை இயக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

advertisement by google

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ?⚪” அத்திவரதரான அமைச்சர் ” அதிமுகவினர் வைத்த பேனரால் பரபரப்பு :

திருமங்கலத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர் .பி . உதயகுமாரை, அத்திவரதரே என வாழ்த்தி பெயரிடப்பட்ட பிளக்ஸ் பேனரை அதிமுகவினர் வைத்ததால் பரபரப்பு.
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பெயரை விளையாட்டுத்துறை அமைச்சகம்
பரிந்துரை!

பத்ம பூஷண் விருதுக்கு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பெயரை விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை!

பத்ம விபூஷண் விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பெயரும், பத்ம பூஷண் விருதுக்கு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பெயரும் பரிந்துரை!

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

?ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆக. 20-ம் தேதி, அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறை வந்தது ; குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டது.

?ஆனால், தற்போது அவரது சிறைவாசத்தை நீட்டிக்க விரும்புகிறது – கபில்சிபல்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: BREAKING

⭕⭕பெண் தொழிலதிபர் ரீட்டாவின் உயிரிழப்பிற்கு தொழில் நஷ்டம்தான் காரணம் என தகவல்

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕பெண் தொழிலதிபர் தற்கொலைக்கு குடும்பத்தகராறு காரணம் என போலீஸ் விசாரணையில் தகவல்

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: BREAKING

⭕⭕தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா செயல்பட உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை

ஓ.ராஜா தலைமையில் உள்ள இடைக்கால நிர்வாகக்குழு செயல்படவும் தடை: உயர்நீதிமன்ற கிளை

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.ராஜா செயல்பட உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை!

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு ஊசி உடைந்ததால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையில் புகார் தொடர்ந்து இன்று கோவை சுகாதார துறை இணை இயக்குனர் கிருஷ்ணா நேரில் விசாரணை

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ?% கோவையில் வடமாநிலத்தவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

?% ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பிளைவுட் கடையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவானி சிங் என்பவர் பத்து ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்று விட்ட அவர், நண்பர்களான ஹரீஷ், மணிப்பால் சிங், சன்னி ஆகியோரின் அறையில் தங்கி வேலை தேடி வந்துள்ளார்.

?% இந்த நிலையில் ஹரிஷின் அறைக்கு யாரும் இல்லாத நேரத்தில் சென்ற அவரது நண்பர் ஒருவர், அங்கு பவானி சிங்கின் உடமைகளில் துப்பாக்கி ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, ஹரிஷின் அறைக்கு சென்ற போலீசார் துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். துப்பாக்கியை வைத்திருந்த பவானி சிங்கை போலீசார் தேடி வருகின்றனர்.

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: JUSTIN

⭕⭕கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ தோனி ஓய்வு பெறுவதாக வரும் செய்திகள் வதந்தி: அவரது மனைவி ட்விட்

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு பெறுவதாக வரும் செய்திகள் வதந்தி என அவரது மனைவி அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தோனியின் மனைவி சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அதெல்லாம் வதந்திகள்’ என குறிப்பிட்டுள்ளார்.

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ விருதுநகர் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த 2 காவலர்களை வைத்து டிக் டாக் வீடியோ எடுத்த 5 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த 2 காவலர்களை வைத்து டிக் டாக் வீடியோ எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு சென்ற போலீசாரை வைத்து டிக் டாக் வீடியோ எடுத்த மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க பொதுமக்களுக்கு விதித்த காலக்கெடுவை நீட்டிக்க சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க பொதுமக்களுக்கு விதித்த காலக்கெடுவை நீட்டிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக ஆணையர் தெரிவித்துள்ளார். அக்டொபர் இறுதிக்குள் கெடு அறிவித்திருந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று காலத்தை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ சத்தியமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஆவணங்கள் பதிவு செய்ய லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்துகின்றனர்.

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ சென்னை மணலியில் தண்ணீர் லாரி கவிழ்ந்த விபத்தில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

சென்னை: சென்னை மணலியில் தண்ணீர் லாரி கவிழ்ந்த விபத்தில் 9ஆம் வகுப்பு மாணவன் ஷ்யாம் உயிரிழந்தான். மணலி பெரியார் நகர் சாலையில் தண்ணீர் லாரி கவிழ்ந்ததில் லாரியில் லிப்ட் கேட்டு சென்ற மாணவன் உயிரிழந்தான்.

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணிநேரம் விசாரணை

டெல்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணிநேரம் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ஐஸ்வர்யாவிடம் அதிகாரிகள் 8 மணிநேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டின் பேரில் செப்டம்பர் 3-ம் தேதி டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டார்.

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ ஜாமீனில் வெளியே சென்ற கைதியுடன் மது அருந்திய உதவி ஜெயிலர் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்

மதுரை: ஜாமீனில் வெளியே சென்ற கைதியுடன் மது அருந்திய உதவி ஜெயிலர் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக் கைதி முத்துகிருஷ்ணன் ஜாமீனில் வெளிவந்த நிலையில் அவருடன் போலீசார் மது அருந்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ பழங்குடி சமூகத்தை சேர்ந்த மாணவர் சந்திரனுக்கு கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்க்கை அளிக்க உத்தரவு

சென்னை: பழங்குடி சமூகத்தை சேர்ந்த மாணவர் சந்திரனுக்கு கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்க்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்திய பின் மாணவர் சந்திரனுக்கு கால்நடை மருத்துவ படிப்பில் இடம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் பழங்குடிப்பிரிவில் முதலிடம் பிடித்தும் சேர்க்கைக் கலந்தாய்வுக்கு சந்திரன் அழைக்கப்படவில்லை. 2 வாரங்களுக்குள் மாணவர் சந்திரனுக்கு கால்நடை மருத்துவப்படிப்பில் சேர்க்கை அளிக்குமாறு கால்நடை மருத்துவ பல்கலை பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ தூத்துக்குடி அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே நாணல்காட்டில் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட இசக்கி பாண்டியன் என்பவர் உடலை கைப்பற்றி முறப்பநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ செப்டம்பர் மாதத்தில் சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவன தொழிலார்களுக்கு மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு

சென்னை: செப்டம்பர் மாதத்தில் சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவன தொழிலார்களுக்கு மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14, 16, 19, 20, 21, 23, 24, ஆகிய 7 நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ சென்னையில் பேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சென்னையில் பேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அனுமதியின்றி வைத்த பேனர் சுபஸ்ரீ என்பவரின் வாழ்க்கையை காவு வாங்கி இருக்கிறது, அவருக்கு என் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் ஸ்டாலின் கூறினார்.

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ ஜிஎஸ்டி மோசடி குறித்து நாடு முழுவதும் 336 இடங்களில் வருவாய் நுண்ணறிவு பிரிவினர் சோதனை

டெல்லி: ஜிஎஸ்டி மோசடி குறித்து நாடு முழுவதும் 336 இடங்களில் நுண்ணறிவு, வருவாய் நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். ரூ.920 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

⭕⭕ஊடகதளம்
[9/13, 6:40 AM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?♨வீடுகளில் மழைநீருடன் கழிவுநீர் மக்கள் தவிப்பு..

?♨12/09 /2019 சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் இன்று மாலை 5 மணி முதல் கனத்த மழை பெய்தது இதன் காரணமாக அங்குள்ள சந்தப்பேட்டை ஏரியின் கதவணை பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் அப்படியே வெளியேறி இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தாழ்வான வீடுகளில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து புகுந்ததால் மக்கள் அவதி கடும் துர்நாற்றம் வீசுகிறது, மாலை 6 மணி முதல் மின்சாரம் துண்டிப்பு இருளின் துர்நாற்றத்தில் அச்சத்துடன் தவித்து வரும் மக்கள்

?♨இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ஏரி கதவணை பராமரிப்பு செய்யாததாலும் தண்ணீர் செல்லும் நீரோடைகள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டி உள்ளதால் தண்ணீர் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்து உள்ளது என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்

WinmeenNews.com?♨சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

winmeenNews.com?♨கடும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரத்துறையினர் தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

winmeenNews.com?♨மழைநீரின் கழிவுநீரும் அப்புறப்படுத்த போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்…

winmeenNews.com?♨ஊடகதளம்

advertisement by google

Related Articles

Back to top button