உலக செய்திகள்கல்விதொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரி விளம்பரங்கள்

கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் புதிய மருந்தை உருவாக்கியுள்ளது?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ள அமெரிக்கா…..

advertisement by google

புதிய மருந்தை உருவாக்கி உள்ளது.

advertisement by google

அந்த மருந்தில் சிகிச்சை அளிப்பதற்கு விரைவில் அங்கீகாரம் வழங்க திட்டமிட்டுள்ளது.

advertisement by google

சீனாவில் டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் மிக குறைந்த நாட்களில் உலகம் முழுதும் பரவி விட்டது.

advertisement by google

உலகம் இதுவரைசந்திக்காத ஒரு நிலையை இப்போது, கத்தியின்றி, ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகிறது என்ற தமிழ் கவிதைக்கு எடுத்துக்காட்டாக இச்சம்பவம் அமைந்துள்ளது.

advertisement by google

உலகில் ஏழை, பணக்காரன், சாதி, மதம், இனம், மொழி என எந்த பாகுபாடும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக உலகை சிதைத்து வருகிறது கொரோனா வைரஸ்.

இதற்கு வளரும் நாடுகளை காட்டிலும் வளர்ந்த நாடுகளே மிக மோசமான அழிவை சந்தித்துள்ளன

குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் தான் தினமும் அடக்கம் முடியாத அளவிற்கு உடல்கள் குவிந்து வருகின்றன.

உலகளவில் கொரோனாவால் மொத்தம் 2,30,000 பேர் மரணம்.. அமெரிக்கா, இங்கிலாந்தில் நிலைமை மோசம்அமெரிக்கா கடும் போராட்டம்

இந்நிலையில் கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் அமெரிக்கா இன்னும் மோசமான அழிவை சந்திக்கும் அபாயத்தில் உள்ளது.

இதனால் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் உள்ள அமெரிக்கா பரிசோதனை அளவில் உள்ள மருந்துகளை கூட அவசர கால சூழலில் பயன்படுத்தி வருகிறது.

ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைஇந்த சூழலில் அமெரிக்கா கொரோன வைரசுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருந்தை கண்டுபிடித்துள்ளது

அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் ரெமெடிசிவிர் மருந்து தொற்று நோயில் இருந்து நோயாளிகளை விரைவாக காப்பதாக பரிந்துரைந்துள்ளது.

இந்த மருந்தை வைத்து நோயாளிகளிடம் நடத்திய சோதனையில் விரைவில் மீட்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட கிளினிக்ல் டிரெய்லில் ல் 10 நாள் சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள் 5 நாளில் குணமானதாக இந்திய வம்சாவளி டாக்டர் அருணா சுப்பிரமணியன் தெரிவித்தார்

அமெரிக்கா ஒப்புதல்எனினும் இதுவரை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிரவாகம் எந்த ஒரு மருந்துக்கும் இதை வைத்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று ஒப்புதல் அளிக்கவில்லை. அவசர கால சூழலுக்கு சில மருந்துகளை பயன்படுத்தலாம் என்று அறிவித்து வருகிறது.

அந்த வகையில் ரெமெடிசிவிர் மருந்தை பயன்படுத்தலாம் என்று அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பேச்சுவார்த்தை நடக்கிறதுஇது தொடர்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அளித்துள்ள அறிக்கையில் ரெமெடிசிவிர் மருந்து தயாரிப்பாளரான கிலியட் சயின்ஸ் நிறுவனத்திதுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

ரெமெடிசிவர் மருந்துகள் கொடுக்கப்பட்ட நோயாளிகள் மற்ற நோயாளிகளை காட்டிலும் வேகமாக குணம் அடைந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அண்மையில் அதிபர் டிரம்பை சந்தித்த டாக்டர் அந்தோணி பாசி , கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கான நேரத்தை குறைப்பதில் ரெமெடிசிவிர் மருந்து ஒரு குறிப்பிட்ட தெளிவான நேர்மறையான விளைவை கொண்டிருப்பதாக கூறினார்

advertisement by google

Related Articles

Back to top button