தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்வரலாறு

தண்ணியிலே ஓடும் வண்டி✍️பெட்ரோலுக்கு மாற்றாக200 கிமீ மைலேஜ் தரும் ஹைட்ரஜன் இன்ஜின் ஜப்பானை வியக்க வைத்த தமிழன்

advertisement by google

ஹைட்ரஜன்எஞ்சின்…???வியக்கவைத்த தமிழன்..பெட்ரோலுக்கு மாற்றாக 200 கி.மீ., மைலேஜ் தரும் ஹைட்ரஜன் இன்ஜின்! ஜப்பானை வியக்க வைத்த திருப்பூர் தமிழன்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
பெட்ரோலுக்கு பதிலாக ஹைட்ரஜன் இதற்கு மாற்றாக, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசலுக்கு பதிலாக வாகனங்களில் ஹைட்ரஜனை பயன்படுத்துகின்றனர். ஏனெனில், ஹைட்ரஜன், கார்பன் இல்லாமல் ஆக்ஸிஜனை வெளியிடக்கூடியது.அதனால்தான் ராக்கெட்டுகளுக்கு, ஹைட்ரஜனை பயன்படுத்துகின்றனர். இருந்தும், உலக அளவில் ஹைட்ரஜன் பயன்பாடு அதிகரிக்காததற்கு காரணம் அதிக விலை, இருப்பு வைப்பதிலும், ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்துக்கு கொண்டு செல்வதிலும் உள்ள பிரச்னைகள்.இதற்கு நிரந்தர தீர்வு காண, பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வரும் நிலையில், 11ம் வகுப்பு மட்டுமே படித்த கோவையில் வசிக்கும் சவுந்தர்ராஜன் குமாரசாமி, இதற்கு தீர்வு கண்டு அசத்தியுள்ளார்.

advertisement by google

இதுதான் சவுந்தர்ராஜனின் கண்டுபிடிப்பு:

advertisement by google

இவருடைய கண்டுபிடிப்பின்படி, வாகனத்தில் உள்ள இன்ஜினே தேவையான ஹைட்ரஜனை தயாரித்துக் கொள்ளும். அதுதான், இவர் உருவாக்கிய, ‘சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் ஹையர் எபிசியன்ஸி இன்ஜினின்’ சிறப்பு.இந்த கண்டுபிடிப்பை பார்த்து, வியந்து போன ஜப்பான் அரசு, அவர்கள் நாட்டில் அதனை வெளியிட உரிய அனுமதி வழங்கி கவுரவித்துள்ளது.சவுந்தர்ராஜன் குமாரசாமி கூறியதாவது:வெள்ளகோவில்தான் சொந்த ஊர். டெக்ஸ்டைல் மிஷின் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறேன். சிறு வயதில் இருந்தே, புதுவிதமான மிஷின்கள் தயாரிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். கோவையிலுள்ள, பி.எஸ்.ஜி.,தொழில்நுட்ப கல்லுாரியில், எங்கள் ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.

advertisement by google

கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து, கடின உழைப்பினால் இந்த ஹைட்ரஜன் இன்ஜினை கண்டுபிடித்துள்ளேன். இதனை, பைக், கார், பஸ், லாரி, டிரக், கப்பல், எலக்ட்ரிக் பவர் ஜெனரேட்டர் என, அனைத்திலும் பயன்படுத்தலாம்.பெட்ரோல் பங்க் போன்று, வாகனங்களில் ஹைட்ரஜன் நிரப்புவதற்கு, ஒரு ஹைட்ரஜன் பில்லிங் ஸ்டேஷன் அமைக்க குறைந்தது, 15 கோடி ரூபாய் வரை செலவாகும். அதுவும், நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கிலோ வரை மட்டுமே சேமிக்க முடியும்.

advertisement by google

அதை வைத்து, 100 முதல் 150 கார்களுக்கு மட்டும்தான் ஹைட்ரஜன் நிரப்ப முடியும். இந்தியாவில் இது போன்ற பில்லிங் ஸ்டேஷன் எதுவும் இல்லை.டிஸ்ட்டல் வாட்டர் போதும்!நான் கண்டுபிடித்துள்ள இந்த இன்ஜினுக்கு, பில்லிங் ஸ்டேஷன் எதுவும் தேவையில்லை. பேட்டரிகளில் பயன்படுத்தும் டிஸ்ட்டல் வாட்டர் நிரப்பினாலே போதும். அதிலிருந்து, ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் தன்மை கொண்டது.அதேசமயம், சுற்றுச்சூழல் மாசடையாத வகையில் ஆக்ஸிஜன் மற்றும் நீராவியை மட்டுமே வெளிவிடும். 100 சி.சி.,கொண்ட ஒரு பைக்கில், 10 லிட்டர் டிஸ்ட்டல் வாட்டர் ஊற்றினால், 1 கிலோ ஹைட்ரஜனை உற்பத்தி செய்து விடும். இன்ஜின் திறன் அதிகரிக்கும்.

advertisement by google

அதன் மூலம், 200 கி.மீ., வரை மைலேஜ் கிடைக்கும். இந்த கண்டுபிடிப்புக்கு, உரிய உரிமம் பெற்றுவிட்டோம். அடுத்த, மூன்று மாதங்களுக்குள் ஜப்பான் நாட்டின் அனுமதியுடன், அங்கு அறிமுகம் செய்யவுள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

advertisement by google

சவுந்தர்ராஜன் குமாரசாமியை, 83003 99893 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 100 சி.சி.,கொண்ட ஒரு பைக்கில், 10 லிட்டர் டிஸ்ட்டில்லரி வாட்டர் ஊற்றினால், 1 கிலோ ஹைட்ரஜனை உற்பத்தி செய்து விடும். அதன் மூலம், 200 கி.மீ., வரை மைலேஜ் கிடைக்கும்.

advertisement by google

‘சுற்றுச்சூழல் மாசு குறையும்’

என்னுடைய இந்த முயற்சி வெற்றியடைந்தால், உலக அளவில் சுற்றுச்சூழல் மாசடைவதை பெருமளவு குறைக்க முடியும். ராயல்ட்டி அடிப்படையில் இந்த தொழில்நுட்பம், மோட்டார் நிறுவனங்களுக்கு, விற்பனை செய்யப்பட உள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button