பயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்

சுவையான காலிபிளவர் குழம்பு செய்முறை விளக்கம் * அசத்தப்போகும் மதிய உணவு *-முழுவிளக்கம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

காலிபிளவர் குழம்பு

advertisement by google

15 minதயாரிப்பு நேரம்

advertisement by google

35 minசமைக்கும் நேரம்

advertisement by google

50 minஆயத்த நேரம்

advertisement by google

5பரிமாறும் அளவு

advertisement by google

சமையல் பிரபலமான பகுதி : தமிழ்நாடு

advertisement by google

சமையல் வகை / ரெசிபி வகை : குழம்பு வகைகள்

advertisement by google

சாப்பிடும் நேரம் : மதிய உணவு

சுவையான காலிபிளவர் குழம்பு, எளிய காலிபிளவர் குழம்பு, காலிபிளவர் குழம்பு செய்யும் முறை, பிரபலமான காலிபிளவர் குழம்பு, காலிபிளவர் குழம்பு செய்முறை, காலிபிளவர் குழம்பு சமையல் குறிப்புகள், காலிபிளவர் குழம்பு செய்வது எப்படி.

உங்கள் சுவையை தூண்டும் காலிபிளவர் குழம்பு சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான காலிபிளவர் குழம்பு ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

 காலிபிளவர் – 1,

 உருளைக்கிழங்கு – 3,

 தக்காளி – 4,

 பச்சைப் பட்டாணி – ¼ கோப்பை,

 பெரிய வெங்காயம் – 2,

 உப்பு, கொத்துமல்லி – தேவையான அளவு,

 அரைக்க:

 மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி,

 தனியாத்தூள் – ½ தேக்கரண்டி,

 சோம்பு – ½ தேக்கரண்டி,

 இஞ்சி – ஒரு துண்டு,

 பூண்டு – 6 பற்கள்,

 தேங்காய்த் துருவல் – 3 மேசைக்கரண்டி,

 பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி.

உணவு செய்முறை : காலிபிளவர் குழம்பு

Step 1.

முதலில், காலிபிளவரைத் தனித்தனிப் பூவாக உதிர்த்து உப்பு நீரில் போட்டுக் கழுவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கைத் தோல் சீவி, சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

Step 2.

பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகப் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

Step 3.

பிறகு, பாத்திரத்தை வைத்து, எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி, காலிபிளவர், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, தேவையான உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

Step 4.

பிறகு, இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து, காலிபிளவர், உருளைக் கிழங்கு, பட்டாணி வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.

Step 5.

பின்னர், அரைத்த விழுதைப் போட்டு, ஒரு கோப்பை தண்ணீரை ஊற்றி மீண்டும் கொதிக்க விடவேண்டும்.

Step 6.

10 நிமிடம் குழம்பு கொதித்ததும், கொத்துமல்லியைத் தூவி இறக்குங்கள். சுவையான காலிபிளவர் மசாலா குழம்பு தயார்

advertisement by google

Related Articles

Back to top button