இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை341ஆக இருந்த கொரனா பாதிப்பு3 நாட்களில் 649 ஆக அதிகரிப்பு ?

advertisement by google

இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 341 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, மூன்றே நாட்களில் 606ஆக அதிகரித்துள்ளது.

advertisement by google

இந்தியாவில் முதன்முறையாக ஜனவரி 30 ஆம் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

advertisement by google

சீனாவின் ஊஹானில் படித்து வந்த மாணவருக்கு, கேரளாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

advertisement by google

அடுத்த 4 நாட்களில் அதாவது பிப்ரவரி 3 ஆம் தேதி மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆனது.

advertisement by google

இவர்கள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்கு பின் நலம் பெற்று வீடு திரும்பபினர்.

advertisement by google

இதையடுத்த சுமார் ஒருமாதம் இந்தியாவில் வேறு யாருக்கும் கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டவில்லை.

advertisement by google

இந்நிலையில் மார்ச் 4 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கேரளாவில் குணமடைந்த மூவர் உட்பட இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

advertisement by google

அடுத்தடுத்த நாட்களில் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, மார்ச் 18 ஆம் தேதி 158 ஆக உயர்ந்தது.

கடந்த 22 ஆம் தேதி இது அப்படியே இரட்டிப்பாக அதிகரித்து, இந்தியாவில் கொரோனா பாதிப்பு 341 ஆனது.

அடுத்த 3 நாட்களில் 567 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் புல்லட் ரயில் வேகத்தில் கொரோனா பரவல் காணப்படுகிறது.

கேரளாவில் 109 பேரும், மகாராஷ்டிராவில் 101 பேரும், கர்நாடகாவில் 41 பேரும், குஜராத்தில் 33 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் தலா 35 பேரும், ராஜஸ்தானில் 32 பேரும், டெல்லியில் 31 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் 29 பேருக்கும். தமிழகத்தில் 23 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லடாக்கில் 13 பேரும், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 9 பேரும், சண்டிகர் மற்றும் காஷ்மீரில் தலா 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மற்றும் இமாச்சலில் தலா மூவரும், ஒடிசாவில் இருவரும், சட்டீஸ்கர், மிசோராம், மணிப்பூர் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 47 பேர் வெளிநாட்டினர் ஆவர்.

தமிழகத்தில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததை அடுத்து நாடு முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப், கர்நாடகா, இமாச்சல், குஜராத், டெல்லி மற்றும் பீகாரில் தலா ஒருவரும், மகாராஷ்டிராவில் இருவரும் கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

advertisement by google

Related Articles

Back to top button