இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சிஏஏ சட்டத்தை ஏன் ஆதரித்தீர்கள்?இஸ்லாமிய பெண் கேட்ட கேள்வியால் திணறிப் போன செல்லூர்ராஜு?

advertisement by google

♦”சிஏஏ சட்டத்தை ஏன் ஆதரித்தீர்கள்?” – இஸ்லாமிய பெண் கேட்ட கேள்வியால் திணறிப்போன செல்லூர்ராஜூ

advertisement by google

?விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் நிலையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

advertisement by google

?இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜியும், மாவட்ட ஆட்சியர் கண்ணனும் கலந்துக் கொண்டனர்.

advertisement by google

?அதன் பிறகு, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, இஸ்லாமிய பெண் ஒருவர் கூட்டுறவுக் கடனை பெறுவதற்காக மேடைக்கு வந்தபோது, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள் என்றும், சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள் நாங்கள் வாக்களிக்காவிட்டால் உங்களால் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா என அமைச்சர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.

advertisement by google

?மேலும், இந்த கூட்டத்தின் போது CAA, NRC போன்ற சட்டங்கள் பற்றி ஏன் பேசவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார். இது அங்கிருந்த அ.தி.மு.க தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

advertisement by google

?இஸ்லாமியப் பெண்ணின் கேள்வியை அடுத்து, இரு அமைச்சர்களும் இந்த சட்டங்களால் இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பதிலளித்திருக்கிறார்கள்.

advertisement by google

?இதனைத் தொடர்ந்து அங்கு வாக்குவாதம் நிலவியது. அமைச்சர் முன்னிலையில் பெண் ஒருவர் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

advertisement by google

Related Articles

Back to top button