இந்தியாதொழில்நுட்பம்

ஜியோவை ஒழிக்க திட்டமா?ஏர்டெல் தந்திரம்

advertisement by google

♦ஜியோவை ஒழிக்க திட்டமா?

advertisement by google

?ஏர்டெல் நிறுவனம், பாரதி ஆக்ஸா காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து ரீசார்ஜ் பேக்குடன் கூடுதல் சலுகையாக 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியையும் வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

advertisement by google

?ஏர்டெலின் ரூ.599 ப்ரிபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.

advertisement by google

?அத்துடன் தற்போது பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியையும் கூடுதலாக வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்.

advertisement by google

?இந்த சலுகையைப் பெற வாடிக்கையாளர்கள் முதலில் எஸ்எம்எஸ், ஏர்டெல் செயலி அல்லது ஏர்டெல் விற்பனையாளர் மையம் மூலம் ரீசார்ஜ் செய்த பின் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

?பின்னர் ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும்போதும் அந்த காப்பீடு அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

advertisement by google

?தற்போது இந்த சலுகை தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்தியா முழுவதும் வழங்கப்பட உள்ளது.

advertisement by google

?இந்த இன்சூரன்ஸ் திட்டம் 18 முதல் 54 வயதுடைய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் எனவும், ஏர்டெல்லின் இந்த லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்துக்கு எந்த ஒரு காகிதப் பணிகளோ அல்லது மருத்துவ பரிசோதனையோ தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

?மேலும், காப்பீட்டு சான்றிதலும் உடனடியாக டிஜிட்டல் முறையில் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் கோரினால் காப்பீட்டின் நகல் வீட்டு முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

?ஜியோவின் இலவச சேவை ரத்து செய்யப் பட்ட நிலையில் போட்டி நிறுவனங்கள் வெகுண்டெழுந்து பல சலுகைகளை அறிவித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

advertisement by google

Related Articles

Back to top button