இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கணவனால் அடித்து கொல்லபட்ட டிக்டாக் ராஜேஸ்வரியுடன் தொடர்பிலிருந்த இளைஞர்களை விசாரிக்க முடிவு?

advertisement by google

advertisement by google

கணவனால் அடித்து கொல்லப்பட்ட டிக்டாக் ராஜேஸ்வரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்?

advertisement by google

இளைஞர்களை விசாரிக்க முடிவு

advertisement by google

செல்போன் எண்களை கைப்பற்றி அதிரடி

advertisement by google

பண்ருட்டி: டிக்டாக் ராஜேஸ்வரியுடன் தொடர்பில் உள்ள இளைஞர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவு செய்யும் நோக்கத்தோடு, வெகுஜன மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. முதலில் பேஸ்புக், டிவிட்டரில் கருத்து போடுவது படங்களை அதிகளவில் இருந்தது.

advertisement by google

பின்னர் பொழுதுபோக்கு என்ற வகையில் டிக்டாக், ஹலோ போன்ற செயலிகள் வருகையால், சமூகம் சீரழிய துவங்கி விட்டது. அதில் இருந்து மீள முடியாமல் போதையை போன்று அடிமையாக கிடக்கின்றனர்.

advertisement by google

இளைஞர்கள் மட்டுமல்லாமல், குடும்ப பெண்களும் இதற்கு பலிகடாவாகி வருகின்றனர். டிக்டாக் செயலில் பாட்டுக்கு நடமாடுவது, வசனத்துக்கு நடிப்பதிலும் ஈடுபடுகின்றனர்.

அவரது அழகை புகழ்ந்தும், பாராட்டியும் கமென்ட்டுகள், லைக்குகள் வர ஆரம்பித்ததும். இன்னும் கொஞ்சம் போகலாமே என அறைகுறை ஆடையுடன் நடனமாடுவது, கிளாமராக நடிப்பது என பாதை மாறிப்போனது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண் டிக்டாக் மோகத்தால் தனது உயிரையே இழந்துள்ளார்.
இதில் கணவனே, தனது காதல் மனைவியை கொன்றது தெரியவந்தது.

விசாரணையில், டிக்டாக்கில் பாடல் பாடியும், பல ஆண்களுடன் சேர்ந்து நடித்த காட்சிகளையும் பதிவிட்டுள்ளார்.

இதனால், அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுவே கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தது.

கொலை நடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு கூட டிக்டாக் வீடியோ ஒன்று ராஜேஸ்வரி வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் காதலர் தினத்தை வாழ்த்தி பதிவு போட்டுள்ளார். ராஜேஸ்வரியின் டிக்டாக் பதிவில் சுமார் 550க்கும் மேற்பட்ட பதிவுகள் இருந்துள்ளது.

இதில் பல பதிவுகள் காதலை வெளிப்படுத்தும் விதமாகவும், படு கிளாமரான பாடலாகவும் இருந்தது.

ஒரு காட்சியில் சில இளைஞர்கள் அவரை பிடித்து படுக்கையில் போட்டு அமுக்குவது போன்ற காட்சிகளை பரவவிட்டு, அது ராஜேஸ்வரிதான் என கமெண்ட் போட்டுள்ளனர். இதன் உண்மை தன்மை குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன்காரணமாக தமிழகம் முழுவதுமாக ராஜேஸ்வரியின் டிக்டாக் செயலியின் ஐ.டி.யை கண்டுபிடித்து காட்சிகளை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். டவுன்லோடு செய்து சமூக வலைதளங்களில் பரவவிட்டு வருகின்றனர்.

அடுத்தகட்டமாக ராஜேஸ்வரியுடன் தொடர்பில் இருந்தவர்களை பிடித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அவருடன் படலுக்கு நடனம் ஆடும் இளைஞர்களையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளனர்.

ராஜேஸ்வரியை கணவனை கொலை செய்ய தூண்டுதலாக இருந்ததாக அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

அனைவரின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படவுள்ளது.

இதில் சம்மந்தப்பட்ட இளைஞர்கள் இது போன்று வேறு யாருடன் தொடர்பில் இருந்து வருகின்றனர் என்பதை கண்டுபிடித்து சம்மந்தப்பட்டவர்களின் குடும்பத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button