கோவில்பட்டியில் ரயில்வே நிலையத்திற்கு பூட்டு போட அனுமதி தரக் கோரி பூட்டுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்✍️ முழுவிபரம் – விண்மீன்நியூஸ்
ரயில்வே நிலையத்திற்கு பூட்டு போட அனுமதி தரக் கோரி பூட்டுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் ரயில்வே நிலையத்தில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன் அனைத்து ரயில்களும் நின்று செல்வது வழக்கம். ஆனால் தளர்வுக்கு பின் ரயில் சேவை தொடங்கினாலும் ஒரே ஒரு ரயில்வே தவிர மற்ற ரயில்கள் அனைத்தும் நின்று செல்வதில்லை என்றும், கேட்டால் சிறப்பு ரயில் என்று கூறி அதிகாரிகள் தட்டிக் கழிப்பதாகவும், எனவே பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ரயில்வே நிலையம் வெறும் காட்சி பொருளாக இருப்பதால், அதனை பூட்டி விட்டு, கடம்பூர் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு இடமில்லாமல் அந்த கட்டிடங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால், ரயில்வே நிலையத்தில் உள்ள அறைகளை வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாகத்திற்கு இட ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி தலைமையில் மாவட்ட செயலாளர் முத்து மற்றும் நிர்வாகிகள் கையில் பூட்டுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் ஆகிய முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கை மனு மற்றும் ரயில்வே நிலத்திற்கு பூட்டு போட பூட்டுகளையும் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயாவிடம் அளித்தனர்.
அந்த மனுவில் கடம்பூரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் விஏஓ அலுவலகம் கட்ட பலமுறை காங்கிரஸ் கட்சி சார்பில்மனு அளிக்கப்பட்டுள்ளது , பலமுறை போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடம்பூர் வருவாய் ஆய்வாளர் உட்கோட்டத்தில் கடம்பூர். சங்கரப்பேரி.குப்பணாபுரம் .ஒட்டுடன்பட்டி.கே.சிதம்பராபுரம் .திருமலாபுரம். காப்புலிங்கம்பட்டி. ஓம்நமாக்குளம். இளவேளங்கால். தென்னம்பட்டி. பன்னீர்குளம். மேலப்பாறைபட்டி. சுந்தரேஸபுரம். குருமலை. சவலாப்பேரி .ஆசூர். சிவஞானபுரம் ஆகிய 17 வருவாய் ஊர்கள் உள்ளன. .கடந்த பத்து ஆண்டுகளாக கடம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கடம்பூர் விஏஓ அலுவலகம் அருகில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதற்கான வாடகையை அங்கு பணியாற்றுகின்ற ஆர்.ஐ மற்றும் விஏஓ ஆகியோர் தாங்கள் சொந்த பணத்தில் வாடகை செலுத்துகின்றனர். பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே போன்று கடம்பூரில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் தவிர வேறு எந்த ஒரு ரயிலும் தற்பொழுது நிற்க வில்லை,பல ஆண்டுகளாக நின்று சென்ற அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் தூத்துக்குடி மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது கொரோனா வை காரணம் காட்டி எந்த ஒரு ரயில்களும் நிற்கவில்லை.ஆகவே எந்த ரயிலும் நிற்காத கடம்பூரில் பல கோடி யில் ரயில் நிலையம் தேவையில்லை என மக்கள் செல்லுகிறார்கள். ஆகவே கடம்பூர் ரயில் நிலையத்தை கண்ரோல் ரூம் தவிர மற்ற புதிய ரயில் நிலையத்தை வருவாய் ஆய்வாளர் அலுவலகமாக மாற்றி அதை பூட்டு போட்டு சாவியை வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் வரும் டிசம்பர் மாதம் 22 ஒப்படைக்கும் போராட்டம் காங்கிரஸ் கட்சி சார்பாக நடந்த உள்ளதாகவும், அதற்கு அனுமதி தர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.