இந்தியாஉலக செய்திகள்

ஆசியாவின் முதல்பெரும் பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் முகேஷ் அம்பானி?

advertisement by google

♦ஆசியாவின் முதல் பெரும் பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் முகேஷ் அம்பானி

advertisement by google

?பங்குச்சந்தைகள் சரிவு எதிரொலியாக முகேஷ் அம்பானி ஆசியாவின் முதல் பெரும் பணக்காரர் அந்தஸ்தை இழந்தார். அலிபாபா குழுமத்தின் ஜேக் மா மீண்டும் முதலிடம் பிடித்தார்.

advertisement by google

?பங்குச்சந்தைகள் சரிவு எதிரொலியாக முகேஷ் அம்பானி ஆசியாவின் முதல் பெரும் பணக்காரர் அந்தஸ்தை இழந்தார். அலிபாபா குழுமத்தின் ஜேக் மா மீண்டும் முதலிடம் பிடித்தார்.

advertisement by google

?கொரோனா வைரஸ் பீதியால் சர்வதேச முதலீட்டாளர்கள் சந்தை அபாயங்களில் இருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் பங்குகளை விற்றுத் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். இதனால் உலக அளவில் நிறுவனப் பங்குகளின் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டிருக்கிறது.

advertisement by google

?உலக நிலவரங்களால் இந்திய பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டுள்ளன. கடந்த திங்கள்கிழமை அன்று ஒரே நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,942 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. அதனால் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் சரிவடைந்தது.

advertisement by google

?பங்குச்சந்தைகளின் சரிவால் உலக அளவில் பெரும் கோடீஸ்வரர்களின் நிகர சொத்து மதிப்பும் கடுமையாக குறைந்து இருக்கிறது. இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக முகேஷ் அம்பானி இருந்து வருகிறார். பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்தான் (ஆர்.ஐ.எல்) முதலிடத்தில் இருக்கிறது.

advertisement by google

?ஆசியாவிலும் முதல் பெரும் பணக்காரராக இருந்த அவர் பங்குச்சந்தை வீழ்ச்சியால் இப்போது அந்த அந்தஸ்தை இழந்து இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளார்.

advertisement by google

?அலிபாபா குரூப் ஹோல்டிங் நிறுவனர் ஜேக் மா சிறிய இடைவெளிக்குப் பின் மறுபடியும் முதலிடத்தை கைப்பற்றி இருக்கிறார். அவரது நிகர சொத்து மதிப்பு 4,450 கோடி டாலராக (சுமார் ரூ.3.25 லட்சம் கோடி) உள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பைக் காட்டிலும் இது 260 கோடி டாலர் அதிகமாகும்.

?பங்குச்சந்தைகள் கண்ட சரிவால் திங்கள்கிழமை அன்று மட்டும் அவருடைய சொத்து மதிப்பு 580 கோடி டாலர் சரிந்தது. மும்பை பங்குச்சந்தையில், கடந்த திங்கள்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது முகேஷ் அம்பானியின் ஆர்.ஐ.எல். நிறுவனப் பங்கு ரூ.1,245-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே குறைந்தபட்சமாக ரூ.1,094.95-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.1,113.15-ல் நிலைகொண்டது. சென்ற வார இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 12.35 சதவீத சரிவாகும்.

advertisement by google

Related Articles

Back to top button