இந்தியாதொழில்நுட்பம்பயனுள்ள தகவல்

ஆதார் அட்டையுடன் பான்கார்டை இணைக்க,செப் 30வரை கெடு, இணைக்காவிட்டால் என்னவாகும்?

advertisement by google


ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைப்பது கட்டாயம்.. செப்.30ம் தேதி கெடு.. இணைக்காவிட்டால் என்னவாகும்?

advertisement by google

டெல்லி: செப்டம்பர் 30ம் தேதிக்குள் பான் கார்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் அட்டை பயனற்றதாகிவிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

advertisement by google

PAN அட்டையை ஆதார் உடன் இணைக்கும் சட்டம் 2017 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, குறிப்பிட்ட தேதிக்குள் ஆதாருடன், பான் அட்டையை சேர்க்காவிட்டால், பான் செல்லாது என்று ஒரு விதி இருந்தது.
பான்-ஆதார் இணைப்பதற்கான விதிகள் 2019 ஜூலை மாதம் வழங்கப்பட்ட பட்ஜெட்டில் திருத்தியமைக்கப்பட்டன.
அதே நேரத்தில், மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) 2019 மார்ச் 31 க்குள் செப்டம்பர் 30 வரை ஆதார் உடன் பான் இணைக்கும் தேதியை நிர்ணயித்திருந்தது. பான் அட்டையை ஆதார் உடன் இணைக்கும் புதிய விதி செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
அயோத்தி வழக்கு: அனைத்து தரப்பும் வாதங்களை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

advertisement by google

அரசு தெளிவுபடுத்துமா
அதேநேரம், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பான் கார்டை, ஆதார் உடன் இணைக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து எந்த தெளிவும் அரசு தரப்பிலிருந்து வெளியாகவில்லை. ஒருவேளை, காலக்கெடுவுக்குப் பிறகு, ஆதாருடன் இணைக்கப்பட்டால் முடக்கப்பட்ட பான் அட்டையை மீண்டும் பயன்படுத்த முடியுமா என்பதையும் அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

advertisement by google

பான் கட்டாயம்
என்ஏ ஷா அசோசியேட்ஸ் நிறுவனத்தின் கோபால் போஹ்ரா, கூறுகையில், “பான் செயல்படாத நிலையில் என்ன நடக்கும் என்பது குறித்து அரசிடமிருந்து நிலைமை தெரிவிக்கப்படவில்லை” என்றார். இது பான் இல்லாத நிலையைப் போலவே இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், பான் கட்டாயமாக தேவைப்படும் எந்த நிதி பரிவர்த்தனையையும் நீங்கள் செய்ய முடியாது.

advertisement by google

ஆதார் செயல்படுமா
ஐ.டி.ஆர் தாக்கல் செய்யும் வலைத்தளத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சோனி கூறுகையில், ‘வருமான வரிச் சட்டத்தின்படி, 2019, செப்டம்பர் 30ம் தேதிக்குள் பான் உடன் ஆதார் இணைக்கப்படுவது கட்டாயமாகும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், அது செயல்படாது’ என்றார்.

advertisement by google

காலநீட்டிப்பு
பான்-ஆதார் இணைக்க மத்திய நேரடி வரி வாரியம் செப்டம்பர் 30ம் தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது. இதை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று பட்டய கணக்காளர் நவீன் வாத்வா கூறுகிறார். பான்-ஆதார் இணைக்கும் விதி 2017ல் வந்தது. அதன்படி, 2017 ஜூலை 1ம் தேதிக்குள் பான் எண்ணுடன்-ஆதார் இணைக்க வேண்டியது அவசியம். இதன் நேரடி வரி வாரியம் அதன் காலக்கெடுவை பல முறை நீட்டித்துள்ளது. எனவே இனியும் காலநீட்டிப்பு செய்வது சந்தேகம் என்கிறார் அவர்.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button