ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தெறித்து ஓடும் மக்கள் ?வெலவெல க்கும் வத்தலகுண்டு? என்னாச்சு?


அய்யய்யோ.. ஆயிரக்கணக்கான வவ்வால்கள்.. தெறித்து ஓடும் மக்கள்.. வெலவெலக்கும் வத்தலகுண்டு.. என்னாச்சு?
திண்டுக்கல்: ஆயிரக்கணக்கான வவ்வால்கள் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பதை பார்த்ததும் வத்தலகுண்டு மக்கள் வெலவெத்து போயுள்ளனர்!
ஆய்வில் அதிர்ச்சி… தமிழகத்தில் வெளவால்களுக்கு இருந்த கொரோனா வைரஸ்.
எங்கோ சீனாவின் வூஹானில் ஆரம்பித்த தொற்று உலகமெல்லாம் பரவி நடுநடுங்க வைத்து வருகிறது.. சீனாவில் இந்த வைரஸ் உருவான போதிருந்தே எல்லாத்துக்கும் காரணம் அந்த வவ்வால்கள்தான் என்றும், அவைகளை பிடித்து அப்படியே சூப் வைத்து சாப்பிடுவதால்தான் இந்த கதி ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அப்போதிருந்தே வவ்வால்களை கண்டு மக்கள் பயப்பட ஆரம்பித்துவிட்டனர்..
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது… அதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் காணப்படுகிற 2 வகை வவ்வால்களில் “வவ்வால் கொரோனா” வைரஸ் (பேட் கோவிட்) காணப்படுகிறது… “வவ்வால் கொரோனா” வைரசுக்கும், மனிதர்களுக்கு தற்போது பரவி வருகிற கோவிட்-19 வைரஸ் தொற்று நோய்க்கு காரணமான சார்ஸ்-கோவ் 2 வைரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று தெரிவித்திருந்தனர்.
என்னதான் ஆராய்ச்சிசில் வவ்வால்களுக்கு தொடர்பு இல்லை என்று சொல்லிவிட்டாலும், இந்த அறிக்கைக்கு பிறகு மக்கள் மேலும் அதிகமாகி உள்ளனர்.. அதுவும் லிஸ்ட்டில் தமிழ்நாட்டு வவ்வாலும் உள்ளதால் மேலும் பீதியில் உள்ளனர்.. அதன் தாக்கம்தான் வத்தலகுண்டில் எதிரொலித்தது கொண்டிருக்கிறது!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, தாண்டிக்குடி மலைப்பகுதியில் நிறைய வவ்வால்கள் உள்ளன.. இந்த வவ்வால்கள் பல்லாண்டு காலமாக இங்கு வசித்து வருபவை.. எந்நேரம் வவ்வால்கள் இடும் சத்தம் இந்த பகுதி மக்களுக்கு பழகி போன ஒன்று.. அவைகளை வேற்று விலங்குகள் போல நடத்துவதும், விரட்டுவதும் இல்லை!!
கொரோனா காலத்துக்கு ஏற்ப மாறியதால் சாத்தியம்
இப்போது, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வவ்வால்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்று செய்தி வந்ததும், மக்கள் அச்சமடைந்து உள்ளனர்… வத்தலகுண்டு மஞ்சள் ஆற்றுப்படுகை அருகே ஆலமரத்தில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் எப்போதுமே இருக்கும்.. இந்த மரம்தான் அவைகளின் வசிப்பிடம்.. வழக்கமாக சாப்பாடு தேடி நைட் நேரங்களில்தான் ஊருக்குள் வவ்வால்கள் வரும்.
தினசரி நடக்கும் சம்பவம் இது என்றாலும், இப்போது என்னவோ ஆயிரக்கணக்கான வவ்வால்களை கண்டு நடுங்கி மிரண்டு உள்ளனர்.. தங்கள் பகுதியில் உள்ள வவ்வால்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என்று கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலம் காலமாக, நம் தமிழகத்தின் எத்தனையோ கிராமங்களில் இந்த வவ்வால்கள் மனிதர்களுக்கு மிக நெருக்கமானவை.. ஆலமரங்களில்தான் வவ்வால்கள் வந்து உட்காரும் என்பதால் அந்த ஆலமரத்தின் குச்சியை விறகுக்காககூட நம் மக்கள் வெட்ட துணிந்ததில்லை.. தீபாவளி சமயங்களில் இந்த கிரீச்.. கிரீச்.. வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காத கிராமங்களும் உண்டு.. இப்படி அன்னியோன்யமான உறவை தந்த இந்த வவ்வாலை பார்த்து மக்கள் மிரண்டு ஓடுவது காலத்தின் கோலம்தான்!!