இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்வரலாறுவிளையாட்டு

காலை(2.10.2019)விரிவான செய்திகள்(தமிழகம் இந்தியாஉலகம்)

advertisement by google

????விண்மீன்நியூஸ்????: winmeennews.com BREAKING NEWS LIVE

advertisement by google

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர் இர்ஃபான் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து நீக்கம்

advertisement by google

வாணியம்பாடி இர்ஃபானுக்கு அக்.9வரை நீதிமன்றகாவல் அளிக்கப்பட்டதால் சேலம் சிறையில் உள்ளார்

advertisement by google

நேரலை செய்திகள்
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

advertisement by google

Live update நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி பரப்பாடி சாலையில் ஏமன்குளம் அருகே நடைபெற்ற வாகன சோதனையில் ஆவணங்களின்றி சென்னையை சேர்ந்த மணி என்பவரது காரில் எடுத்துவரப்பட்ட ₹1 லட்சம் பணத்தை பறக்கும் படை தாசில்தார் செல்வ குமார் பறிமுதல்.
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

advertisement by google

சிக்கியது சிறுத்தை

advertisement by google

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதுக்குய்யனூர் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியது

advertisement by google

சிறுத்தையை மீண்டும் காட்டுக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

சென்னை : ஆவடி அருகே அயப்பாக்கம் ஊராட்சியில் மர்ம காய்ச்சலுக்கு இனியன்(7) உயிரிழப்பு.

கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ???ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி தொடங்கினால் பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும்- ஜெய்சங்கர்

ஜம்மு காஷ்மீரில் ஒருமுறை வளர்ச்சி தொடங்கினால் பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும் என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ???ஜியோ போன் ரூ.699-க்கு விற்பனை: முகே‌‌ஷ் அம்பானி அறிவிப்பு

தீபாவளி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு ரூ.1,500 மதிப்புள்ள ஜியோ போன் ரூ.699-க்கு விற்பனை செய்யப்படும் என முகே‌‌ஷ் அம்பானி அறிவித்து உள்ளார்.
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ???கடல் அலையில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் உடலுக்கு உணர்ச்சிமிகு அஞ்சலி செலுத்திய மகள்

கடல் அலையில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் உடலுக்கு அவரது மகள் உணர்ச்சிமிகு அஞ்சலி செலுத்தினார். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ???பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரம் மாற்றி அமைப்பு

பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ???இன்று 115வது பிறந்தநாள்- லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் மோடி, தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, சாஸ்திரியின் மகன் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ???மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, சோனியா காந்தி மரியாதை

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ???காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் தரப்பு சமரசத்தை ஏற்கவே மாட்டோம்: இந்தியா திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் தரப்பு சமரசத்தை ஏற்கவே மாட்டோம் என்று இந்தியா உறுதிபட கூறி உள்ளது.
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ???சீன தேசிய தினத்தில் ஹாங்காங்கில் பெரும் வன்முறை

சீனாவின் 70-வது ஆண்டு தேசிய தினத்தின் போது ஹாங்காங்கில் பெரும் வன்முறை வெடித்தது.
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ???சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை தொடர்ந்து, கியாஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்து இருக்கிறது.
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ???ஆப்கானிஸ்தான்: ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பாக். பயங்கரவாதிகள் உள்பட 23 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த 6 அல்கொய்தா அமைப்பினர் உள்பட 23 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ???பஞ்சாப்: போதை பொருள் கடத்தல் கும்பலுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் போலீஸ் பலி

பஞ்சாப் மாநிலத்தில் போதை பொருள் கடத்தல் கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உயிரிழந்தார்.

*
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ???செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.91,916 கோடியாக குறைந்தது

கடந்த ஆண்டு செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வருவாயுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 2.67 சதவீதம் குறைந்துள்ளது.
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ???பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ???ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தம்பிக்கு 5 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியின் தம்பியை 5 ஆண்டுகள் சிறையில் அடைக்குமாறு நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ???பீகார்: வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய மந்திரி நேரில் ஆய்வு

பீகாரில் தொடர்ந்து பெய்த கனமழைக்கு 50 பேர் பலியான நிலையில் பாட்னா நகரில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் இன்று ஆய்வு செய்தார்.
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ???சிறையில் இருந்து தப்பி 17 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்த கைதி

சிறையில் இருந்து தப்பி 17 வருடங்களாக குகையில் வாழ்ந்த கைதியை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ???நியூசிலாந்தில் ‘‌ஷூ’ கடையில் 9 மணி நேரம் ஒளிபரப்பான ஆபாச படம்

நியூசிலாந்தில் பிரபல ‘‌ஷூ’ கடையில் 9 மணி நேரமாக ஒளிபரப்பான ஆபாச படம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
[10/2, 10:23 AM] விண்மீன்நியூஸ்: ?அரசியல் சூழ்ச்சி ??

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் விவசாயிகளுக்கு தர வேண்டிய பயிர் காப்பீட்டு தொகை இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது

திருவாரூர் மாவட்டத்தில் பயிர்காப்பீடு வழங்கும் விவகாரத்தில் இன்ஸ்யூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து குளறுபடி செய்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

திருவாரூர், மன்னார்குடி தொகுதிகளுக்குட்பட்ட பல ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீடு தொகை தரப்படவில்லை என்றும், இது குறித்து கேட்டால் அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.மாவட்ட நிர்வாகத்திடம் இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து காப்பீடுத் தொகையை பெற்றுத்தர, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்கிறார் வடுவூரைச் சேர்ந்த கதிரவன். இந்நிலையில் பயிர் காப்பீடு தொடர்பாக விவசாயிகள் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ.விடமும் முறையிட்டுள்ளனர். அவரும் மாவட்ட அளவில் உள்ள இன்ஸ்யூரன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் முதற்கட்டமாக பேசிப்பார்த்துள்ளார். ஆனால் உரிய பதில் வரவில்லை.இதையடுத்து விவசாய பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு சென்னையில் இயங்கி வரும் ”அக்ரிகல்ச்சர் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின்” மண்டல அலுவலகத்திற்கு சென்ற டி.ஆர்.பி. ராஜா, பயிர் காப்பீடு தொகையை தருவதில் ஏன் மெத்தனம் என்பன உள்ளிட்ட பல கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டார். அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியோ இல்லை, இதற்கு கொடுக்க முடியாது, அதற்கு கொடுக்க முடியாது என சாக்குபோக்குகளை சொல்லியுள்ளார்.பயிர்காப்பீடு வழங்கும் நடைமுறைகள் தொடர்பாக சில புள்ளிவிவரங்களையும், அரசாணைகளையும் டி.ஆர்.பி.ராஜா சுட்டிக்காட்டி பேசியதை அடுத்து, கவனத்தில் எடுத்துக்கொள்வதாகவும், நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த அதிகாரி உறுதியளித்துள்ளார்.
[10/2, 10:26 AM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

இந்துக்கள், சீக்கியர்கள், புத்த சமயத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்துவ அகதிகள் நாட்டை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட மாட்டார்கள்; வதந்திகளை நம்பாதீர்கள்

NRCக்கு முன்னதாக குடியுரிமை மசோதாவை அமலுக்கு கொண்டு வருவோம்

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
[10/2, 10:26 AM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் ஏதும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.77.50 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து மாற்றம் ஏதும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.71.30 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
[10/2, 10:26 AM] விண்மீன்நியூஸ்: ?? இன்று மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்: காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை

டெல்லி: மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். சொனியா காந்தியுடன் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

?winmeennews.com?ஊடகதளம்
[10/2, 10:26 AM] விண்மீன்நியூஸ்: ?செய்தி சுருக்கம்?

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை

தலையாரியின் உடல் அடக்கம் நடந்த இடத்தில் மகளுக்கு பணி நியமன ஆணை

தபால் ஓட்டு, 3 சுற்று வாக்குகளை எண்ண வேண்டும்: ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை – சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

கடல் அலையில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் உடலுக்கு உணர்ச்சிமிகு அஞ்சலி செலுத்திய மகள் சென்னை விமான நிலையத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

46 லட்சம் பேரை நோய்களில் இருந்து மீட்டது பெரிய சாதனை – பிரதமர் மோடி பெருமிதம்

நீட்’ தேர்வு முறைகேடு: மேலும் 25 மாணவர்கள் சிக்குகிறார்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற ஆலோசனை

கோர்ட்டு வளாகத்தில் சமூக ஆர்வலர் முகிலன் திடீர் தர்ணா போராட்டம் போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் புகார் செய்தாலே கைது செய்யலாம் – சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

நீர் வீணாவதை தடுக்க கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு குழாய் மூலம் தண்ணீர் – எடப்பாடி பழனிசாமி பேச்சு

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு

அ.தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க. மனு – தலைமை தேர்தல் கமிஷனில் அளிக்கப்பட்டது

உச்சத்தை தொடும் பெட்ரோல்-டீசல் விலை: கலால் வரியை லிட்டருக்கு ரூ.5 குறைக்க வேண்டும் மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பெங்களூரு மேயர்-துணை மேயர் பதவிகளை பா.ஜனதா கைப்பற்றியது

??ஊடகதளம்
[10/2, 10:26 AM] விண்மீன்நியூஸ்: ?சேலம் மாவட்ட செய்திகள்?

??சேலம் அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 13 பவுன் நகைகள் கொள்ளை

சேலம்,

??சேலம் அருகே அல்லிக்குட்டை பாரதியார் நகரை சேர்ந்தவர் முத்துமாணிக்கம் (வயது 61). சேலம் மாநகராட்சியில் சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், தனது 61-வது பிறந்தநாளையொட்டி திருக்கடையூர் கோவிலுக்கு குடும்பத்தினருடன் செல்ல திட்டமிட்டார்.

இதன்படி உறவினர்களுடன் தனி பஸ்சில் நேற்று முன்தினம் அதிகாலை புறப்பட்டு சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, நள்ளிரவு அனைவரும் சேலம் திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து முத்துமாணிக்கம் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வீராணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களின் உருவம் பதிந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

?winmeennews.com?ஊடகதளம்
[10/2, 10:26 AM] விண்மீன்நியூஸ்: ?சேலம் மாவட்ட செய்திகள்?

??‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மாணவர் முகமது இர்பான் சேலம் கோர்ட்டில் சரண்

சேலம்,

??‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா (வயது 20), அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை தேனி சி.பி.சி.ஐ.டி.போலீசார் கைது செய்தனர். அப்போது, டாக்டர் வெங்கடேசனிடம் ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது எப்படி? அதற்கு உதவி புரிந்தவர்கள் யார், யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், தங்களுக்கு வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த டாக்டர் ஷபி என்பவர் மூலம் ரஷித் என்ற இடைத்தரகர் அறிமுகம் ஆனதாகவும், ஷபியின் மகன் முகமது இர்பானும், ஆள்மாறாட்டம் செய்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் வாணியம்பாடியில் வைத்து டாக்டர் ஷபியை சி.பி.சி.ஐ.டி.போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது மகன் முகமது இர்பான் திடீரென மாயமானார். அவர், மொரீசியஸ் நாட்டுக்கு தப்பி சென்றதாக கூறப்பட்டது. இதுதவிர, சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே மாணவர் முகமது இர்பான் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இந்த தகவலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மறுத்து வந்தனர்.

இந்தநிலையில், மாணவர் முகமது இர்பான் நேற்று மதியம் 12 மணியளவில் சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சி.பி.சி.ஐ.டி.போலீசார் உடனடியாக கோர்ட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது, கோர்ட்டில் சரணடைந்த மாணவரை வருகிற 9-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சிவா உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மாணவர் முகமது இர்பான், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து மாணவர் முகமது இர்பானின் வக்கீல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், முகமது இர்பான் மொரீசியஸ் நாட்டில் தான் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். அவர் தர்மபுரி மருத்துவக்கல்லூரியில் சேரவில்லை. இருந்தாலும், அவரது தந்தையை சி.பி.சி. ஐ.டி. போலீசார் கைது செய்து தொந்தரவு செய்து வருகிறார்கள். அவரது குடும்பத்தினரையும் தொந்தரவு செய்து வருவதால், இர்பான் மொரீசியசில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தார். பின்னர் அங்கிருந்து சேலம் வந்து கோர்ட்டில் சரணடைந்துள்ளார். அவர் எங்கும் தப்பி ஓடவில்லை. தலைமறைவும் ஆகவில்லை. அவரது குடும்பத்தினரை தொந்தரவு செய்ததால், தானாக வந்து சரணடைந்தார், என்றார்.

??ஊடகதளம்
[10/2, 10:26 AM] விண்மீன்நியூஸ்: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? நிலத்தகராறு காரணமாக மனைவியுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

சேலம்,

??சேலம் மாவட்டம் இடங்கணசாலை அருகே இ.மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 56). தறித்தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (48). இவர்களது மகன் யுவராஜ் (35). இவர் விசைத்தறி தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில், கோவிந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கோவிந்தன், அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டு திடீரென மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கணவன், மனைவி இருவரையும் கலெக்டரிடம் மனு கொடுக்க போலீசார் அழைத்து சென்றனர்.

இதுகுறித்து கலெக்டரிடம் கோவிந்தன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2002-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த எனது உறவினர் ஒருவரிடம் நிலத்தின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியிருந்தேன். இதுவரையிலும் வட்டியுடன் சேர்த்து ரூ.75 ஆயிரத்தை 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிவிட்டேன். தற்போது நிலத்தின் பத்திரத்தை கேட்டால் தர மறுக்கிறார்கள். மேலும், ரூ.6 லட்சம் கொடுத்தால்தான் நிலத்தை தருவேன் என்று கூறி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, நிலத்தகராறு காரணமாக மனைவியுடன் தறித்தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

?winmeennews.com?ஊடகதளம்
[10/2, 10:26 AM] விண்மீன்நியூஸ்: ?சேலம் மாவட்ட செய்திகள்?

??சேலத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் இனிப்பு-காரம் தயாரிப்பாளர், விற்பனையாளர் ஆலோசனை கூட்டம்

சேலம்,

??தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமை தாங்கி பேசியதாவது:-

உணவு பொருள் தயாரிப்பு அளவை பொறுத்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் இடம், விற்பனை செய்யும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். தயாரிப்பு பாத்திரங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பணியின் போது பணியாளர்கள் கையுறை, தலையுறை அணிந்திருக்க வேண்டும். பேக்கிங் செய்யப்படும் போது உணவு பொட்டலங்கள் பாக்கெட்டுகள் மீது உணவு பொருட்கள் விவரங்களை அச்சிட வேண்டும்.

உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு பொருட்கள் தயாரிப்பது சட்டப்படி குற்றமாகும். கை கழுவும் சோப்புகளை கொண்டு பாத்திரங்களை கழுவக் கூடாது. தயாரிப்பு பகுதியை இருட்டாக வைத்திருக்க கூடாது. பணியாளர்கள் வெற்றிலை, புகையிலை பயன்படுத்த அனுமதிக்க கூடாது.

குடிநீர் தொட்டிகள் திறந்த நிலையில் இருக்க கூடாது. உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆய்வுக்கு வரும்போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் ஒரு பொறுப்பாளரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

?winmeennews.com?ஊடகதளம்

advertisement by google

Related Articles

Back to top button