இந்தியாகல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

என்னதான் நடக்குதுSRM பல்கலைகழகத்தில்?இன்னொரு மாணவி ஹாஸ்டல் ரூமில் தூக்கிட்டு தற்கொலை?

advertisement by google

என்னதான் நடக்குது.. இன்னொரு மாணவி ஹாஸ்டல் ரூமில் தூக்கிட்டு தற்கொலை.. தொடரும் எஸ்ஆர்எம் மர்மம்.

advertisement by google

செங்கல்பட்டு: எஸ்ஆர்எம்மில் என்ன நடக்கிறதே என்றே தெரியவில்லை.. இன்னொரு மாணவி ஹாஸ்டல் ரூமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

advertisement by google

சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம். இந்திய ஜனநாயக கட்சி தலைவர், எம்பி பச்சமுத்துதான் இதன் சொந்தக்காரர். இங்கு மருத்துவம், பொறியியல் உட்பட ஏராளமான படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
இதை தவிர மிகப்பெரிய ஆஸ்பத்திரியும் இந்த வளாகத்துக்கு உள்ளேயே செயல்பட்டு வருகிறது.இங்கு படிப்பவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான். இதில் நிறைய பேர் வசதியான வீட்டு பிள்ளைகள்தான். இதனால் இவர்கள் தங்குவதற்காக ஹாஸ்டலும் எஸ்ஆர்எம்முக்கு உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே எஸ்ஆர்எம் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.. தூக்கில் தொங்கியும், மாடியில் இருந்து குதித்தும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது..இது சம்பந்தமான விசாரணைகளும் நடந்து வருகின்றன. ஆனால் அந்த விசாரணையில் எந்த நிலையில் உள்ளன என தெரியவில்லை.

advertisement by google

இந்நிலையில், இன்னொரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. பஞ்சாப்பை சேர்ந்த ஆஷாராணா என்பவர்தான் அந்த மாணவி.. எஸ்ஆர்எம் ஹாஸ்டலில் தங்கி பிடெக் 2-ம் வருடம் படித்து வந்தவர்.. இரவு ஹாஸ்டல் ரூமிலேயே துப்பாட்டாவால் தூக்கிட்ட நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

advertisement by google

ரொம்ப நேரமாகியும் அந்த ரூம் கதவு திறக்கப்படவே இல்லை.. அதனால் கல்லூரி நிர்வாகம் கதவை உடைத்துப் பார்த்தபோதுதான் அவர் சடலமாக தொங்கியது தெரியவந்தது.. உடனடியாக போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, மாணவியின் சடலம் மீட்கப்பட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பப்பட்டது.
மாணவி எதனால் தற்கொலை செய்து கொண்டார் என உடனடியாக தெரியவில்லை.. விசாரணை நடந்து வருகிறது…
ஈவ்டீசிங் பிரச்னையா, ஹாஸ்டல் வார்டனின் டார்ச்சரா, அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என விசாரித்து வருகின்றனர். இந்த 6 மாதத்தில் மட்டும் நான்கைந்து பேர் இதே காம்பஸில் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து டிஜிபி உத்தரவின்பேரில் விடுதிக்குள் மாணவ, மாணவிகளின் தொடர் இறப்பு குறித்து சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணை நடந்து வரும்போதே இன்னொரு மாணவி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் பெற்றோர்களுக்கும் கலக்க

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button