?இந்திய மக்கள் கடும் கோபத்தினால் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி மீது எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்? மோட்டார் வாகணச்சட்டத்தில் அதிகப்படியான அபதார தொகை உயர்வுக்குக் காக?
மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்த பிறகு அமலுக்கு வந்துள்ள புதிய அபராதங்கள் விண்ணை எட்டும் அளவுக்கு அதிகமாக உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. தோராயமாகச் சொல்ல வேண்டும் என்றால், இதற்கு முன்பு எவ்வளவு வசூலிக்கப்பட்டதோ, அதைவிடச் சுமார் 10 மடங்கு அதிகமாக தற்போது வசூலிக்கப்படுகிறது.
இதன் உச்சமாக குர்கான் பகுதியில் 15 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டியை ஓட்டிச் சென்ற ஒருவருக்கு, போக்குவரத்து போலீசார் 32 ஆயிரம் அபராதம் விதித்தது நாடுகளுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குர்கானில், ஸ்கூட்டி ஓட்டிச் சென்றவரிடம் லைசன்ஸ் இல்லை என்பதற்காக 2000 ரூபாய், வாகனப் பதிவுச் சான்றிதழ் இல்லை என்பதற்காக 5000 ரூபாய், மாசு கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதற்காக, ரூ.10,000 எனப் பல்வேறு விதிமுறை மீறல்களுக்கு என, ஆக மொத்தம் 23 ஆயிரம் ரூபாய் அவரிடம் வசூலிக்கப்பட்டது.
அச்சத்தில் வாகன ஓட்டிகள்.
மறுநாளே, பஞ்சாப் மாநிலம், குருகிராம் பகுதியில், ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் வாகனப் பதிவுச் சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட சில விஷயங்கள் இல்லை என்பதற்காக 32 ஆயிரத்து 500 ரூபாய் மொத்த அபராதமாக, விதிக்கப்பட்டது. ஆட்டோவுக்கு 32,000, ஸ்கூட்டிக்கு, 23 ஆயிரம் ரூபாய் என சகட்டுமேனிக்கு அபராதம் சென்று கொண்டே இருப்பதால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.
டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த, சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரியிடம், நிருபர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். ஆனால் மனிதர் அசைந்து கொடுப்பதாக இல்லை. விபத்துகளை குறைப்பதற்காகத் தான், விதிமுறைகளைக் கடுமையானதாக மாற்றியுள்ளோம் என்று அவர் விளக்கம் அளித்தார். அதிக வட்டி அபராதத் தொகையை குறைப்போம் என்று அவர் சொல்லவில்லை. இந்த நிலையில் தான், சமூக வலைத்தளங்களில் மீம்கள் வைரலாக இது தொடர்பாக சுற்றி வருகின்றன. அதில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கக் கூடிய ஒரு மீம் இதோ உங்களுக்காக.
தொலைபேசி அழைப்பு. ஒருவருக்குத் திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. மறுமுனையில் பேசக்கூடிய நபர், உங்களது பையன் எங்க கிட்ட தான் இருக்கிறான். விரைவாக 32 ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு கூட்டிட்டுப் போங்க என்று சொல்கிறார். யாரோ கடத்தல்காரன் தான் கடத்தி வைத்துக் கொண்டு, பிணையத் தொகை கேட்டு, பேசுகிறான் என்று நினைக்கும் அந்த தந்தை, நான் உடனே போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு மறுமுனையில் பேசும் நபர் நாங்களே போலீஸ் தான். உங்கள் பையன், பைக் பதிவுச் சான்றிதழ், இன்சூரன்ஸ், லைசன்ஸ், ஹெல்மெட் போன்றவை இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காகத் தான் 32 ஆயிரம் ரூபாய் அபராதம் கொடுத்துள்ளோம். அதைச் செலுத்தி விட்டு, அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்வது போல இருக்கிறது இந்த மீம். குபீர் சிரிப்பை வரவழைத்தாலும், எந்த அளவுக்கு நாட்டின் நிலைமை இருக்கிறது என்பதை சிந்திக்கவும் வைக்கிறது இந்த மீம்.