இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

என் தற்கொலைக்கு மோடிஅரசே காரணம் தொழிலதிபர் இறுதிக் கடிதம்?

advertisement by google

என் தற்கொலைக்கு மோடி அரசே காரணம் – தொழிலதிபர் இறுதிக்கடிதம்!!!!ஈரோடு மாணிக்கம்பாளையம் சக்திநகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 42). இவர் விசைத்தறிப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கனகராஜ் மனவேதனையுடன் காணப்பட்டார்.

advertisement by google

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 10 மணிஅளவில் கனகராஜ் ஈரோடு மொக்கையம்பாளையத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

advertisement by google

அங்குள்ள ஒரு கிணற்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, கனகராஜ் கிணற்றில் குதித்தார். ஆனால் அவர் கிணற்றில் குதித்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை.

advertisement by google

மாலை 6 மணிஅளவில் கேட்பாரின்றி மோட்டார் சைக்கிள் நிற்பதை பார்த்த பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள மூதாட்டி ஒருவரிடம் கனகராஜ் தனது ‘மணிபர்சை’ கொடுத்து இருந்தது தெரியவந்தது.அதன்பிறகு, கனகராஜ் கிணற்றில் குதித்த விவரமும் பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது.

advertisement by google

இதையடுத்து பொதுமக்கள் ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கும், வீரப்பன்சத்திரம் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

advertisement by google

அவர்கள், கிணற்றில் மிதந்த கனகராஜின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து கனகராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

advertisement by google

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

advertisement by google

தற்கொலை செய்த கனகராஜூக்கு வனிதா (38) என்ற மனைவியும், கீர்த்திகா (19) என்ற ஒரு மகளும், சுதர்சன் (16) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் கனகராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதம் சிக்கியது.

அந்தக்கடிதத்தில், “என் இனிய அன்பு நண்பர்களே, ஜவுளி தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்னுடைய மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்” என்று எழுதப்பட்டு இருந்தது.

இந்தக்கடிதத்தைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், உற்பத்தி செய்யப்பட்ட துணியின் விலை திடீரென குறைந்ததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதும், அதனால் மனவேதனையுடன் காணப்பட்ட கனகராஜ் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button