தொழில்நுட்பம்

டாடா நிக்ஸான் பேட்டரி காரின் அதிசயம்?

advertisement by google

டாடாநிக்ஸான் பேட்டரி கார்✍️✍️✍️✍️?
அடுத்த மாதமே அறிமுகமாகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்!

advertisement by google

அடுத்த மாதமே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

advertisement by google

எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை சூடுபிடிக்க துவங்கி இருக்கும் இந்த சூழலில், அனைத்து நிறுவனங்களும் புதிய மாடல்களை களமிறக்க இந்த சந்தையில் துண்டு போட்டு முன்கூட்டியே இடம் பிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன. மஹிந்திரா இ-வெரிட்டோ, டாடா இ-டிகோர் கார்களை தொடர்ந்து விரைவில் எம்ஜி நிறுவனத்தின் இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர இருக்கிறது.

advertisement by google

இந்த சூழ்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அடுத்த எலெக்ட்ரிக் காரை தனிநபர் சந்தையை குறிவைத்து களமிறக்க உள்ளது. இந்த கார் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன், மிகச் சரியான விலையில் வர இருக்கிறது. எனவே, வாடிக்கையாளர்களும் இந்த புதிய எஸ்யூவி கார் மீது அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

advertisement by google

அடுத்த மாதம் 16 முதல் 19 தேதி வரையிலான 4 நாட்களுக்கான பத்திரிக்கையாளர் நிகழ்ச்சிக்கு டாடா மோட்டார்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதிய டாடா அல்ட்ராஸ் கார் மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கருதப்படுகிறது.

advertisement by google

மேலும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் விலை அறிவிப்புடன் வினியோகம் கொடுக்கும் பணிகளும் துவங்கப்படும் என்று தெரிகிறது. புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் ஸிப்ட்ரான் என்ற புதிய தொழில்நுட்ப அம்சத்துடன் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது.

advertisement by google

அதாவது, தனது மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி, மின் மோட்டார், கியர்பாக்ஸ், கட்டுப்பாட்டு மின்னணு சாதனங்கள் அடங்கிய தொகுப்பை ஸிப்ட்ரான் என்ற பெயரில் டாடா மோட்டார்ஸ் குறிப்பிடுகிறது. இது மிகவும் செம்மையான தொழில்நுட்பமாக இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

advertisement by google

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பை உறுதிப்படுத்தியது கவாஸாகி!

டாடா நெக்ஸான் காரில் பயன்படுத்தப்படும் பேட்டரியானது மிகவும் திறன் வாய்ந்ததாக இருக்கும். முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்பிவி விற்பனையில் மீண்டும் தொடரும் மாருதி எர்டிகாவின் ஆதிக்கம்…

இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக வீட்டு சார்ஜர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர்களை டாடா மோட்டார்ஸ் வழங்கும் என்று தெரிகிறது. இந்த காரில் வழங்கப்படும் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் வரையிலான வாரண்டியை டாடா மோட்டார்ஸ் வழங்கும்.

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா மற்றும் விரைவில் வரும் எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்களைவிட ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான விலை வித்தியாசத்துடன் இந்த கார் வர இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.✍️✍️✍️✍️✍️?????✔️✔️✔️✔️???✍️✍️✍️✍️✍️

advertisement by google

Related Articles

Back to top button