இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விளாத்திகுளத்தில் ஆசிரியரை கத்தியால் குத்தமுயன்ற சமையலர் திகில்பெண்?

advertisement by google

விளாத்திகுளம் அருகே ஆசிரியரை கத்தியால் குத்த‌ முயன்ற சமையலர் பரபரப்பு

advertisement by google

விளாத்திகுளம் அருகே மந்தி குளத்தில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளியில் ஆய்வு நடத்தினர்.அங்கு உள்ள சத்துணவு கூடத்தில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு தயாரிக்கப்படும் சத்து உணவு தரம் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதையெடுத்து அங்கிருந்த சமையலறை மீனாட்சியை அதிகாரிகள் எச்சரித்து மட்டுமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிச் சென்றதாக தெரிகிறதுக்ஷ இதையடுத்து இங்கு உள்ள ஆசிரியர்கள் தான் இதற்கு காரணம் என்று கருதி அவர்களுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளிக்கு வந்த மீனாட்சி, அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை கலைச்செல்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே சமையலுக்கு பயன்படுத்த கூடிய கத்தியை எடுத்துக்கொண்டு
மீனாட்சி ஆசிரியை கலைச்செல்வியை குத்த முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை கலைச்செல்வி பள்ளிக்குச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார். இதையடுத்து மீனாட்சி பள்ளி முன்பு நின்ற ஆசிரியை கலைச்செல்வியின் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி விட்டு தப்பியோடியுள்ளார். இதன் பின்னர் கலைச்செல்வி செல்போன் மூலமாக கிராமத்தில் உள்ள தொடர்பு கொண்ட பின்பு அவர்கள் விரைந்து வந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button