இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விருத்தாச்சலத்தில் கரோனாவால் உயிரிழந்த வட்டாட்சியர் உடல் எரியூட்டல்! பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கரோனாவால் உயிரிழந்த வட்டாட்சியர் உடல் எரியூட்டல்! பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி!

advertisement by google

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் இ.கவியரசு(49). இவர் கரோனோ தொடங்கிய காலத்திலிருந்து கரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந்தார். அதன் காரணமாக கோவையில் இருந்த தனது குடும்பத்தை கூட பார்க்க செல்லாமல் விருத்தாசலத்திலேயே கடந்த 4 மாதங்களாக தங்கியிருந்தார்.

advertisement by google

இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி கரோனோ அறிகுறி தென்பட்டதால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். சிகிச்சை பெற்று வந்த வட்டாட்சியர் கவியரசு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (18.07.2020) உயிரிழந்தார்.

advertisement by google

அதையடுத்து இன்று காலை சிதம்பரத்திலிருந்து அவரது உடல் அவரது சொந்த ஊரான விழுப்புரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மின் தகன மேடையில் உடல் எரியூட்டது. இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

advertisement by google

இதனிடையே கரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த வட்டாட்சியர் கவியரசு அவர்களுக்கு விருத்தாசலத்தில் இரங்கல், அஞ்சலி நிகழ்வுகள் நடைப்பெற்றன. பாலக்கரை ரவுண்டாணாவில் பத்திரிகை நண்பர்கள் நலச்சங்கம் சார்பில் வட்டாட்சியர் கவியரசு படத்திற்கு பத்திரிகையாளர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

advertisement by google

இதில் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு வட்டாட்சியர் கவியரசு அவர்களின் பணிகளை நினைவு கூர்ந்து இரங்கல் தெரிவித்தனர். இதேபோல் காவல்துறை, வருவாய்த்துறையினரும் ஆங்காங்கே அஞ்சலி செலுத்தினர்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button