இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தமிழகஅரசுபெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் – காயல்அப்பாஸ் வலியுறுத்தல்

advertisement by google

பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

advertisement by google

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம். விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த சிறுமியை காதலிப்பதாக பொய்யான ஆசைவார்த்தை கூறி நாடகமாடி காட்டு பகுதிக்குள் சிறுமியை வர வைத்து தனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சுரேஷ்குமார்,ராமலிங்கம், ராஜா,சுரேஷ்குமார், ஆகிய நான்கு பேரை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.

advertisement by google

சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நான்கு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

advertisement by google

பெண்கள், சிறுமிகள், மீது நடக்கும் பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளது . இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .

advertisement by google

எனவே : இது போன்ற பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றவர்கள் கடுமையாக தண்டிக்கபட வேண்டும் மெனவும் பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button