இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

மதுரையில் நள்ளிரவில் ஒடும் ரயில்மீது மரம் சாய்ந்தது

advertisement by google

மதுரையில் நள்ளிரவில் ஓடும் ரயில் மீது மரம் சரிந்ததால் பரபரப்பு.

advertisement by google

மதுரை அருகே ஓடும் ரயிலின் மீது திடீரென மரம் சாய்ந்து விழுந்தது.

advertisement by google

தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் சிறப்பு ரயில் திருப்பரங்குன்றம் அருகே நூற்றுக்கணக்கான பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த போது தொடர் மழையால் பெரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்து ரயில் எஞ்சின் மீது நள்ளிரவில் விழுந்தது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டது.

advertisement by google

ஆனால் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரம் ரயில் தாமதமானது.

advertisement by google

மேலும் மதுரையில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாகின, முத்துநகர் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் போன்ற பல்வேறு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பின்னர் ஒவ்வொன்றாக அனுப்பி வைக்கப்பட்டன.
⬇⬇⬇

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button