இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

செருப்பைக்கழட்டச்சொல்லி வன்கொடுமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது சிறுவன் புகார்?

advertisement by google

♦செருப்பைக் கழற்றச் சொல்லி வன்கொடுமை… அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது சிறுவன் புகார்!

advertisement by google

?தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் , நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை சரணாலயத்தில் யானைகள் முகாமை தொடங்கிவைக்கச் சென்றிருந்தார். அருகில் 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தபோதும் அவர்களை அழைக்காத அமைச்சர் சீனிவாசன், தூரத்தில் நின்றிருந்த பழங்குடியின மாணவர் ஒருவரை “டேய் தம்பி, வாடா, இங்க வாடா” என்று அழைத்தார். தொடர்ந்து அந்த சிறுவனிடம் தனது செருப்பைக் கழற்றி விடுமாறு கூறினார். அமைச்சரை மரியாதையோடு பார்த்த சிறுவன் பதட்டத்தில் அந்த சமயம் செருப்பைக் கழற்ற உதவி செய்தான்.

advertisement by google

?நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மூத்த அதிகாரிகள் ஆகியோர் உடனிருக்கும் போது நடைபெற்ற இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

advertisement by google

?அருகிலிருந்த அரசு அதிகாரிகள் யாரும் அப்போது எதுவும் பேசவில்லை. சிலர் அமைச்சருக்குப் பின்னால் நின்று கொண்டு “செருப்பு பக்கிளை கழட்டு” என்று கூறினர். அமைச்சரின் இந்த செயல் வீடியோவாக வெளிவந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

advertisement by google

?அமைச்சர் தனது வீட்டுக் குழந்தைகளை, பேரக் குழந்தைகளை இவ்வாறு செருப்பைக் கழற்றிவிடச் சொல்வாரா. ஒரு மாணவர் பள்ளிக்குச் செல்லாமல் அங்கு நிற்கிறார் என்றால் ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்றுதானே கேட்க வேண்டும். அதனை விடுத்துச் செருப்பைக் கழற்றி விடச் சொல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என யுனிசெஃப் பிரதிநிதி தேவநேயன் தெரிவித்துள்ளார்.

advertisement by google

?அமைச்சருக்குச் சாதிய ஆதிக்க வன்மம் அதிகமாகவே உள்ளது. சிறுவனிடம் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தியுள்ளது.

advertisement by google

?“என்னை அழைத்து செருப்பைக் கழற்றச் சொன்னார் அமைச்சர்” – பழங்குடியின சிறுவன்!

advertisement by google

?தனது செயல் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு விளக்கமும் அளித்தார். “என்னுடைய பேரன் போல் நினைத்துத்தான் காலணியைக் கழற்றச் சொன்னேன். இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. செருப்பு பக்கிளை கழட்டிவிடு என்று சொன்னதில் பெரிய தவறு இல்லை என நினைக்கிறேன்” என அந்த விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

?அமைச்சரின் இந்த கருத்திற்கு “ஏன் அருகில் அத்தனை மகன்கள், மகள்(மாவட்ட ஆட்சியர்) இருக்கும்போது எதற்காகப் பேரனை அழைக்க வேண்டும்”, “இது சாதி ஆணவப் போக்கு”, “விரைவில் உங்களை வீட்டுக்கு அனுப்புவோம்” என நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.

?இந்நிலையில் இந்த சம்பவம் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகக் கூறி பாதிப்பிற்கு ஆளான சிறுவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மசினகுடி காவல் நிலையத்தில் அமைச்சர் செருப்பைக் கழற்ற கூறியது தொடர்பாக, செருப்பைக் கழற்றி விட்ட சிறுவன் புகார் அளித்துள்ளார்.

?அந்த புகாரில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட சில சட்டப் பிரிவுகளின் கீழ் புகார் பதிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

advertisement by google

Related Articles

Back to top button