இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

காலைவிரிவானசெய்திகள்(23.9.2019)RSS விழாவில்சிவநாடார்

advertisement by google

????விண்மீண்நியூஸ்?????ஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார்!!!

advertisement by google

?நாக்பூரில் ஆர் எஸ்எஸ் சார்பாக  இந்த வருடம் நடைபெறவுள்ள விஜயதசமி விழாவில் சிறப்பு விருந்தினராக ஹெச் சி எல் நிறுவன தலைவர்  ஷிவ் நாடார் கலந்து கொள்ளவுள்ளார்.

advertisement by google

?வரும் அக்டோபர் 8 ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூரில் (rss) ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் சார்பாக நடைபெறவுள்ள இந்த ஆண்டிற்கான விஜயதசமி விழாவில் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஹெச் சி எல் நிறுவன தலைவர் ஷிவ் நாடார் கலந்து கொள்ளவுள்ளார்.

advertisement by google

?ஆர் எஸ்எஸ் சார்பாக கொண்டாடப்படும் தசரா விழா  முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த விழாவில் ஏற்கனவே குழந்தைகள் உரிமை ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, முன்னாள் தலித் தலைவர் மாகாராஜ் போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

advertisement by google

♦Friends Social Media
[9/23, 8:49 AM] விண்மீண்நியூஸ்2: ???நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மனுத்தாக்கல் தொடக்கம்

advertisement by google

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

advertisement by google

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கும் அடுத்த மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

advertisement by google

இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1ம் தேதி நடைபெற உள்ளது.

இரு தொகுதிகளிலும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

அதிமுக சார்பில் போட்டியிட நேற்று முதல் விருப்ப மனு வினியோகம் நடந்து வருகிறது.

இன்று மாலை வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது.

திமுகவில் நேற்று விருப்ப மனு வினியோகம் தொடங்கிய நிலையில், வேட்பாளர் நேர்காணல் நாளை நடைபெறுகிறது.

செய்திகுழுமம்
[9/23, 8:49 AM] விண்மீண்நியூஸ்2: ?? BREAKING NEWS ?? ════════════════════

?% டெல்லி : திகார் சிறையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கின்றனர்

 
══════════════════
༺༻?% N҉ e҉ w҉ s҉ ༺༻
══════════════════
 
[9/23, 8:49 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

26 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத் : ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலை உச்சியில் இருந்து கவிழ்ந்த விபத்தில் 26 பேர் உயிரிழப்பு.
[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅நீலகிரி மாவட்ட குன்னூரில் திமுக இளைஞரணி சார்பில் நடை பெற்ற உறுப்பினர் சேர்ப்பு முகாமில் கலந்து காெண்ட இளைஞரணி தலைவர், உதய நிதி ஸ்டாலின்

பிளக்ஸ் பேனர் வைக்காததற்கு கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“என்னுடைய கூட்டத்தி்ல் பட்டாசு வெடிக்க வேண்டாம் திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும் இளைஞரணி தான் முக்கியம்”, என்று கூறினார்.
ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் பேர் என்ற வீதத்தில்30 லட்சம் இளைஞர்ளை தமிழகம் முழுவதும் இணைப்பதுதான் லட்சியம் என பேசிய அவர், இளைஞரணியில் ஆர்வத்தோடு பணியாற்றினால் தாய் கழகத்தில் சிறப்பாக இருக்கலாம், என்றார்.
எனக்கு இளைய தளபதி என்ற பட்ட பெயராே பிற பட்டங்களை வைத்து அழைக்க வேண்டாம் என்று தாெண்டர்களை அவர் கேட்டுக் காெண்டார்.
மேலும், தமிழகத்தி்ல் நடப்பது கேடு கெட்ட ஆட்சி எனவும், விரைவி்ல் திமுக தலைவர் தலைமையி்ல் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்றார்.
[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை மாவட்டம் முழுவதும் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்பு நாளை முதல் வழங்கப்படும் எனவும், குடிநீர் இணைப்பிற்காக சாலைகளை சேதப்படுத்தினால் உரிமம் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:
கோவை மாவட்டம் முழுவதும் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்பு நாளை முதல் வழங்கப்படும். மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், ஆன்லைன் மூலமாக விண்ணப்பதால் பிரச்சணை இல்லாமல் எளிதாக கிடைக்கும்ப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் இணைப்பிற்காக சாலைகளை சேதப்படுத்தினால் உரிமம் இரத்து செய்யப்படும். சூயஸ் குடிநீர் திட்டம் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது எனவும், எதிர்கட்சி கொண்டு வந்தாலும் நல்ல திட்டம் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
சூயஸ் திட்டம் தொடர்பாக பல்வேறு புரளிகளை பரப்பி வருகின்றனர் எனக்கூறிய அவர், சூயஸ் நிறுவனத்திற்கு கட்டண உயர்த்தும் அதிகாரம் கிடையாது எனவும், குடிநீர் விநியோக உரிமை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் சரிவர குப்பைகளை அகற்றாமல் பாதாள சாக்கடைகளில் உள்ள அடைப்புகளை சரி செய்யாமல் அலட்சியமாக இருந்து வருவதாக, மாநகராட்சி நிர்வாகத்தை மக்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் குப்பைகளுடன் திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் பல்வேறு பகுதிகளில் மர்ம காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பரவுவதாகவும், அதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
இது குறித்து, பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பெரும்பாலான வார்டுகளிலும் இன்னமும் குப்பைகளை அல்லாமல் வாரக்கணக்கில் தேங்கிக் கிடப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே உடனடியாக அனைத்து வார்டுகளிலும் குப்பைகளை அகற்றாவிட்டால் குப்பைகளுடன் மாநகராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட்டு நிர்வாகத்திற்குள் குப்பைகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.
[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை சிங்காநல்லூர் அருகே பல வருடங்களாக மறைமுகமாக கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதைக்கு அதிக அளவில் அடிமையாகி வருகின்றனர்
இப்படியிருக்க கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட போலீசாரும் கோவை மாநகர போலீசாரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையாளர்களை தடுக்கும் நோக்கில் கண்காணிப்புகளில் ஈடுபட்டு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் நோக்கில் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசாரும் அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
நேற்று, ஒண்டிப்புதூர் பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக சிங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனீஸ்வரன் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் காசி பாண்டியன் மற்றும் தலைமை காவலர் சுகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் கஞ்சா விற்பனையாளர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இதையடுத்து சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை
மேற்கொண்ட போது விசாரணையில் அவர் கஞ்சா விற்பனையாளர் என தெரியவந்தது.
மேலும் நடத்திய விசாரணையில் அவர் கோவை, சூர்யா நகரை சேர்ந்த சேட்டு என்ற ஐயப்பன் என்பதும் தெரியவந்தது
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை மாவட்டம், கோவைபுதூர் ஆனைமலை பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணியினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் டாக்டர். சி. என். மகேஷ்வரன் இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

இவ்ஆய்வின் போது எனி’, உதயசிங் பொறியியல் இயக்குனர் (பொறுப்பு) சானப் சம்பத்குமார் ஆலோசகர், என்.முரளி மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு நிர்வாகம் பொறியாளர்கள் ஏ. முத்தையா, கே செல்லமுத்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் திருமதி.களஸ்தூரிவாக மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் அவர்கள் தெரிவிக்கையில், கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் அதன் அருகில் அமைந்துள்ள குறிஞ்சி மற்றும் குனியமுத்தூர் வார்டு 87- 100 பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் ரூபாய் 591.14 கோடியிலும், குடிநீர் திட்டப்பணிகள் ரூ 20230 கோடியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் குறிஞ்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் 14 வார்டுகள் பயன்பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை திட்ட பணி ஆணை லார்சன் அன்ட் டூப்ரோ பிரைவேட் லிமிடெட் சென்னை மூலமும், குடிநீர் திட்டப்பணிகள் திருப்பாளர்கள் என சி.சி. லிமிடெட் வைகாாபாத் மூலமும் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை திட்டத்தின் சிறப்பு அம்சமாக அனைத்து கழிவு நீரேற்று நிலையங்களிலும் தன்முறையாக துர்நாற்றம் அகற்றும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கழிவு நீர் சேகரிக்கும் குழாய்கள் சாலைகள் தோண்டி பதிக்கப்பட்ட உடன் மூடப்பட்டு சீரான இடைவெளியில் சாலையில் தோண்டி பதிக்கப்பட்ட உடன் குழிகள் மூடப்பட்டு சிரான இடைவெளியில் சாலையில் தோண்டி பதிக்கப்பட்ட பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்து சாலைகள் செப்பனிடப்பட்டு வருகிறது.
குடிநீர் திட்டப் பணிகளுக்காக இப்பகுதிகளில் 18 புதிய குடிநீர் மேலாண்மை தொட்டிகளும் இரண்டு குடிநீர் சமநிலை தொட்டிகளும் குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
பணிகள் நடைபெறும் சாலை பகுதிகளில் சீரமைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வரும்படி மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே பாதாள சாக்கடை திட்ட பணியில் குழாய்கள் பதிக்கப்பட்டு 72.95 கிலோமீட்டர் நீல சாலைகளில் இதுவரை 58.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குடிநீர் திட்டப் பணிகளில் இதுவரை 75 சதவீதம் பணிகள் முடிவுற்று மீதமுள்ள பணிகள் விரைவில் முடிந்து பையனுக்கு கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. கோவைபுதூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் திட்ட ஆய்வு செய்து போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு குழாய்கள் பதித்தல் மற்றும் விட்டு இணைப்பு பணிகளையும் உடனுக்குடன் மேற்கொண்டு சாலைகளை சீரமைத்து உடனடி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இத்திட்டங்களின் முழுமையாக செயலகத்திற்கு பின் குறிஞ்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் 14 வார்டுகளிலும் துர்நாற்றம் மற்ற முழுமையான சுகாதார வசதியும் குடிநீர் வசதியும் பெறும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர் சி.என்.மகேஸ்வரன் இ. ஆ.ப., தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள கம்பாலபட்டி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர். சி.என். மகேஷ்வரன் இ.ஆ.பட அவர்கள் அறிவுறுத்தினார்.
[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅திருப்பூர் நல்லூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) வந்துள்ளது. அதில், அந்த பெண்ணின் ஆபாச படத்தை வைத்திருப்பதாகவும், ரூ.5 லட்சம் தர வேண்டும் என்றும், மறுத்தால் இணையதளத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளதாக.கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண், மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, குறுஞ்செய்தி வந்த மொபைல் எண்ணை வைத்து தனிப்படை போலீசார் சேலத்தை சேர்ந்த நரேஷ் (27) என்பரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கபட்டுள்ளதாகவும், அந்த திருமணத்திற்கு போதிய பணம் இல்லாததால் முகநூலில் இருந்து செல்போன் எண்ணை எடுத்து பணம் பறிப்பதற்காக இது போன்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
பின்னர், இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் அவர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀

திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

மின் இணைப்பு துண்டிப்பால் மக்கள் அவதி


[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ஜாக்டோ ஜியோ- வை நாளை காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு.

பேச்சுவார்த்தையில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பணியாளர் சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்_

TNGTF _மாநில மையம்
[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ???கலை பாடப்பிரிவில் Computer Application பாடத்தை நீக்கிய கல்வித்துறை

சமீபத்தில் வெளியான அரசாணை 166 மூலம் பள்ளி கல்வித்துறை
மூன்று முக்கிய பாடங்களை கொண்டு மேல்நிலை கல்வியில் அறிவியல், கலை மற்றும் தொழிற்கல்வியில் பாட பிரிவுகள் உருவாக்கியது.

இதில் கல்வித்துறை கடந்தாண்டு தயாரிக்கப்பட்ட Computer Application புதிய பாடதிட்டத்தை கலைப்பிரிவு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, தற்போது பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது அரசாணை 166 மூலம் Computer Application பாடம் கலைபிரிவில் (மூன்று பாடம் கொண்ட) இருந்து முற்றிலும் நீக்கப்பட்டது கணினி ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கலைப்பிரிவு தேர்வு செய்யும் மாணவர்கள் கணினி கல்வி படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தவறான முடிவால், புதிததாக உருவாக்கப்பட்ட Computer Application பாடம் வந்த வேகத்தில் காணமால் போனது, அரசு நிதியும் வீணடிக்கப்பட்டுள்ளது.
[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ???முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பள்ளிப் படிப்பு தொடங்கி, அரசியல், ஆட்சி வரை அவரது வாழ்க்கையே ஒரு போராட்டம்தான் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகம் முழுவதும் படிப்படியாக கருணாநிதியின் சிலைகள் திறக்கப்படும் என்றார்.சிலை திறப்பைத் தொடர்ந்து சாலையோர பழ வியாபாரிகளுக்கு கட்சியின் சார்பில் இலவசமாக குடைகளை வழங்கிய ஸ்டாலின், திமுக சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் போட்டி தேர்வுக்கான நூலகத்தை பார்வையிட்டு 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களையும் வழங்கினார்.
[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ரூ.77ஐ தொடுகிறது பெட்ரோல் விலை

⛽⛽எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து ஒரு லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ 76.83 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.70.76 ஆகவும் உள்ளது., இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. கடந்த 6 நாட்களில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.1.98, டீசல் ஒரு லிட்டர் ரூ.1.61 அதிகரித்துள்ளது.
[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

மனித உரிமைகள் அடிப்படை அவசியம் என்றும், யாருக்கும் எந்த தீங்கும் நடக்கக்கூடாது, ஒரு நபரின்கண்களில் வரும் கண்ணீர் ஓயும் வரை வேலை முடிந்துவிடாது என்று ஜவஹர்லால் நேரு பேசியதை அமெரிக்க எம்பி ஸ்டெனி மேற்கோள் காட்டினார்.

இதேபோல் ஜனநாயகம் என்பது பலவீனமானவர்களுக்கு பலமான அதே வாய்ப்பைக் கொடுக்கும் ஒன்று” என்று அவர் காந்தி சொன்னதையும் மேற்கோள் காட்டி பேசினார்.ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை வரவேற்றுஉரையாற்றிய அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஸ்டெனி ஹோயர். மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் மேற்கோள்களை சுட்டிக்காட்டி பேசியதுடன் , இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புறவை வளர்த்து கொள்வது தான் இந்தியர்களுக்கும் அமரிக்கர்களுக்கும் ஒரே நோக்கம் என்றார்.யு.எஸ். நாடாளுமன்ற மெஜாரிட்டி தலைவர் ஸ்டெனி ஹோயர் பிரதமர் மோடியை ஹூஸ்டனுக்கு வந்தவரவேற்கிறார். அப்போது பேசுகையில் “அமெரிக்காவில் இந்தியர்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்” என அமெரிக்காவிற்கு அமெரிக்கவாழ் இந்தியர்களின் பங்களிப்பு குறித்து பாராட்டி ஸ்டெனி பேசினார் .அன்பான வரவேற்பு அளித்த ஹுஸ்டனுக்குபிரதமர் அலுவலகம் நன்றி தெரிவித்துள்ளது. இது போன்ற அற்புதமான பாசத்தை காட்டிய ஹூஸ்டனுக்கு நன்றி என பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.பிரதமர் மோடி மைதானத்திற்கு வந்த போது பலத்த கரஒலியும் உற்சாக குரல் எழுப்பியும் மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த வீடியோ காட்சியை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.பிரதமர் மோடியை என்.ஆர்.ஜி மைதானத்தில் அமெரிக்க அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். விரைவில் பிரதமர் மோடி பேச உள்ளார்.என்.ஆர்.ஜி மைதானத்திற்குபிரதமர் மோடி வந்துவிட்ட நிலையில் விரைவில் பேச உள்ளார்.பிரதமரின் பேச்சைக் கேட்க கிட்டத்தட்ட 50,000 இந்திய-அமெரிக்கர்கள் ஆர்வமுடன் உள்ளார்கள்,அமெரிக்க செனட்டர் ஜான் கார்னின் ஹூஸ்டனில் பிரதமர் மோடியை வரவேற்கும் போது பேசுகையில், “இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தகம் ஒவ்வொரு நாளும் வலுவடைந்து கொண்டே இருக்கிறது. இந்திய கலாச்சாரம் எங்கள் மாநிலத்தின் ஆடைகளால் பிணைக்கப்பட்டுள்ளது, பிரதமர் மோடியுடனான இந்த கலாச்சார உறவைக் கொண்டாடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்றார்டெக்ஸாஸ் மாகாணத்திற்கான செனட்டர் ஜான் கார்னின் கூறுகையில், “அதிபர் டிரம்ப் மற்றும் பிரமர் மோடி ஆகியோர் என்ன வகையான விவாதங்களை நடத்தப்போகிறார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது. இன்று அதிபர் டிரம்பிடம் இருந்து சில முக்கிய அறிவிப்புகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்த வேறுபாடுகளை நாங்கள் தீர்த்து வைக்க முடியும் என நம்புகிறேன்” என்றார்அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டு இருந்தார். இதற்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அவர் தனது பதிலில் இது நிச்சயமாக ஒரு சிறந்த நாள் ஆக இருக்கும். மிக விரைவில் உங்களை சந்திக்க தயாராக உள்ளேன் என பதிவிட்டு இருந்தார்.இரவு 9.35 மணி: பிரதமர் மோடி ஹௌடி மோடி நிகழ்ச்சி நடந்து வரும் என்ஆர்ஜி ஸ்டேடியத்திற்கு வருகை தந்தார்இரவு 8.50 மணி:டெக்சாஸின் ஹூஸ்டனில் நடந்து வரும் ஹௌடி மோடி நிகழ்ச்சியில் பங்க்ரா கலைஞர்கள் உற்சாக நடனம் ஆடினர்.டெக்சாஸ் வாழ் இந்தியர்கள் அமைப்பான டெக்சாஸ் இண்டியா போரம் ஹௌடி மோடி’ நிகழ்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்குத் தொடங்கி உள்ளது. இரவு 11.30 வரை நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியில் மோடியை வரவேற்கும் விதமாக குஜராத்தின் பாரம்பரிய தாண்டியா’ நடனத்தை சுமார் ஆயிரம் கலைஞர்கள் ஆட உள்ளார்கள். இதேபோல் இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள் நடத்தும் 90 நிமிட கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது..50,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடியின் உரையை கேட்கவும், அவரை பார்க்கவும் திரண்டு உள்ளார்கள் இதனால் அந்த இடமே உற்சாத்தில் கரைபுரண்டு ஓடுகிறது
[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ♦இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என விஜயகாந்த் மகன் அறிவிப்பு! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி

?கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக, அதிமுகவுடனான கூட்டணியை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தியால் கூட்டணியில் இருந்து விலகவுள்ளதா? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

?செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், தேமுதிக தலைமை கூறினால் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என கூறியுள்ளார்.

?ஏற்கனவே விக்கிரவாண்டி அருகில் உள்ள விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

?அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவை எதிர்த்து போட்டியிடுவது சாத்தியமில்லை என்பதால் ஒருவேளை தேர்தலில் போட்டியிட தேமுதிக முடிவு செய்துவிட்டால், அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் என எதிர்பார்க்கப்பட்டது.

?ஆனால் அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்தே வெற்றி பெற முடியாத தேமுதிக, தனித்து போட்டியிட்டு வெற்றியை ருசிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ♦சிலை கடத்தல் போலீஸ்காரர் சஸ்பெண்ட்

?திருச்சி சிறப்பு காவல் படை முதலாவது பட்டாலியன் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் பொன்ராஜ்.

?திருவாரூர் மாவட்டம் பூங்குடிமூலை என்ற ஊரில் உள்ள விநாயகர் கோயிலில் ஐம்பொன் சிலை திருட்டு போனது  தொடர்பாக பொன்ராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

?இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கில் கைதான பொன்ராஜை, திருச்சி சிறப்பு காவல் படை அதிகாரி நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.


[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ♦பள்ளிகளுக்கு நாளை முதல் காலாண்டு விடுமுறை

?பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் திங்கள்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளதால், வரும் அக்.2-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படவுள்ளது.

?அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவருக்கான காலாண்டு தேர்வுகள் கடந்த செப்.13- ஆம் தேதி தொடங்கியது.

?இந்த நிலையில் தேர்வுகள் திங்கள்கிழமையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து செப். 24 முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்படவுள்ளது.

?பின்னர் அக். 3-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள்  திறக்கப்படவுள்ளது. முன்னதாக, காந்தியின் 150- ஆவது பிறந்த தினத்தையொட்டி இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை ரத்து செய்யப்படவுள்ளதாகவும், விடுமுறை நாள்களில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகள் மாணவர்களுக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் பரவியது.

?இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித் துறை, காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என்றும், காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்திக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ♦போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரே ரசீதில் இருவர் பெயரிட்டு தனித்தனியே அபராதம் வசூல்

?திருப்பூர் வேலம்பாளையம் போலீசார் மோட்டார் வாகன சோதனையின்போது ஒரே ரசீதில் 2 பேருக்கு அபராதத் தொகை எழுதிக்கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

?திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமுருகன்பூண்டியிலிருந்து செட்டிபாளையம் செல்லும் ரோட்டில் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

?அப்போது அந்த வழியாக  ஹெல்மெட் அணியாமல் ரகுபிரசாத் என்பவர் பைக்கில் வந்துள்ளார். அவரை காவலர் நண்பர்கள் குழு ஒன்று மடக்கி பிடித்தனர். பின்னர் அங்கிருந்த காவலர் ஒருவர் அபராதம் விதித்து ரசீது வழங்கியுள்ளார்.

?பின்னர் அதே சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்த கருப்புசாமி என்பவரையும் பிடித்தனர்.

?இந்நிலையில், ரசீதுகள் பற்றாக்குறையாக உள்ளதாக கூறி, ரகுபிரசாத்தின் அபராத ரசீதை வாங்கி கருப்புசாமிக்கும் அதே ரசீதில் அபராதத் தொகையை எழுதிக் கொடுத்துள்ளார்.

?இந்த ரசீதின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.  இதுகுறித்து ரகுபிரசாத்திடம் கேட்டபோது, ‘ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களை பிடித்து அபராதம் விதித்தார்கள். எனக்கு ராமு என்னும் போலீசார் ரசீதை கொடுத்தார்.

?பின்னர் ரசீது பற்றாக்குறை எனக்கூறி எனக்கு கொடுத்த அதே  ரசீதில் கருப்புசாமிக்கும் அபராதம் விதித்தார். அந்த ரசீதில் எந்த ஒரு அதிகாரியின் கையெழுத்தும் இல்லை.

?பணம் கட்டியதற்கான ரசீது கேட்டதற்கும் அதெல்லாம் கிடையாது என கூறினார். நாங்களும் பணம் கட்டிவிட்டு அங்கிருந்து  சென்றுவிட்டோம்’ என கூறினார்.

?இதுகுறித்து போலீஸ் உதவி கமிஷ்னர் வெற்றிவேந்தனிடம் கேட்டபோது, ‘இது சம்பந்தமாக புகார்கள் ஏதும் வரவில்லை. சிலர் ஒரே ரசீதை வாங்கிச்சென்று அதில் அவர்களே பெயரை எழுதிவிடுகிறார்கள். எனவே இது குறித்து விசாரணை  செய்கிறோம்’ என்றார்.


[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ♦பிளஸ்-1 மாணவியிடம் ஆபாசமாக பேசிய அரசு பள்ளி ஆசிரியர்கள்… 12 பேர் மீது வழக்கு பதிவு!!

?மாணவியிடம் ஆபாசமாகவும், அசிங்க அசிங்கமாக பேசியதாக அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

?சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்த மாணவி ரஞ்சினி, பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். அவருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மடிக்கணினி கொடுக்கப்படவில்லை.

?பள்ளியில் அவரது பெற்றோர் கேட்டும் கொடுக்கவில்லை. இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

?அதன்பிறகு அந்த மாணவிக்கு மடிக்கணினி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கல்வி அதிகாரிகளிடம் புகார் செய்ததால், சம்பந்தப்பட்ட மாணவியை ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் தூண்டுதலின் பேரில் மாணவர்கள் சிலர் ஆபாசமாகவும், அசிங்கமான வார்த்தைகளால் பேசி மிரட்டியதாகயுள்ளனர்.

?இதனால், அந்த மாணவி, பள்ளிக்கு செல்ல மறுப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பள்ளி கல்வித்துறைக்கும், போலீஸ் கமிஷனருக்கும் மாணவியின் அம்மா புகார் ஒன்றை அளித்தார்.

?அதன்பேரில் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12 ஆசிரியர்கள், 10 மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ♦சுற்றுலா பயணிகளை கவர்வதில் முதன்மையாகத் திகழும் தமிழகம்

?உலகத்தில் தற்போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அதிகமுள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

?இதனால் நாட்டிலேயே அதிகளவு சுற்றுலாப்பயணிகளை அது ஈர்த்துள்ளது. தஞ்சை பெரிய கோயில் முதல் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி வரை உலக சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்து அவர்களை ஈர்த்து வருகிறது.

?இதனால் உலக அளவில் தமிழகத்திற்கு என சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாகி வருகின்றன.
 

[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ♦கர்நாடக அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு… உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

?கர்நாடகாவில் முந்தைய ஆட்சி கவிழக் காரணமான 15 அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை நடத்தவுள்ளது.

?கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற 15 அதிருப்தி எம்எல்ஏக்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்தார்.

?அந்த இடங்களுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 30-ஆம் தேதி கடைசி நாளாகும்.

?இந்நிலையில், பாரதிய ஜனதா ஆட்சி அமையக் காரணமாக இருந்த அந்த 15 பேரையும் இடைத்தேர்தலில் அதே தொகுதிகளில் நிறுத்த அக்கட்சி உறுதி அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

?த‌குதி நீக்க உத்தரவில், அவர்கள் 4 ஆண்டுகளுக்கு போட்டியிட அப்போதைய சபாநாயகர் தடை விதித்திருந்தார். அந்த உத்தரவை எதிர்த்து 15 பேரும் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவர்களை வேட்பாளராக அறிவிப்பதில் பாரதிய ஜனதாவுக்கு சிக்கல் உள்ளது.

?இந்நிலையில், அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. அதில் தகுதி நீக்கம் செல்லாது என்று அறிவித்தாலோ, அல்லது இடைக்கால தடை விதித்தாலோ மட்டுமே அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்பார்த்துள்ளனர்.

?இதற்கிடையே, டெல்லி சென்ற கர்நாடக முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.


[9/23, 8:54 AM] விண்மீண்நியூஸ்2: ♦பார்வையை இழந்தவருக்கு பாட வாய்ப்பளித்த இசையமைப்பாளர் இமான்

?பார்வையற்ற இளைஞர் ஒருவர் விஸ்வாசம் திரைப்பட பாடலை பாடிய காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வந்தது.

?இந்த வீடியோவை ட்விட்டரில் சிலர் பதிவிட்டனர். இதை கண்ட இசை அமைப்பாளர் டி. இமான், அந்த இளைஞரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

?கிருஷ்ணகிரி மாவட்டத்தை நொச்சிப்பட்டி எனும் கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி என்ற அந்த இளைஞரை தமது அடுத்த படத்தில் பாட வைக்கப்போவதாக இமான் கூறியுள்ளார். 

?திருமூர்த்தியின் தொலைபேசி எண் கிடைக்க காரணமான இருந்த சமூகவலைத்தள நெட்டிசன்களுக்கும் டி.இமான் நன்றி தெரிவித்தார்.

?இசையமைப்பாளர் டி.இமானின் இந்த செயலை சமூகவலைத்தளங்களில் பாராட்டி ஏராளமானோர் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

advertisement by google

Related Articles

Back to top button