சிரிக்க சிந்திக்க

உங்களுக்கு அல்சர் இருக்கா மேடம்? வாட்நான்சென்ஸ் ?சிரிப்போ சிரிப்பு

advertisement by google

அங்குட்டு ரேஷ்மா மேடம்ங்களா?

advertisement by google

Yes speaking…

advertisement by google

ஒங்களுக்கு அல்சர் இருக்கா மேடம்?

advertisement by google

வாட் நான்சென்ஸ்? யார் மேன் சொன்னா?

advertisement by google

இல்ல மேடம்…நாங்க புதுசா endoscopy centre ஆரம்பிச்சிருக்காேம்…
அதுக்குகாகத் தான் கேட்டேன்..

advertisement by google

ஏங்க…நீங்க endoscopy சென்டர் ஆரம்பிச்சதுக்காக நான் அல்சர் இருக்குன்னு ஒத்துக்கணுமா? என்னங்க கிறுக்குத்தனமா இருக்கு?

advertisement by google

இல்ல மேடம். அப்பிடியில்ல. அல்சர்ன்றது ரொம்ப common…அதான் கேட்டேன்…சரி, உங்க வீட்ல வேற யாருக்காச்சும் அல்சர் இருக்கா மேடம்?

advertisement by google

யோவ்…எனக்கே இல்லைன்றேன்…வீட்ல உள்ளவங்களப் பத்தி கேக்குறீங்க?

இல்ல மேடம். ப்ளீஸ்..கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. யாராவது எப்பவாவது மேல்வயிற்று வலி, சாப்பிடும் போது எரிச்சல் ன்னு எதாவது சொல்லிருப்பாங்க..

யாருக்கும் கெடையாதுய்யா. இம்ச பண்ணாத..

இல்ல மேடம்..ஒங்க ஒன்னு உட்ட தம்பி, அக்கா புருஷனோட ஆஃபீஸ் செக்ரட்ரி, உங்க ஆஃபீஸ் ப்யூனோட சித்திப் பையன்- இப்புடி யாருக்காவது?

என்ன எளவாப் போச்சு ஒங்களோட..டார்ச்சர் தாங்கல..ஒன்னால அல்சர் இல்ல, BP தான் வரப் போவுது எங்களுக்கு. ஃபோன கட் பன்றீங்களா இல்லையா இ்ப்ப?

அய்யய்யோ மேடம்…ப்ளீஸ்…ப்ளீஸ்…கட் பண்ணிடாதீங்க.ஒரு scopy பண்ணா இன்னொன்னு இலவசமாப் பண்ணி தர்றோம் மேடம். எங்க கிட்ட ஆஃபர் இருக்கு…
வேணாம்ன்னு சொல்லிடாதீங்க மேடம்..ப்ளீஸ்…

மெண்டலாய்யா நீ…அது என்ன Endoscopy centre’ஆ, இல்ல Louis Phillipe showroom தீபாவளி ஆஃபரா? கடுப்பேத்தாம ஃபோன வைய்யா மொதல்ல…

இல்ல மேடம். கோச்சுக்காதீங்க… Capsule endoscopy ன்னு ஒன்னு புதுசா கண்டு புடிச்சிருக்கோம் மேடம். அதப் பாத்தீங்கன்னா ஒங்களுக்கே ரொம்ப புடிச்சு போய்டும். நீங்களே endoscopy tube’அ எடுத்து வாய்ல உட்டுக்குவீங்க..ப்ளீஸ்…மறுப்புச் சொல்லாதீங்க..

கீழ்ப்பாக்கக் கேஸ் தான்யா நீ… confirmed’ஆ தெரிஞ்சு போச்சு…ஏன்யா, ஒரு கஸ்டமர் தனக்குத் தேவையில்லைன்னு சொல்லும் போது அத வலுக்கட்டாயமா அவுங்க மேல திணிக்கிறது பிச்சை எடுக்குறத விட கேவலம்யா…உன் சரக்கின் தரத்து மேல ஒனக்கு நம்பிக்கை இருந்தா மக்களா வரப் போறாங்க…இப்படி பிச்ச எடுக்குறது வெக்கமா இல்ல?

இல்ல மேடம். இருந்தாலும் ஒரே ஒரு தடவ எங்ககிட்ட endoscopy…..

இனி சரிப்பட்டு வராது….மரியாதயா ஒங்க பேரச் சொல்லுங்க.நான் யார் தெரியுமா? ஒரு பேங்க் மேனேஜர்..என் கணவர் வக்கீல்…nuisance case போட்டு ஒங்கள உண்டு இல்லன்னு பண்றேன் பாருங்க…

என் பேரா மேடம்?

ஆமான்யா…ஒன் பேர் தான்…நீதான இவ்வளவு நேரம் பேசியே என் கழுத்த அறுத்த?

என் பேர் சித்தார்த் ராஜன் மேடம்.. gastroenterologist…

இந்த பேர எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே..

ஆமாம் மேடம். நீங்க தான் போன வாரம் நான் எமெர்ஜென்ஸில பேஷண்ட்ட பாக்க கௌம்பிட்ருக்கும் போது லோன் வேணுமா ன்னு கேட்டு என்கிட்ட பேசினீங்களே மேடம்…நான் வேணாம்ன்னதும் திரும்ப ரெண்டு நாள் கழிச்சு ஃபோன் பண்ணி அதயே கேட்டீங்களே…நான் திரும்ப வேணாம்னதும் “உங்க தம்பிக்கி தேவப்படலாம்…தங்கச்சிக்கி தேவப்படலாம்… மாப்பிள்ளை வீடு கட்ற ப்ளான் வெச்சிருப்பாரு. அவருக்குத் தேவப்படலாம்… வேணுமா?”ன்னு கேட்டீங்களே…ஞாபகம் இருக்கா மேடம்? எங்க மேல இவ்வளவு அக்கற இருக்குற உங்க உடல்நலம் மேல எங்களுக்கு அக்கற இருக்காதா? அதான் மேடம் நான் call பண்ணேன்… நாளைக்கு nephrologist call பண்ணுவார் மேடம்…நாளான்னைக்கி cardiologist’அ call பண்ணச் சொல்லிருக்கேன் மேடம்…

……………………………………………….

மேடம்? ஹலோ….ஹலோ. லைன்ல இருக்கீங்களா? Endoscopy பண்ணிக்கிறீங்களா?

advertisement by google

Related Articles

Back to top button