கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

படித்த பள்ளியை தத்தெடுத்து கல்விக்கு உதவிய பெண் ஆய்வாளர் காஞ்சனா

advertisement by google

♦படித்த பள்ளியை தத்தெடுத்து கல்விக்கு உதவிய பெண் இன்ஸ்பெக்டர்

advertisement by google

?தான் படித்த அரசு பள்ளியில், மாணவர்கள் வருகை குறைந்ததையடுத்து, பெண் இன்ஸ்பெக்டர், அப்பள்ளியை தத்தெடுத்து புனரமைத்து கொடுத்துள்ளார்.

advertisement by google

?வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், வடசென்னை நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. கடந்த, 1941ம் ஆண்டு துவங்கப்பட்ட பழமையான இந்த பள்ளியில், தற்போது, 60க்கும் குறைவான மாணவ மாணவியர் மட்டுமே படிக்கின்றனர்.

advertisement by google

?பழமை வாய்ந்த இப்பள்ளி, மிகவும் மோசமான நிலையில், மக்களுக்கு தெரியாத வகையில், பழுதடைந்து, பொலிவிழந்து காணப்பட்டது.

advertisement by google

?தற்போது, கிண்டியில் உள்ள சிலை திருட்டு தடுப்பு பிரிவில் பணிபுரிந்த ஆய்வாளர் காஞ்சனா, 47, இப்பள்ளியில், 1982ல், கல்வி பயின்ற மாணவி ஆவார்.அவர், தான் படித்த பள்ளியில், மாணவர் சேர்க்கை குறைந்து இருப்பதை அறிந்து, பொலிவிழுந்த பள்ளியை தத்தெடுத்தார்.

advertisement by google

?தன் சொந்த செலவில், 50 ஆயிரம் ரூபாயில், பாழடைந்த கட்டடத்திற்கு, வர்ணம் பூசி புதுப்பித்தார். பள்ளிக்கு சென்று, மாணவர்களுக்கு, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

advertisement by google

?மாணவர்களுக்கு,பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார்.மேலும், இன்ஸ்பெக்டர் காஞ்சனா, தேசிய மற்றும் சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்று, 400க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றவர். ஆய்வாளர் காஞ்சனாவை தொடர்பு கொண்டு பாராட்ட விரும்புவோர், 98401 19466 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

advertisement by google

advertisement by google

Related Articles

Back to top button