இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்வரலாறு

சந்திரயான்2ஆதிமுதல் அந்தம் வரை எல்லாமே தமிழர்கள்தான் வியந்துபார்க்கும் வடஇந்தியா?

advertisement by google

சந்திரயான் 2.. ஆதி முதல் அந்தம் வரை.. எல்லாமே தமிழர்கள்தான்.. வியந்து பார்க்கும் வடஇந்தியா!

advertisement by google

சென்னை: சந்திராயன் 2 திட்டத்தின் ஆதி முதல் அந்தம் வரை தமிழர்கள்தான் மிக முக்கியமான பங்கு வகித்துள்ளனர். தற்போது விக்ரம் லேண்டரை நிலவில் கண்டுபிடித்ததும் சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான்.

advertisement by google

கடைசியில் பல தேடுதல் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு பின் இஸ்ரோவின் சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவின் ஆராய்ச்சி மூலம் இந்த விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவில் வேகமாக மோதி நொறுங்கி உள்ளது. நாசாவின் LROC விண்கல ஆய்வு கருவியின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் விழுந்து நொறுங்கி உள்ளது இதனால் உறுதியாகி உள்ளது.
அது என்ன ஏலியனா? சண்முக சுப்ரமணியன் அன்று கேட்ட ஒரு கேள்வி.. விக்ரம் லேண்டரின் புதிர் விலகியது!

advertisement by google

தமிழர்கள்தான் எப்படி
இந்த சந்திராயன் 2 திட்டத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை அனைத்து முக்கிய விஷயங்களிலும் தமிழர்கள்தான் முக்கிய பங்கு வகித்து இருக்கிறார்கள். அதிலும் மூன்று முக்கிய தமிழர்கள் இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி உள்ளனர். மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கே சிவன் என்ற இரண்டு தமிழர்களின் உழைப்பு இஸ்ரோவின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும். அதிலும் மயில்சாமி அண்ணாதுரை சந்திரயான் 1 மற்றும் 2 இரண்டிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

எப்படி செயலாற்றினார்
சந்திரயான் 1 திட்டம் தொடங்கப்பட்ட போது அதன் திட்ட இயக்குனராக இருந்தவர்தான் மயில்சாமி அண்ணாதுரை. இவரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் சந்திரயான் 1 உருவாக்கப்பட்டது. அது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. உலகமே அப்போது இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது.

advertisement by google

அடுத்து என்ன
2008ல் இவர் இந்த சாதனையை நிகழ்த்திய உடன் உடனே சந்திரயான் 2 திட்டம் இவரின் தலைமையில் கீழ் உருவாக்க தொடங்கப்பட்டது. அதன்பின் அவரின் ஓய்வை தொடர்ந்து சந்திரயான் 2 பணிகள் கொஞ்சம் தொய்வு அடைந்தது. இதையடுத்து இஸ்ரோவின் தலைவராக தமிழரான கே சிவன் நியமிக்கப்பட்டார்.

advertisement by google

மீண்டும் தமிழர்
அவர் நியமிக்கப்பட்டதும் சந்திரயான் 2வை உடனடியாக விண்ணில் செலுத்துவோம் என்று கூறினார். பணிகளை வேகமாக முடுக்கிவிட்டார்.இந்த வருட டிசம்பர் மாதம் குறி வைக்கப்பட்டு அதற்கு முன்பாக தற்போது ஜூலை மாதத்திலேயே சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் சந்திராயன் 2ன் ஆர்பிட்டர் நிலவின் வட்டப்பாதையில் சரியாக இயங்கி வந்தாலும், விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கவில்லை.

advertisement by google

நிலவில் நொறுங்கியது
ஆனால் நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கவில்லை. சரியாக 2 கிமீ தூரம் வரை சென்ற விக்ரம் லேண்டர் அதன்பின் தொடர்பை இழந்தது. அதற்கு அடுத்து மூன்று நாட்கள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள தீவிரமாக முயன்றும் கூட அதை தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது இஸ்ரோவின் சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவின் ஆராய்ச்சி மூலம் இந்த விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதிலும் தமிழர்
இந்த நிலையில் சந்திராயன் 2 வை உருவாக்கியது மட்டுமின்றி, அதன் லேண்டரை கண்டுபிடிக்க உதவியதும் தமிழர்தான். நிலவில் விக்ரம் லேண்டர் விழுந்த பகுதியை தமிழர் சண்முக சுப்ரமணியன் என்பவர்தான் கண்டுபிடித்து கூறியுள்ளார். இவர் கொடுத்த ஐடியாவின் மூலம்தான் நாசா இந்த லேண்டரை கண்டுபிடித்தது.

செம தமிழர்கள்
இப்படி சந்திராயன் 2ன் அனைத்து முக்கிய பணிகள், திருப்பங்களுக்கு பின்பாகவும் தமிழர்கள் 3 பேர்தான் இருந்துள்ளனர். தலைமை பொறுப்பில் இருந்த இவர்கள் இருவர் மட்டுமின்றி திருநெல்வேலி மஹேந்திரகிரியில் இஸ்ரோவிற்காக ஓயாமல் உழைக்கும் இன்னும் பல தமிழர்களும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஆவார்கள்.

எப்படி
ஆம் திருநெல்வேலி மஹேந்திரகிரியில் உள்ள ISRO Propulsion Complex (IPRC) தற்போது அனுப்பப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

Related Articles

Back to top button