இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறுவரி விளம்பரங்கள்

கொரோனா தொல்லையை விட EMI தொல்லை அதிகமா இருக்கே? அச்சத்தில் மக்கள்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

விண்மீண்நியூஸ்:
என்ன கொடுமை சார் இது!
கொரோனா தொல்லை விட EMI தொல்லை அதிகமா இருக்கே – அச்சத்தில் மக்கள்

advertisement by google

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இன்று வரை மூன்று மாதங்கள் முடிவடையும் நிலையில் மேலும் இன்று ஊரடங்கு (19.06.2020 முதல் 31.06.2020) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இது அனைவரும் அறிந்ததே, இதனிடையே நிறைய தளர்வுகள் ஆங்காங்கே அளிக்கப்பட்டதால் மேலும் கொரோனா தொற்று அதிகளவில் பாதிக்கப்பட்டு கோர தாண்டவம் ஆடிகொண்டிருக்கின்றது..

advertisement by google

இந்நிலையில் இவ்வளவு மோசமான சூழலில்கூட பொதுமக்கள் கொரோனாவை கண்டு அச்சப்படுவதைவிட தங்களுடைய மொபைல் பார்த்து அச்சப்படுவதுதான் அதிகம் காரணம் EMI (மாத தவனை).

advertisement by google

நமது மத்திய அரசும், RBI யும் இந்த கொரோனா லாக்டவுனால் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளதை கருத்தில்கொண்டு அவர்களின் நலனுக்காக அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் பெற்ற கடனுக்காக மாத தவனைகள் (EMI) செலுத்த மூன்று மாதம் (மார்ச், ஏப்ரல், மே) அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.. இதனை ஒரு சில வங்கிககள் நிறுவனங்கள் பின்பற்றி பொதுமக்களுக்கு இச்சலுகைகளும் வழங்கியது.. சில முக்கிய பஜார்ஜ், கேபிடல், டிவிஎஸ், ஜனலஷ்மி, ஆசிர்வாதம் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் இதனை பின்பற்றாமல் பொதுமக்களிடம் வசூலித்துள்ளது.. இதனிடையே ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் சிரமப்படகூடாது என்பதன் அடிப்படையில் RBI மேலும் மூன்று மாதம் (ஜீன்,ஜூலை,ஆகஸ்ட்) மாதம் வரை தவனை EMI செலுத்த கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது..

advertisement by google

இதனை ஏற்கனவே ஏற்றுகொண்டு இச்சலுகை வழங்கிய வங்கிகள் நிதி நிறுவனங்கள் மீண்டும் Moratorium வழங்கியது..

advertisement by google

ஆனால் அதே முக்கிய தனியார் நிதி நிறுவனங்கள் RBI சொன்னாலும் சரி இல்லை CBI சொன்னாலும் சரி நாங்க கண்டுக்க மாட்டோம்.. பணத்தை எப்ப கட்டுகிறாய் என ஒரு நாளைக்கு 4–5 முறை கால் செய்து மக்களை மிரட்டி வருகின்றனர்..

advertisement by google

அப்படியும் விஷயம் தெரிந்தவர்கள் கேள்வி எழுப்பினால் அந்த நிதி நிறுவனத்தின் பதில் இதுவே :-

advertisement by google

உதாரணம் : ஒருவருக்கு ஓர் நிதி நிறுவனத்தின் கால் வந்தது என்று வைத்துகொள்வோம்.

வாடிக்கையாளர் : ஹலோ யாரு ?

நிதி நிறுவனம் : சார் நாங்க நிதி நிறுவனத்தில் இருந்து பேசரோம், உங்க மாத தவனை பாக்கி செலுத்தாமல் மூன்று மாதங்கள் நிலுவையில் உள்ளது. எப்போ செலுத்துவீர்கள்.

வாடிக்கையாளர் : சார் நான் Moratorium Activate செய்துள்ளேன்..

நிதி நிறுவனம் : சார் அந்த Offer தங்களுக்கு இல்லை ஆகவே நீங்கள் செலுத்தவேண்டும்.

வாடிக்கையாளர் : சார் அந்த சலுகை ஒட்டு மொத்த மக்களுக்கும் பொருந்தும் என்று RBI ல் கூறபட்டுள்ளது..

நிதி நிறுவனம் : சார் அப்படி ஒன்றும் எங்களுக்கு ஆர்டர் ஏதும் RBI அனுப்பவில்லை, தங்களது லோன் கணக்கு இந்த சலுகைக்கு பொருந்தவில்லை. எனவே நீங்கள் கட்டாயமாக தவனைகள் செலுத்தியே ஆகவேண்டும்.

வாடிக்கையாளர் : சார் எப்படி சார் முடியும் ஏதோ சற்று தளர்வால் தற்போதுதான் வியாபாரம் பார்க்க துவங்கியுள்ளோம்.
வரும் வருமானத்தில் குடும்பத்தை பார்பதா இல்லை தவனை செலுத்துவதா. இதற்காகதான் Moratorium அறிவித்தார்கள் ஆனால் அந்த சலுகை எனக்கு இல்லை என்கிறீர்கள்..

நிதி நிறுவனம் : சார் அதெல்லாம் விடுங்க இன்னும் இரண்டு நாட்களில் தவனைகளை கட்டுங்க சலுகை எல்லாம் இல்லை

அழைப்பு துன்டிக்கப்பட்டது.

இப்படி ஓர் நிறுவனம் டார்ச்சர் செய்து கொண்டிருக்கையில் மற்றொரு நிறுவனம் அழைப்பில் இதே கேள்வி?
அதற்கு வாடிக்கையாளர் அதே பதில், அந்த நிறுவனமோ அப்படியா சார் அதற்கு கூடுதல் வட்டி வரும் பரவாயில்லையா என்று கேள்வி? வாடிக்கையாளர் பரவாயில்லை பதில், மேலும் வாடிக்கையாளர் நிறுவனத்திடம் கேள்வி கேட்டார். Moratorium Active செய்தும் ஏன் தினமும் கால் செய்கிறீர்கள் என்று. அதற்கு நிறுவனம் சார் இது கணினி பதிவு சார் இதில் தவனை செலுத்தாத பட்டியலில் உங்கள் பெயர் இருக்கு மேலும் தினமும் கால் வரும்படி அதனை செட் செய்துள்ளதால் நாங்கள் அழைப்போம்..

வாடிக்கையாளர் என்ன கொடுமை சார் இது என்றபடி தினமும் இப்படி ஒரு டார்ச்சர் அனுபவிக்க வேண்டியுள்ளது.

இதன் நடுவே தனியார் சிறு நிதி நிறுவனங்கள், மகளீர் குழு என வட்டி வசூல் ஒருபக்கம், ஆன்லைன் லோன்களான
(India bulls, Cashbean, CashTM, Rupeebus, SuperCash, Cashin) போன்ற டார்ச்சர் ஒருபக்கம் என பொதுமக்கள் கொரோனா பயத்தைவிட இவர்களால் ஏற்படும் பயம் அதிகம்.. பெனால்டி மற்றும் கூடுதல் வட்டி என சேர்ப்பது மட்டுமல்லாது RBI பேச்சை மதிக்க மாட்டோம் என தவனை செலுத்த டார்ச்சர்..

இதுவரை பல வருடங்களாக மாதம் தவறாமல் EMI, கடன் வட்டி, வாடகை என தவறாமல் செலுத்தி வந்த நபர்களை கூட நிதி நிறுவனங்கள் இந்த சூழ்நிலையில் தகாத வார்த்தை பேசி ஊரடங்கு என்றால் சாப்பிடாமல் இருக்கியா மூனு வேல தின்கிறாய் அல்லவா, கடனை கட்டு என அவமானப்படுத்தும் அவலம் அரசாங்கத்தின் பார்வைக்கு செல்லவில்லை போல..

அதுமட்டுமின்றி வீட்டு ஓனர்கள் வாடகை கேட்ட

ு நச்சரிப்பு ,கடை வாடகை ஒருபக்கம் என பொதுமக்கள் “தினம் தினம் ரனம் ரனம்”

இப்படி மத்திய மாநில அரசாங்கம் அறிவித்த தவனை கால அவகாம், சிறு நிதி நிறுவன வட்டி வசூலிப்பு, மகளீர் குழு தவனை, வீடு கடை வாடகை வசூலிப்பு என அரசு வழங்கிய சலுகைகள் எதையுமே ஒருவர்கூட கடைபிடிக்காமல் இருப்பது வேதனை அளிக்கின்றது..

கொரோனா, வெட்டுக்கிளி போன்றவைகள் நடுவே இது போன்ற பணத்தை கேட்டு பிழியும் வைரஸ்களும் மக்களை வாழ விடாமல் செய்கின்றனர்..

தனியார் நிதி நிறுவனங்களே மக்கள் ஓரேடியாக தவனைகளை தள்ளுபடி கேட்கவில்லை அதனை செலுத்த கால அவகாசம் மட்டுமே கேட்டனர்..
அதற்கும் நமது அரசாங்கம் வழிவகுத்தது..
எனவே இதனை கருத்தில்கொண்டு அரசாங்கத்தின் Moratorium சலுகை ஏற்று அனைத்து பொதுமக்களுக்கும் இது பொருந்தும் என Activate செய்து போன் செய்து பிழிவதை தவிற்தால் இது போன்ற சூழ்நிலையில் நிதி நிறுவனங்கள் மக்களுக்கு கடவுளாய் காட்சி அளிக்கும்..

அப்படியும் இதனை பின்பற்றாமல் மக்களை பிழிந்து தினமும் EMI கட்டு என டார்ச்சர் செய்யும் நிதி நிறுவனங்கள், வங்கிகள், கந்துவட்டி நபர்கள் மீது அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றனர்.

டார்ச்சர் செய்வதில் முதலிடம் பிடித்த நிதி நிறுவனங்கள் :
பஜாஜ் பின்சர்வ்(Financial),
IDFC First Bank,
HDB Finance,
TVS Credit,
Janalakshmi samll financial, இவைகள் தினமும் மக்களுக்கு கால் செய்து தங்களுக்கு Moratorium பொருந்தாது EMI செலுத்தவேண்டும் என டார்ச்சர்..

தமிழக அரசே மக்களை காப்பாற்று

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button