t

கலக்கல் அழகிகள் கம்பி எண்ணிகொண்டிருக்கிறார்கள்.. லிப்ஸ்டிக் ஹேர்ஸ்டைல் மாடர்ன்டிரஸ் என அட்டூழியம்

advertisement by google

லிப்ஸ்டிக்.. ஹேர்ஸ்டைல்.. மார்டன் டிரஸ்.. என கலக்கல் “அழகிகள்” இன்று கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

advertisement by google

திருப்பூரை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் ஒரு எலக்ட்ரீசியன். கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 2 வருஷத்துக்கு முன்பு படித்து முடித்துள்ளார். ஆனால் கொஞ்ச நாளைக்கு முன்பு, அவரது ஒரிஜினல் டிசி தொலைந்து போய்விட்டது. அதனால் டூப்ளிக்கேட் சர்ட்டிபிகேட் வாங்க பீளமேட்டில் உள்ள காலேஜுக்கு வந்துள்ளார். அந்த சமயத்தில், வழியில் சில இளம் பெண்கள் வந்தனர்.

advertisement by google

மார்டன் டிரஸ், நியூ ஹேர்ஸ்டைல், லிப்ஸ்டிக் என பார்க்கவே அழகாகவும், கலர்ஃபுல்லாகவும் இருந்தனர். திடீரென விக்னேஷிடம் வந்து அவர்கள் பணம் கேட்டுள்ளார்கள். அவர்களை பார்த்ததும், விக்கேன் பாக்கெட்டில் இருந்து 10 ரூபாய் எடுத்து தந்தார். அதற்கு அந்த பெண்கள், “ஏய்.. என்னா.. பணம் கேட்டா 10 ரூபாய் தர்றே.. எடு.. எடு.. உள்ளே இருக்கிற பணத்தை எடு” என்று மிரட்டினர். பணம் இல்லை என்று சொல்லியும் விக்னேஷை அவர்கள் விடுவதாக இல்லை. மிரட்டி, தொந்தரவு செய்து, பாக்கெட்டுக்குள் வைத்திருந்த 3 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், 3 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்களிடம் இருந்து வாங்க முயற்சி செய்துள்ளார்.

advertisement by google

இதனால் பெரிய பிரச்சனையே அங்கு நடந்தது. ஒருத்தருக்கொருத்தர் வாக்குவாதம், சண்டை போட்டு கொண்டனர். நடுரோட்டில் இப்படி தகராறு நடப்பதை கண்டதும், ரோந்து போய் கொண்டிருந்த பீளமேடு போலீசார் அந்த அழகிகளை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களின் பெயர் கனி, ஆனந்தி என்று கூறினர். ஆனாலும் அவர்களின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கவும், தங்கள் பாணி விசாரணையை ஆரம்பித்தனர்.அப்போதுதான் விக்னேஷ் மட்டுமல்ல.. போலீசாரும் “ஆ”வென வாயை பிளந்தனர். அந்த 2 பேரும் பெண்களே இல்லை.. திருநங்கைகளும் இல்லை.. அவர்கள் அக்மார்க் “ஆண்கள்”.. அழகிகள் போல் கெட்-அப் போட்டு கொண்டு, தனியாக வரும் ஆண்களை மடக்கி வழிப்பறி செய்வதுதான இவர்களின் வேலையாம். அழகிகள் இப்போது ஜெயிலுக்குள்!

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button