இந்தியா

இராமேஸ்வரம்அரியமான் கடற்கரையில் குளித்த சுற்றுலாப் பயணிகளை அழகான விஷஜெல்லி மீன்கள் கடித்ததால் பரபரப்பு

advertisement by google

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த அரிய மான் சிறந்த பொழுது போக்கு இடமாக திகழ்கிறது. இதனால் ராமேசுவரம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பெரும்பாலானோர் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பொழுதை கழிக்க அரியமான் கடற்கரைக்கு வருகின்றனர்.அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடலில் உற்சாகமாக குளித்து மகிழ்வதுடன் கடற்கரை ஓரமுள்ள சவுக்கு காடுகளில் குடும்பத்தினருடன் அமர்த்து உணவு சாப்பிட்டு விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது பக்ரீத் பண்டிகையை யொட்டி தொடர் விடுமுறை மற்றும் அரியமான் கடற்கரையில் கடற்கரை திருவிழா நடைபெற்று வருவதால் தினசரி திரளான சுற்றுலாப் பயணிகள் அரியமானுக்கு குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.இதனிடையே கடலில் தற்போது ஜெல்லி மீன்கள் அதிகளவில் காணப்படுகிறது. ஒளிரும் தன்மையும், மெல்லிய உடல் அமைப்பும் கொண்ட இந்த மீன்கள் தண்ணீரின் நிறத்தில் காணப்படுகின்றன. பசையும், பற்றிக் கொள்ளும் தன்மையும் உள்ளதால் மனிதர்களின் உடலில் எளிதில் ஒட்டிக் கொள்கின்றன.விஷத்தன்மை உள்ள இந்த மீன்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதனை பிடித்து மகிழ்கின்றனர். அந்த மீன் ஒட்டிக்கொள்ளும் போது, அதில் இருந்து சுரக்கும் விஷத்தன்மை கொண்ட திரவம் உடலில் அரிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது.இந்நிலையில் இன்று அரியமான் கடற்கரையில் குளித்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஜெல்லி மீன் கடித்ததில் அவர்களுக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டதுடன், ஒவ்வாமை ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு மருத்துவ குழுவினர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.இதுதொடர்பாக சுற்றுலா பயணிகளிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே இதுகுறித்து கடற்கரையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button