இந்தியா

திமுக கூட்டணியில் கமலுக்குத் தொகுதி வழங்குவதில் இழுபறி , கவலைகிடம் ?

advertisement by google

சென்னை: திமுக கூட்டணியில் மூன்று தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

advertisement by google

மக்கள் நீதி மய்யம் போட்டியிட விரும்பும் நான்கு தொகுதிகளையும் கூட்டணி கட்சிகள் விட்டுக் கொடுக்க மறுத்து வருகின்றன.

advertisement by google

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.

advertisement by google

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் பேச்சு வார்த்தை இன்னும் நடைபெறவில்லை.

advertisement by google

வெளிநாடு சென்றுள்ள கமல்ஹாசன் இரு நாள்களில் சென்னை திரும்பிய பின்னர் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

advertisement by google

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சியான காங்கிரசுக்கே இந்த முறை 5 தொகுதிகளை மட்டுமே கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

advertisement by google

அப்படி ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் பட்சத்தில் அந்த தொகுதியில் கமல்ஹாசனே களம் இறங்க முடிவு செய்துள்ளார்.

advertisement by google

தென் சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் விரும்புகிறார்கள். இதில் எந்த தொகுதியை கமல்ஹாசனுக்கு ஒதுக்கிக் கொடுப்பது என்பதில் கடுமையான இழுபறி ஏற்பட்டுள்ளது.

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி தற்போது திமுக வசம் உள்ளது. கோவை, மதுரை தொகுதிகள் கம்யூனிஸ்டு கட்சிகள் வெற்றிபெற்ற தொகுதிகளாகும். ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இப்படி மக்கள் நீதி மய்யம் போட்டியிட விரும்பும் நான்கு தொகுதிகளையும் கூட்டணிக் கட்சிகள் விட்டுக் கொடுக்க மறுத்து வருகின்றன. தென்சென்னை தொகுதியை விட்டுக்கொடுக்க திமுகவுக்கு மனமில்லை.

கோவை, மதுரை தொகுதிகள் தாங்கள் கடந்த முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதிகள் என்பதால் அவற்றை எப்படி விட்டுக்கொடுப்பது என்று கம்யூனிஸ்ட் கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ளன.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button