கோவில்பட்டியில் நுண் உரம் செயலாக்க மையத்தை இடமாற்றம் செய்யக்கோரி தாமக கட்சியின் கோவில்பட்டி நகரத்தலைவர் இராஜகோபால் தலைமையில் மனு?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
கோவில்பட்டியில் நுண் உரம் செயலாக்கம் மையத்தை இடமாற்றம் செய்யக் கோரி த.மா.க மனு
கோவில்பட்டி ஊரணித் தெருவில் உள்ள நுண் உரம் செயலாக்கம் மையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட ஊரணித் தெருவில் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை அப்பகுதி மக்களிடம் இருந்து சேகரித்து அங்கு நுண் உரம் செயலாக்கம் மையத்தில் வைத்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மையத்தின் எதிரே நகராட்சி சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது. இந்த சுகாதார மையத்தில் 24 மணி நேரமும் பிரசவமும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள நுண் உரம் செயலாக்கம் மையத்தில் தூர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், நோயாளிகள் மூக்கைப்பிடித்தபடி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால் நுண் உரம் செயலாக்கம் மையத்தினால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் உள்ள உரம் செயலாக்கம் மையத்தை இடமாற்றம் செய்யக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமையில் நகரத் துணைச் செயலர் விக்னேஷ் நகராட்சி அலுவலக மேலாளர் வெங்கடாசலத்திடம் மனு அளித்தார்.
அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆழ்வார்சாமி, செண்பகராஜ், திருமுருகன், மூர்த்தி, மாரிமுத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.