உலக செய்திகள்

மலைப்பாம்பு, பல்லி திருட்டு அமெரிக்காவில்

advertisement by google

அட மக்கு திருடர்களா பையில் நாலு மலைப்பாம்பு இருக்கிறது தெரியாம திருடிட்டுபோயிட்டீங்களே

advertisement by google

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், திருடர்கள் சிலர் மலைப்பாம்பு வைக்கப்பட்டிருந்த பையை திருடிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

advertisement by google

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் பகுதியை சேர்ந்தவர் பிரைன் கண்டி. பாம்புகள் ஆர்வலரான இவர், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பாம்புகள் குறித்து விழிப்புணர்வு வகுப்பு எடுத்து வருகிறார்.கடந்த சனிக்கிழமை காலை சான் ஜோஸ் பகுதியில் உள்ள ஒரு நூலகத்தில் பாம்புகள் குறித்து மாணவர்களுக்கு வகுப்பு நடத்தினார் கண்டி. அப்போது தான் வளர்த்து வரும் பாம்புகளில் இருந்து 4 மலைப்பாம்புகள் மற்றும் ஒரு பெரிய சைஸ் பல்லியை ஒரு பையில் போட்டு கூடவே எடுத்து சென்றிருந்தார். வகுப்பு முடித்து கண்டி தனது காரில் புறப்படும் போது, அங்கிருந்த சில நபர்கள், அவரது பையை பறித்து சென்றுவிட்டனர். திருடர்களை பிடிக்க கண்டி முயற்சி செய்தார். ஆனால் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து இணைய தளம் மூலம் பிரைன் கண்டி அமெரிக்க போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், பையில் இருந்த நான்கு மலைப்பாம்புகள் மற்றும் பல்லியின் தன்மைகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அந்த மலைப்பாம்புகள் விஷத்தன்மையற்றவை என்பதால், அவைகளை துன்புறுத்த வேண்டாம் என கண்டி கேட்டுக்கொண்டுள்ளார்.கிண்டியில் பையில் இருப்பது மலைப் பாம்புகள் என தெரிந்தே திருடர்கள் திருடினார்களா? அல்லது பணம் இருக்கும் என நினைத்து திருடினார்களா என்பது தெரியவில்லை. ஒருவேளை பாம்பு இருப்பது தெரியாமல் அந்த பையை திறந்தால்..! அய்யோ.. அம்மா… அந்த நபர்களின் நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்களேன்.. இது தான் திருடனுக்கு தேள் கொட்டிய கதையோ என்னவோ.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button