தமிழகம்

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பயணிகளை அழைத்துச் செல்லவதற்காக கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு, மாற்றுதிறனாளிகள், முதியோர்களுக்கு அதிரடியாக உதவிய காவல்துறையினர், உணர்வு பூர்வமாக நன்றி தெரிவித்த காமநாயக்கன்பட்டி மாற்றுதிறனாளிகள் சங்கம்?

advertisement by google

கோவில்பட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து காலை 7.15 மணியிலிருந்து பேருந்துகள் இயங்கத் தொடங்கியது. மேலும் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பயணிகளை கூடுதல் பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

advertisement by google

கோவில்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் மழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

advertisement by google

கோவில்பட்டி பிரதான சாலையில் இளையரசனேந்தல் சாலை விலக்கு, மாதாங்கோவில் விலக்கு, அண்ணா பேருந்து நிலையம் முதல் தெஷ்ணவிநாயகா் கோயில் பகுதி, புதுரோடு சந்திப்பு, தினசரி சந்திப்பு என பல பகுதிகளில் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து புறப்படும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியாமல் பணிமனை வளாகத்தில் உள்ளது.

advertisement by google

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலை, இலக்குமி ஆலை அருகே, கிருஷ்ணா நகா் செல்லும் சாலை, இலுப்பையூரணி கிருஷ்ணா நகா் செல்லும் சாலை, இலக்குமி ஆலை அருகே ஆகிய இடங்களில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீா் குளம் போல் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

advertisement by google

கோவில்பட்டியில் இருந்தும் செல்ல முடியாமல் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

இந்த நிலையில், கூடுதல் பேருந்து நிலைய வழியாக இளையரசனேந்தல் சசாலையில் வழியாக கோவில்பட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை, மின்துறை ஊழியர்கள் ஆகியோர் செல்ல முயன்றால் அத்தை கொண்டான் ஊரூணி நிரம்பி இளையராசங்கள் சாலையில் சுமார் 5 அடி உயரம் தண்ணீர் செல்வதால் எந்த ஒரு வாகனமும் செல்ல முடியவில்லை.

advertisement by google

கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து காலை 3:30 மணிக்கு புறப்பட வேண்டிய பேருந்துகள் பணிமனை வளாகத்துக்குள்ளேயே இருந்து வருகிறது. இதுபோல நிஜாமுதீன் கன்னியாகுமரி விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் காலை சுமார் 4.15 முதல், சென்னை தூத்துக்குடி முத்து நகர் விரைவில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் காலை சுமார் 4.50 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது .

பேருந்துகள் இயங்கத் தொடங்கியது

இந்த நிலையில், கோவில்பட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து திங்கள்கிழமை (டிச.18) காலை 7.15 மணியிலிருந்து பேருந்துகள் இயங்கத் தொடங்கியது. மேலும் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பயணிகளை அழைத்துச் செல்லவதற்காக கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button