உலக செய்திகள்

127ஹவர்ஸ் கதை

advertisement by google

127 Hours

advertisement by google

“டேய்! நீ இன்னும் இத்தன மணித்தியாலத்துல சாகப் போற,
அதுவும் இல்லாம, ரொம்ப வதைக்கப்பட்டு இறந்து போகப் போற” ன்னு,, நம்ம மனசாட்சி நமக்குள்ள பேசிக்கிட்டு இருந்தா, அதுக்குரிய ஒரு சூழ்நிலைல நாம மாட்டிக்கிட்டா எப்படி இருக்கும்ன்றது தான் இந்த 127 ஹவர்ஸ் கதை.

advertisement by google

ஒரு மலையேறும் இளைஞன், மவுன்டைன் ஒன்னுக்குள்ள போறான். போற வழியில அவனுக்குத் தேவையான கட்டுச்சாதனங்களை கையோடு எடுத்துட்டு போறான். ஒரு பைக்குள்ள,,
அவனுக்கு மீண்டு வரும் வரைக்கும் தேவையான கயிறு, கத்தி, செல்போன், கேமரா, ன்னு,, சில பொருட்கள்.
அதோட கைல ஒரு வாட்டர் பாட்டில்.

advertisement by google

போற வழியில ரெண்டு பெண்களை இடையில சந்திக்கிறான். அவுங்க கூட ரொம்ப சந்தோஷமா சில மணி நேரத்தக் கடத்திட்டு, அப்புறம் தனியா பிரிஞ்சி, அவன் பயணத்தைத் தொடர்கிறான்.

advertisement by google

சுற்றிலும் பாலைவனப் புழுதி, கண்ணெட்டும் தூரம் வரை மனித வாசம் இல்லை, கோடி ரூபாய் குடுத்தாலும் தண்ணீர் விற்க யாரும் இல்லை, உணவுக்குக் கொண்டு போன சில ச்சிப்ஸ் பாக்கெட் முடிஞ்சா,, கத்திக் கதறினா கூட சாப்பாடு கிடைக்காது.
அவன் இந்த ஆயத்தங்களை எல்லாம் செய்து கொண்டது,, இன்ன நேரத்துக்குள்ள திரும்பிடலாம்னு தான். ஆனா! அங்க தான் விதி தன் அகோரத்தை இவன வச்சி டெஸ்ட் பண்ண ஆரம்பிக்குது.

advertisement by google

முதல் தடவை அவனின் உற்சாகம் வீணடிக்கப்பட்ட ஓர் நாளை அவன் சந்திக்கிறான்.

advertisement by google

இரண்டு மண் மலையினிடையே கால் தவறி விழுந்துட்றான். இவன் விழுகுறதோட சேர்ந்து ஒரு பாறாங்கல்லும் வந்து பின்னாடி விழுந்து, தன் கை அந்த பாறாங்கல்லோடு சேர்ந்து இறுகிப் போகிறது. ஒரு கைய மட்டும் தான் யூஸ் பண்ணலாம்ன்ற நிலை. ஒரு நாள் கடக்குது இரண்டு நாள் கடக்குது கத்துறான் கதறுறான். தன்னாலான முயற்சி எல்லாம் செஞ்சி பாக்குறான். உதவிக்கு யாராவது ஒரே ஒரு மனுஷன வேண்டி நிக்கிறான், டெய்லி காலைல இவன் கிடக்குற பள்ளத்தாக்குக்கு மேலே, ஒரு பருந்து மட்டும் பறந்து செல்லும். இருந்த ஒரு பாட்டில் தண்ணியும் தீர்ந்து போச்சி, தண்ணி இல்ல, சாப்பாடு இல்ல, அடுத்த நொடி உயிர் கேள்விக்குறியாக ஆடுது. இறுகின கைல இருந்து ரத்தம் கசியத் தொடங்குது. அந்த கைய பாறையோடு வச்சி அறுத்து போட முடிவு பண்றான். கடைசில என்னாகும்ங்குறது தான் மீதிக் கதை. (படத்தின் இசை நம்ம
ஏ. ஆர். ரஹ்மான் சார் தான்)

advertisement by google

அப்போ தான் அவனுக்கு! மேலே, தன் சைக்கிள் நிறுத்தி வச்ச இடத்துல உள்ள கொஞ்சூன்டு சாப்பாட்டின் அருமை புரியுது, தான் கொட்டி வீசிக் குடித்து அரட்டை அடித்த நொடிகள் கண் முன்ன வந்து போகுது, அப்பா அம்மா நண்பர்கள் ன்னு எல்லாத்தையும் நெனச்சிப் பாக்குறான். எல்லாத்தையும் கண்ண மூடி சுவாசிச்சு அனுபவிக்கிறான்.

வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்தியாலமும் நம்மைக் கடந்து போய்க்கிட்டே தான் இருக்கு. நாம வாழ்க்கையோடு சேர்ந்து ஓட்றோம். இதுல நமக்கு வாழ்க்கை பல விஷயங்கள கத்துக் குடுத்துட்டே தான் இருக்கும்.

பல மனுஷங்க, பல சூழ்நிலைகள், பல கஷ்டங்கள், பின் அதிலிருந்து மீளுதல் என,, வாழ்க்கை ஒவ்வொன்றையும் காட்டித் தருது. அறிமுகம் செய்து வைக்குது. அதுல சில போது “நோ மோர்” ன்னு,, சொல்ற அளவுக்கு பெருந்துயர்களுக்குள்ள தள்ளி விட்டு வேடிக்கையும் பார்க்கும்.

அப்போ தான் மனுஷன் நிதானமடைகிறான். தான் செஞ்ச தவறுகள், தான் கஷ்டப்படுத்தி பார்த்த மனுஷங்க, தான் இழந்த சந்தோஷம், தான் சேர்த்து வச்சிருக்க அன்பானவங்க எத்தனை பேரு, யாருக்கோ எங்கயோ எப்பவோ பண்ண ஒரு கெடுதி, தான் விரயம் செஞ்ச உணவு, மத்தவங்களுக்கு உதவி செய்யத் தவறிப் போன நொடிகள், ன்னு,, எல்லாத்தையும் அசை போட்டுப் பாக்குறான். அப்ப அதையெல்லாம் சரி செஞ்சிட்ற அவகாசத்த இந்த வாழ்வு தராமக் கூடப் போகலாம்னு நிலை வந்துட்டா,, அதே போல ஓர் குற்றவுணர்வு வேறேதும் மிஞ்சாதுல? சோ! நிறைய மனுஷங்களையும் நிறைய நல்லவைகளையும் சம்பாரிச்சி வச்சிக்கிறது தவிர, வேறென்ன இந்த வாழ்வுல பெரும் ஆத்ம திருப்தி இருக்கப் போவுது.

advertisement by google

Related Articles

Back to top button